அதற்கு பின், வெளியே எங்காவது ஜெயந்தி கண்ணில் பட்டால், “ஹலோ, எப்பிடி இருக்கீங்க, கண்லயே படல்லயே. ஹவ் டூ யூ டூ.” போன்ற சம்பிரதாயப் பேச்சுக்கள். மாதம் தவறாமல் நான் வாடகை வாங்கப் போவேன். ஜெயந்தியை தரிசனம் செய்து அவள் கைகளால் காபி குடித்து வருவேன். ஜெயந்தி இரட்டை சகோதரிகளில் ஒருத்தி. அவள் சகோதரி வசந்திக்குத் திருமணம் முடிந்து ஹைதராபாதில் இருப்பதாகச் சொன்னார்கள். அண்ணன் ஒருத்தன் அமெரிக்காவின் இருக்கிறானாம். வீட்டில் வயதான அம்மா, அப்பா, ஜெயந்தி மட்டும் தான். அப்பா சகஜமாகப் பழகினார். தம் அடித்தார். எனக்கும் சிகரெட் கொடுத்து இருவரும் தம் அடித்து அரட்டை அடிப்போம். ஜெயந்தியும் சில நாட்கள் அரட்டை அடிப்பாள். சரியான புத்தகப் புழு அவள். திருவல்லிக்கேணியில் ஏதோ ஒரு லைப்ரரிக்கு அடிக்கடி சென்று தலையணைப் போன்ற புத்தகங்கள் கொண்டு வந்து விடாமல் படிப்பாள். தத்துவம் எல்லாம் பேசுவாள்.
ஒரு நாள் அவர் தன் மனைவியோடு எங்கள் வீடு வந்து திருமணப்பத்திரிக்கை வைத்துக் கொடுத்தார். ஜெயந்திக்கு பம்பாயில் ஒரு வரன் பார்த்து நிச்சயம் செய்திருந்தார்கள். எனக்கும் ஜெயந்தி மீது ஒரு விதமான கண் இருந்தாலும், and i was helpless. திருமணத்துக்கு சென்று மூக்கு பிடிக்க தின்று விட்டு வரத் தான் முடியும். அதன் பின்னர் சில மாதங்கள் ஜெயந்தியை மறந்துவிட்டேன். நான் தான் அதற்குள் ஜெயஸ்ரீ மீது மோகம் கொண்டு, ஜெயஸ்ரீ, உமா, ஹேமலதா எல்லோருக்கும் கள்ளக்காதலன் ஆகி வாழ்க்கையை அனுபவித்து
வந்தேனே.
ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு பால் கவர் வாங்கி வரும் சொக்கம்மாக் கிழவி என் அம்மாவிடம் ஊர் வம்பு பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு அதிர்ந்தேன். “அதாம்மா, அந்த பக்கத்து ப்ளாட்டுல மூணாம் நம்பர்ல இருக்குதுங்க இல்ல ஐயமாருங்க. அவங்க வீட்டு பொண்ணு திரும்ப பொறந்த வூடு வந்திருச்சாம். புருசனோட என்னவோ சண்டையாம். ஒன் சங்கதியே வேணாம்னு புருசனோட சண்ட போட்டுக்கிட்டு வந்திச்சாம்.”
“யாரு சொக்கம்மா, பெரிய பொண்ணா.” என்று அம்மா கேட்டாள்.
பெருசு என்ன சிறுசு என்னம்மா, ரெண்டும் ரெட்டப்பெறவிதான. ரெண்டாவதா மூணு மாசத்துக்கு முன்னால கண்ணாலம் ஆச்சேம்மா. அதுதான், பேரு கூட என்னவோ சொன்னாங்களே, ம்ம் அக்காங் அத்தான் செயந்தி. அதுதாம்மா, திரும்பி பொறந்த வூட்டுக்கே வந்திச்சி. திரும்பவும் போகாதாம் புருசன் வூட்டுக்கு.” என்றாள் கிழவி.
“என்னவோ இந்தக் காலத்து பொண்ணுங்க புசுக்குன்னா புருஷன விட்டு வந்துருதுங்கள்.” என்று தீர்மானமாக அம்மா என்னை ஓரக் கண்ணால் பார்த்துச் சொன்னார்கள். என் கதை கூட அம்மாவுக்கு அரசல் புரசலாக தெரிந்திருக்க வேண்டும். அவ்வப்போது உமா, ஜெயஸ்ரீ பற்றியெல்லாம் காரசாரமாக திட்டுவது என் காதில் விழத்தான் செய்தது. இப்போது எனக்கு புது செய்தி. ஜெயந்தி மறுபடியும் வந்து விட்டாளாமே.
