வயசு இதுக்கு முக்கியமில்லை Climax 73

டேய் பொறுக்கி! தனியா குளிச்சா கூட சீக்கிரம் முடிஞ்சிடும்! ஒண்ணா குளிச்சா என்னாவும்னு எனக்கு தெரியாது? ராஸ்கல் என்று கொஞ்சினாள்?!

அப்டி என்னாவும் லாவி என்று லாவண்யாவின் கழுத்தில், மூக்கால் உரசினாள்!

ம்ம்ம்.. திரும்பத் திரும்ப, என்னை குளிக்க வெச்சிட்டே இருப்ப! திருடா!

ஹா ஹா ஹா!

எப்படியோ ஒரு மணி நேரமாய் குளித்தவர்கள், சீக்கிரம் ரெடியாகி, மீட்டிங் ஹாலை அடையும் போது மணி 11.30.

வாசலிலேயே அவர்களுக்காக GM ரெடியாக இருந்தார்!

எந்த இஷ்யூ அங்கிள்? ஏன் என்கிட்ட முன்னமே சொல்லலை?! என்று கேட்டுக் கொண்டே அவருடன் நடந்தார்கள்!

பெரிய இஷ்யூதான் மதன்! ஆனா, ஆஃபிஸ் இஷ்யூ இல்ல?! உன் லைஃப் பிரச்சினை! உனக்கு நல்லதா ஒரு ஆளு பாக்கனும்னு நினைச்சிட்டிருந்தேன். இன்னிக்கு சால்வ் ஆகிடுச்சி!

சீரியாசாக சொன்னவரின் அர்த்தத்தை உணரும் சமயத்தில், அவர்கள் மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்திருந்தார்கள்!

அவர்கள் உள்ளே நுழைந்த உடன், அங்கிருக்கும் அனைவரும் கை தட்ட ஆரம்பித்திருந்தனர்!

என்ன நடக்கிறது என்று ஆச்சரியமாய் பார்க்கையில், மேடையில் இருந்து நன்கு பரிச்சயமான குரல் கேட்டது!

லேடீஸ் அண்ட் ஜெண்டில்மென், ப்ளீஸ் வெல்கம் அவர் லவ்லி கப்பிள், மிஸ்டர் மதன் அண்ட் மிஸ் லாவண்யா!

Madhan may be your boss! But, please beware, Lavanya is going to be madhan’ boss! (மதன் உங்களுடையா பாஸாக இருக்கலாம்! ஆனா, லாவண்யா, உங்க பாஸுக்கே பாஸாக இருக்கப் போகின்றாள்!)

கைதட்டல், உச்சத்தை அடைந்தது!

முதலில் ஆச்சரியப்பட்ட மதனும் லாவண்யாவும், பின் அனைவருக்கும் விஷயம் தெரிந்ததில், வெட்கமடைந்தார்கள்!

லேசான சிரிப்பு, லேசான் கோபம், லேசான வெட்கம் என்று கலவையாக இருந்த லாவண்யாவை, மேடையிலிருந்து இறங்கி வந்து அணைத்துக் கொண்டாள், அவளுடைய தோழி, மதனுடைய அக்கா! (கடைசி வரைக்கும் பேரைச் சொல்லலியே?! பாரேன்!)

உள்ளுக்குள் வெட்கப்பட்டாலும், எப்பொழுதும் போல் சமாளித்து நின்றவனை, தோளோடு சேர்த்தணைத்தான் ஹரீஸ்!

எப்டி மாப்ள, ஒண்ணுமே தெரியாதவனாட்டம் நிக்குற?! என்று ஓட்டினான்!

அந்த அலுவலகத்தில் வைஷாலிக்கு மட்டும்தான் லாவண்யாவின் முழு கதை தெரியும்! செக்ரட்டரியாக வந்து, லாவண்யா, மதனை மயக்கிவிட்டாள் என்று யாரேனும் சந்தேகப்பட்டிருந்தால், மதனுடைய அக்காவிற்க்கும், லாவண்யாவிற்கும் இடையேயான அன்புப் பிணைப்பும், ஹரீசிடம், லாவண்யா பேசிய விதமும், அந்த 4 பேரின் சந்தோஷமும் எல்லா சந்தேகங்களையும் களைந்திருந்தது!

இதெல்லாம் உன் வேலையாடி? எப்படி வந்த???

அடிங்க… நேத்து வரைக்கும் ஒப்பாரி வெச்சிட்டிருந்த. மதன் கூட சேந்த உடனே ஃபோன் பண்ணனும்னு தோணலீல்ல? பேசாத நீ?!

நான் ஃபோன் பண்றேன்னு சொன்னேன்க்கா! அதுக்கு இவதான், நாம ஃபோன் பண்ணலைன்னாலே, நாம இங்க சேந்துட்டோம்னு அவளுக்கு தெரியும்! சந்தோஷப்படுவா?! அவளே கால் பண்ண மாட்டான்னு சொன்னாக்கா என்று பாவமாய் முகத்தை வைத்து லாவண்யாவை மாட்டி விட்டான், மதன்!

முறைத்த லாவண்யாவைப் பார்த்து, மாட்டுனியா என்று கண்ணடித்தான்!

ஆனால், அவன் அக்காவோ, நீ பேசாதடா! கல்யாணம் ஆவுறதுக்கு முன்னாடியே, அவ சொன்னான்னு, ஃபோன் பண்லீல்ல? என்ன இருந்தாலும் அக்கா என்ன நடந்துச்சின்னு தெரிஞ்சிக்க நினைப்பாங்க, அதுனால நான் ஃபோன் பண்ணிடுறேன்னு சொல்லியிருந்தா நீ நல்லவன்! அவ சொன்னவுடனே, மண்டையை ஆட்ட ஆரம்பிச்சிட்டீல்ல என்று லாவண்யாவுடன் ஜோடி சேர்ந்தாள்!

அவ்வளவு பெரிய பிசினஸ் மேக்னட், இந்தச் சப்பை விஷயத்தில், இரு அழகான ராட்சசிகளை சமாளிக்க முடியாமல், ஆ வென்று முழித்தான்!

எப்டி மாமா என்று ஹரீசை அவன் துணைக்கழைக்க…

அவனோ, பேசாம சரண்டராயிடு மாப்ள… வேற வழியில்ல என்று சிரித்தான்!

லாவண்யா சொன்னது சரிதாண்டா! ஃபோன் வராதப்பவே, எனக்கு சந்தோஷம் பிடிபடலை! இதுக்கு மேலியும் விஷயத்தை தள்ளிப் போடக் கூடாதுன்னுதான், நைட்டோட நைட்டா, கிளம்பி வந்துட்டோம்! இல்லாட்டி, இதை அனவுன்ஸ் பண்றதுக்கு லேட் பன்ணுவீங்க! அதான் இந்த சர்ப்ரைஸ்?!

ஒருவரையொருவர் சீண்டிக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்த அந்த நால்வரது மனதிலும், மகிழ்ச்சியும், ஒரு நிம்மதியும், நிறைவும், சந்தோஷமான எதிர்காலத்தை சந்திக்கப் போகும் ஆவலும் இணைந்து காணப்படது. அது அவர்களுடைய முகத்திலும், சிரிப்பிலும் வெளிப்பட்டது!

ஹா ஹா ஹா ஹா!

முடிந்தது!