அந்த பயல் டேனிக்கு அடிச்சுது லக்கு – Part 1 77

″சொல்லறதை கேளுங்க அம்மா. நீங்க இங்க வந்து சேருங்க! ஏன் தான் நீங்க அங்க தனியா கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கீங்களோ..! இங்க பெரிய பெரிய டாக்டர் எல்லாம் இருக்காங்க.. பெரிய பெரிய ஹாஸ்பிட்டல் எல்லாம் இருக்கு.. இங்க வந்தீங்கன்னா சீக்கிரமா குணம் ஆயிடும்..”
“இல்லப்பா.. நமக்கு வெளியூர் எல்லாம் சரிப்பட்டு வராது.. ஏதோ இன்னும் இருக்கிற கொஞ்ச காலத்தை நான் இங்கேயே கழிச்சுடரேன்..கடவுளே..”
“என்னம்மா பேசறீங்க நீங்க.. உங்களுக்கு என்ன வயசாயிடுசின்னு இப்படி பேசறீங்க.. என்ன 38 இல்ல 39 இருக்குமா? அவ்வளவு தானே அதுக்கு போயி ஏன் இப்படி அலட்டிக்கிறீங்க.. சொன்னா கேளுங்க.. நீங்க ஏன் தான் அங்கே தனியா அல்லல் படறீங்கன்னு எனக்கு தெரியலை..”
“நான் அங்க வந்துட்டேன்னா.. இங்க வீட்டை எல்லாம் யாரு பார்த்துக்குவாங்கப்பா..”
“அட போம்மா.. நம்ம சொந்தகாரங்களை யாரயாவது ஒரு ரெண்டு மூணு மாசம் பார்த்துக்க சொன்னா பார்த்துக்கிறாங்க.. வீட்டை யாராவது தூக்கிக்கிட்ட போக போறாங்களா என்ன..?!”
“ஆனா இவ்வளோ தூரம் எப்படிடா தனியா வரது.. நினைச்சாலே பயமா இருக்குது..”
“அத பத்தி எல்லாம் நீங்க கவலை பட வேணாம்.. இங்க என்னோட பிரண்டு ஒருத்தர் இந்தியா வந்து இருக்கார். அவர் இன்னும் ரெண்டு வாரத்தில அங்க இருந்து இங்க திரும்ப வரார்.. நான் அவர் கிட்டே போன் பண்ணி சொல்லிடறேன்.. அவர் உங்களை சென்னையில இருந்து பத்திரமா கூப்பிட்டு கிட்டு வருவார்.. என்ன சரியா..? அது சரி.. நான் முன்ன சொன்ன மாதிரி விசா எல்லாம் ரெடியா எடுத்து வச்சு இருக்கீங்களா இல்லையா..?
“அதெல்லாம் ரெடியா தான் இருக்குது.. ஆனா எனக்கு தான் பயமா இருக்குது..”
“அதெல்லாம் நீங்க கவலை படாதீங்க.. நான் பார்த்துகிறேன்.. என்ன? வச்சிடட்டுமா?.. பை… குட் நைட்ம்மா..”
ஒரு வழியாக போனை வைத்தான், ஆதி. “ச்சே.. இந்த அம்மா ஏன் தான் இப்படி பயந்து சாகிறாங்களோ..!” என்று எண்ணிக்கொண்டே அவன் படுக்கையை விட்டு எழுந்தான். அவனது நினைவுகள் பின்னோக்கி ஓடின…
ஆதி பிறந்து வளர்ந்தது எல்லாம் தாம்பரத்தில் தான். அவனது முழுப்பெயர் ஆதிகேசவன். அனைவரும் அவனை “ஆதி.. ஆதி” என்று சுருக்கமாக தான் கூப்பிடுவார்கள். அவனது குடும்பத்தில் அவனை தவிர அம்மா, மற்றும் அப்பா மட்டுமே. ஆதியின் அப்பா ரயில்வேயில் சிவில் இன்ஞ்சினியராய் வேலைப் பார்த்து வந்தார். கை நிறைய சம்பளம், சொந்த வீடு. மேல் போர்ஷை வாடைகைக்கு விட்டு இருந்ததாலும் அதில் இருந்து கூடுதல் வருமானம் வர, வசதியாக தான் இருந்தார்கள். ஆதியின் அம்மாவும் அப்பாவும் முதன் முதலில் தாங்கள் படித்த பொறியியல் கல்லூரியில் தான் சந்தித்துக்கொண்டார்கள்! இருவரும் தங்களின் வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துக்கொண்டார்கள். ஆதியின் அம்மா பொறியியல் டிகிரி பெற்று இருந்தாலும், வீட்டில் தான் இருந்தாள். வீட்டில் என்னேரமும் ஒரே கூத்தும் கும்மாளமும் தான். ஆதியின் அப்பாவும் அம்மாவும் அவன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்கள். குறிப்பாக ஆதியின் அம்மாவுக்கு அவன் மேல் பிரியம் அதிகம்.
“டேய் ஆதி நீ பார்க்கிறதுக்கு உங்க அப்பாவை உரிச்சி வைச்சியிருக்கிறே!” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பாள். ஆதியின் அப்பாவுக்கும் அவனது அம்மாவின் மேல் அளவு கடந்த ஆசை. இருக்காதே பின்னே? ஆதியின் அம்மா ஒரு அழகு தேவதை ஆயிற்றே! அவர்கள் இருவரும் எப்போதும் ரொமான்ஸில் தான் இருப்பார்கள். அவர்களுக்கு மூடு வந்து விட்டால்,
“ஏய் பையா.. நான் அம்மாவை கொஞ்சனும்.. நீ கொஞ்சம் வெளியே போய் விளையாடு..” என்று அப்பா ஆதியை செல்லமாக விரட்டுவார்.
“ஐய்யோ குழைந்தைய போய் எதுக்கு விரட்டரீங்க.. நீங்க ரொம்ப மோசம்..” என்று அவனது அம்மா வெட்கி சிவந்து போவாள். ஆதியும், ஏதோ புரிந்ததும் புரியாததுமாய், தலையை ஆட்டிக்கொண்டே, சிரித்த படியே வெளியே ஓடி விடுவான்.
இப்படி இன்ப மயமாக இருந்த அவர்களது குடும்பத்தில் எதிர்பாராத விதமாய், அந்த துயர சம்பவம் ஏற்பட்டது. ஆதிக்கு பத்து பன்னிரண்டு வயதாகும் போது அப்பா ஒரு ரயில் பாலம் கட்டும் பணியில் ஈடுப்பட்டிருந்த போது, அரைக்குறையாய் கட்டப்பட்டு இருந்த பாலம் இடிந்து அவர் தலையில் விழ, அவர் காலமாகி போனார். ஆதியின் அம்மா இடிந்து போனாள். எப்போதும் சிரித்து மகிழ்ச்சியுடன் காணப்பட்ட அவளின் முகம் சதா அழுது அழுது கவலை தோய்ந்து காணப்பட்டது. அவள் சோகமே உருவாகி நின்றாள். தினமும் அவள் ராத்திரியில் அழும் ஓசை ஆதிக்கு கேட்கும். ஆதியும் ஆறுதலுக்காக அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டு அவளை கட்டிக்கொள்ளுவான்.