மோஹனா டார்லிங் – கடைசி பதிவு 125

“சொல்லுறேன் கேளு. அவர் என் மூத்த மாமா அப்பொய்ண்ட் செய்த வக்கீல். மாமா வீட்டை விட்டு போனபின் அந்த பெண்ணை கல்யாணம் செய்து பெங்களூரில் வசித்து வந்தார். அவர் மனைவி ஒரு ஆக்சிடெண்டில் கல்யாணம் ஆகி இரண்டு வருடத்துக்குள் இறந்து விட்டாராம்”

“அவர் அதற்க்கு பின் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு குழந்தை பாக்கியமும் இல்லை.” “அவர் ஒரு தொழில் துவங்கி ரொம்ப வசதியாக இருந்தாராம்.” “அவருக்கு சில மாதங்களுக்கு முன் நாலாவது ஸ்டேஜ் கான்செர் என்று கண்டுபிக்க ப்பட்டது.” “ரொம்ப முத்தி போன நிலையில் கண்டுபிடிக்க பட்டது.”

இதை ஆச்சிரியமாக கேட்டு கொண்டிருந்தேன். “பிறகு என்ன ஆச்சி?”

“அவர் இறந்துவிட்டார்.”

“அய்யயோ,” நான் ஷாக் ஆனேன்.

“அவர் இறக்கும் முன் அவர் பிஸ்னெஸ்ஸை பல கோடி ரூபாய்க்கு வித்துவிட்டார். அதில் பாதி என் அம்மாவுக்கும் பாதி அவர் தம்பிக்கும் உயில் எழுதி வைத்திருந்தார்.”

“நாங்கள் எல்லோரும் அவசரமாக பெங்களூர் சென்றோம். அவர் உடல் அங்கே ஒரு தனியார் மருத்துவமனை மார்ச்சுஏறியில் (mortuary) இருந்தது.”

“அவருக்கு ஒரு பங்களா அங்கே இருந்தது. எல்லா இறுதி சடங்கும் அங்கே தான் செய்தோம். எல்லா ஏற்பாடும் அவர் வக்கீல் செய்தார். இன்று மத்தியானம் தான் வீடு திரும்பினோம்.”

“ஏங்க இதை பற்றி ஒன்னும் என்னிடம் சொல்லுல?”

“எல்லாமே அவசரத்திலும், பதற்றத்தில் நடந்தது, எதுவும் சரியாக சிந்திக்க முடியில.”

அவருக்கு இது நடந்ததில் எங்கள் அணிவர்சரி மறந்துவிட்டார். சோ அதற்காக அவர் என்னை கூப்பிடல.

“அம்மா சொல்லிட்டாங்க உடனே உன்னை ரிசைன் பண்ணிவிட்டு இங்கே வரச்சொல்லி. இனிமேல் நீ சம்பாரித்து காசு சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை.”

இந்த வார்த்தைகள் கேட்டு என் தலையில் இடி போல் விழுந்தது. நியாயப்படி இதை கேட்டு சந்தோஷ பாடணும் அனால் இப்போது கவலையாக இருந்தது. எதோ ஒன்றை இழக்க போகிறோம் என்ற உணர்வு. இதுவே சில மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் அனால் இப்போது ஒன்றை பறிகொடுக்க போகிறேன் என்ற கவலை.

“நீ எத்தனை மாதம் நோடீஸ் கொடுக்கணும்?”

அவர் கேட்கும் கேள்வி என் காதில் விழவில்லை, அவர் மறுபடியும் அதை கேட்டபின் தான் சுதாரித்துக்கொண்டு பதில் சொன்னேன்

“இரண்டு மாதம் நோடீஸ், அனால் ரிபிளேஸ்மென்ட் கிடைத்தால் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுவார்கள்.”

“அப்படினா நாளைக்கே நோடீஸ் கொடுத்துரு.”

“சரிங்க.”

“இதை கேட்டால் ரொம்ப மகிழ்ச்சி படுவ என்று நினைத்தேன் ஏன் உன் குரல் சோகமாக இருக்கு?”

அய்யயோ நம்ம மனதில் இருப்பதை வெளி காட்டிட்டோமே. “அப்படி எதுவும் இல்லை, இது எல்லாம் பெரும் ஷாக்காக இருக்கு அவ்வளவு தான்.”

“அப்படி தெரியலையே. உன்னை நல்ல எனக்கு தெரியும் என்ன விஷயம் சொல்லு.” அவர் குரலில் ஒரு சிறு சந்தேகம் இருப்பதுபோல் தோன்றியது.

என்னை பற்றிய ஒரு பெரிய விஷயம் உங்களுக்கு எதுவும் தெரியாது என்று மனதில் நினைத்துக் கொண்டேன். இவர் விடமாட்டீங்கிறார் இவர் சந்தேகத்தை என்ன சொல்லி போக்குவது. அப்போது ஒரு யோசனை வந்தது.

“சரி நீங்க வற்புறுத்தி கேக்கிறதால் சொல்லுறேன். உங்களுக்கு தெரியாத நான் ஏன் சோகமாக இருக்கிறேன்?”

“என்னடி சொல்லுற? ஏன்? எனக்கு ஒன்னும் புரியலையே.”

“உங்களுக்கு என்ன தான் புரிந்திருக்கு,” இதை நான் என்ன மனதில் கருதி சொன்னேன் என்ற உல் அர்த்தம் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை, “இன்றைக்கு என்ன நாள் என்று நினைவிருக்கா?”

2 Comments

  1. Not like story because raja in mohana is a better couples but raja on mohana married in story is better

  2. Fantastic.. Good ending…

Comments are closed.