சத்தம் போடாதே – 4 79

“மேகா அவங்க உயிர் வாழணும்னா நீ ப்ரோப்லேம் பண்ணாம ஒழுங்கா வா. டாடிக்கு கோவம் வந்தா என்ன நடக்கும்னு உனக்கு தெரியும். ஐ வில் கில் தேம் போத். யு ஹவ் 5 செகண்ட்ஸ்”

எனது அப்பா எனக்கு வெறும் 5 நொடி கொடுத்து இருந்தார். 5 நொடி முடிவதற்குள் நான் போகவில்லை என்றால் அவர்கள் இருவரையும் கொன்றுவிடுவார் என்பது எனக்கு நன்றாக தெரியும். அருண் என் கணவன் என்பதை யாராலும் மாற்ற முடியாது என்பது எனக்கு தெரியும். உயிரின் பிரிவை விட இந்த தற்காலிக பிரிவு ஒன்றும் கொடியது அல்ல என்பதால் “லிவ் டு பைட் அனதர் டே” என்று அழுது கொண்டே சொல்லிவிட்டு இறங்கினேன்.

“பாப்பா இறங்கிட்டாங்க” என்று சொல்லி கொண்டே ஒரு குண்டன் என் கூடவே வந்தான் மற்ற அனைவரும் கார்த்திக் அருண் இருவரையும் சுற்றி வளைத்தனர்.

“மேகா டாடி பேச்சை கேட்டு இறங்கி வந்ததுக்கு தேங்க்ஸ் டியர். நான் எப்படி இவளோ பெரிய பதவிக்கு வந்தேன் தெரியுமா. ஒரு விஷயத்தை கையில எடுத்தா அதை வெற்றிகரமா முடிச்சிடுவேன், வித்தவுட் எனி கம்பரோமைஸ். ஆனா என்னோட பொண்ணு கல்யாணத்தை முடிக்க முடியல பாரு டியர். நீ என்னடானா ஓடி போய் அவனை திருட்டு கல்யாணம் பண்ணிகிட்டே. ஐ லாஸ்ட் டு காப்பில் ஒப் கிட்ஸ், எவளோ அசிங்கமா போச்சு தெரியுமா. அதுக்கு இப்போ என்ன பண்ணலாம்”

“டாட் யூ ப்ரோமிஸ்ட் தட் யு வோண்ட் ஹார்ட் தெம்”

“நோ டியர். நீ வரலைன்னா ரெண்டு பேரையும் கொன்னுடுவேன்னு சொன்னேன். நீ வந்துட்டே சோ ஐ திங்க் ஒன் சுட் பி எனப். லவ் பண்ணுற பையனா வேணுமா இல்லை அவனுக்காக எதையும் செய்யுற பிரெண்டா. யு ஹாவ் 5 செகண்ட்ஸ்”

5
4

“டாட் பிலீஸ் நோ” கதறி அழுதேன்.

3
2
1

“நானே சூஸ் பண்ணிக்கவா டியர். உனக்கு தாலி கட்டியவனை நான் பார்த்ததே கிடையாது. ஆனா என் கண்ணுல விரலை விட்டு ஆடிட்டு உன்னை தூக்கிட்டு போனவனை என்னாலே மறக்கவே முடியாது”

“டாட் பிலீஸ்…”

“மேகா மேகா..” தூரத்தில் அருண் கத்தினான்.

“என் கண்ணுல மண்ணை தூவினவன் உயிரோடு இருக்கவே கூடாது. டேய் பாப்பாவை தூக்கிட்டு போனவன் கதையை முடி. இன்னொருத்தன் உயிர் மட்டும் இருக்கணும். என்ன புரியுதா”

“ஹ்ம்ம் புரியுது ஐயா”

“டாட் நோ….”

அந்த குண்டன் காரை சுற்றி வளைத்த குண்டர்களிடம் சிக்னல் கொடுக்க இவன் நான் பார்க்காதவாறு மறைத்து கொண்டான்.

“கார்த்திக் ஓடிடு” என்று சத்தமாக கத்தினேன்.

“மேகா” அருணின் குரல்.

“கார்த்திக் ஓடுடா”

“மேகா” மீண்டும் அருணின் குரல்.

“டுமீல்” துப்பாக்கி சுடும் கேட்டது.

“கார்த்திக்…. டேய் அவனை ஏண்டா சூட் பண்ணீங்க” அருணின் ஓலம் கேட்டது.

குண்டன் நான் உட்கார்ந்து இருந்த காரை கிளப்ப கார்த்திக் அங்கே காருக்கு வெளியே பிணமாக கிடந்தான். அருணை காரில் இருந்து வெளியே இழுத்தனர்.

“அருண்..”

“மேகா..”

“அருண்…”

இருவரின் ஓலமும் அந்த குண்டர்களை ‘அசரவைக்கவில்லை. அருணை வெளியே இழுத்து அடிக்க தொடங்கினர்.

“அருண்…”

“அருண்…”

பார்வையில் இருந்து மறையும் தூரம் சென்று இருந்தேன். வீட்டிற்கு வருவதற்குள்ளாக அழுதழுது கண்ணீரே வறண்டு போய் இருந்தது.

“மேகா திரும்பி அந்த பய்யன் அருண் கூட சேரணும்னு முடிவு பண்ணினா அவனையும் கொன்னுடுவேன்” என்று அப்பா என்னை மிரட்டி வீட்டில் அடைத்து வைத்தார். அருணுடன் மீண்டும் எப்படியும் ஒன்று சேருவேன் என்கிற அந்த ஒரு நம்பிக்கை தான் என்னை தற்கொலையை செய்ய விடாமல் சென்றது. நாட்கள் கடக்க, அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்கிறேன் என்று சொல்லி அவர்களின் சொல்பேச்சை கேட்க ஆரம்பித்தவுடன் வீட்டிற்குள்ளே நடமாட இடம் கிடைத்தது. அந்த நேரத்தில் நான் ஆஃப்லை செய்த ஒரு அமெரிக்கன் யூனிவெர்சிடியில் அட்மிசன் கிடைக்க என்னுடைய கசின் உதவியுடன் லண்டனில் நான் முன்பு ஆஃப்லை செய்த கல்லாரியில் சேர போவதாக பொய் சொல்லிவிட்டு லண்டன் வழியாக அமெரிக்கா வந்து வேலை பார்த்து கொண்டே படிக்க தொடங்கினேன்.

5 Comments

  1. Super Story Pa appadiye மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 13 Please ?

  2. சூப்பர் கதை

    1. சூப்பர் கதை

  3. இந்த கதை நண்பன் அவன் எந்த தியாகம் செய்வான். காதலி அவள் எதிர்கால வாழ்க்கை நீர்னைக்கிராள் கதை அருமை

Comments are closed.