சத்தம் போடாதே – 4 79

“இதுக்கு என்ன காரணம் டாக்டர்”

“ஜெனெடிக்ஸ், அதீத தனிமை இல்லைன்னா ரொம்ப க்ளோஸ் ஆனவங்களோட டெத் கூட ரீசனா இருக்கலாம். நம்ம ஊருல இருக்க கிராமங்களல்ல எல்லாம் ஏதாச்சும் சாவு விழுந்தா கும்பலா கூடி ஒப்பாரி விட்டு அழுவாங்கா அது துக்கத்தில் இருக்கவங்களோட ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும். இப்போ அழறதுக்கு கூட யாருக்கும் டைம் கிடையாது. பீர் ப்ரெஸ்ஸார், ஒர்க் ப்ரெஸ்ஸார்னு எக்க சக்க பிரச்னை எல்லாம் போட்டு மனசுல வச்சி புழுங்கிட்டு இருந்தா ப்ரைன் வேற என்ன பண்ணும்.”

எனக்கு இப்போது ஓரளவுக்கு விளங்கியது. கார்த்திக் அருண் கண்ணெதிரே சுட்டு கொல்லப்பட்டது அவன் மனதில் நீங்கா துயர் ஆகி இருக்க வேண்டும். அவன் அம்மாவின் அரவணைப்பு இருந்தவரை அவனால் இந்த உலகை ஏற்று கொள்ள முடிந்தது. அம்மா இறந்த பிறகு இவனே கார்த்திகை கற்பனையில் உருவாக்கி கொண்டு இருக்கிறான்.

“இப்படி ஒரு வியாதி இருக்குன்னு அருண் கிட்ட சொல்லலாமா”

“ஓஹ் எஸ். நிறைய பேசண்ட்ஸ் ஆரம்பத்துல மறுத்து உண்மையா அக்செப்ட் பண்ணிகிட்டு வாழ காத்துக்கிட்டவங்க நிறைய பேரு”

“அப்போ இதை குணமாக்க முடியுமா டாக்டர்”

“இதுக்கு மருந்து மாத்திரை எல்லாம் கிடையாது அன்பும் அரவணைப்பும் தான் மருந்து. அமெரிக்கால ஜான் நாஷ் அப்டிங்கறவரு இந்த வியாதியை வச்சிக்கிட்டு நோபல் ப்ரைஸ் கூட வாங்கி இருக்காரு. சோ எனிதிங் இஸ் பாசிபிள். டோன்ட் லூஸ் ஹோப்”.

“தேங்க்ஸ் டாக்டர்”

பக்கத்து ரூமில் அருண் மயக்கம் தெளிந்து படுத்து இருந்தான்.

“மேகா. நான் எப்படி பெட்ல வந்தேன்”

“லேசா மயக்கம் ஆகிட்டே அருண். நத்திங் டு ஒற்றி. முதல் முதல்ல என்னை வச்சி ப்ரோபஸ் பண்ணியே ஒரு இடம் ஞாபகம் இருக்கா”

“ஹ்ம்ம்”

“அங்கே என்னை கூட்டி போறியா”

“இப்போவா”

“ஹ்ம்ம்”

அங்கிருந்து கிளம்பி விடியற்காலையில் அருண் என்னை முதன் முதலாக காதலை சொல்லி முத்தம் கொடுத்த அந்த இடத்திற்கு சென்றோம்.

“ஐ லவ் யு அருண்” கட்டி பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்தேன்.

“நான் உன்னை அன்னைக்கு விட்டு போயிருக்க கூடாதுடா. இனிமேல் எப்பவுமே உன்னை விட்டு போக மாட்டேன்” அவனின் கையை கோர்த்துகொள்ள சூரியன் உதித்தது.

“அருண், என் கூட வா” என்று அவனை அங்கிருந்து கூட்டி கொண்டு என்னுடைய கசினின் அபார்ட்மெண்டிற்கு கூட்டி போனேன். கதவை திறந்தவள் எங்கள் இருவரையும் பார்த்து புன்முறுவல் செய்துவிட்டு ஜாகிங் போவதாக சிக்னல் செய்துவிட்டு சென்றாள்.

“மேகா இங்கே எதுக்கு கூட்டி வந்தே” அருண் கேட்டான்.

“வா” என்று பெட்ரூம் உள்ளே கூட்டி போனேன்.

அங்கே தூங்கி கொண்டு இருந்த குழந்தையை பார்த்து யார் என்று கேட்டான் அருண்.

“உன் குழந்தை.. நம்மோட குழந்தை. இவன் எங்க அப்பா கண்ணுல பட கூடாதுன்னு நான் அமெரிக்காவில் ஓடி ஒளிஞ்சிகிட்டேன். நான் உன்னை பிரிஞ்சி இருந்தாலும் உன்னை நினைக்காத நாளே கிடையாது அருண்” சொல்லும் போதே என் கண்கள் கலங்க அருண் துடைத்துவிட்டான்.

சத்தம் கேட்டு குழந்தை எழ என்னை பார்த்தவுடன் “மம்மி” என்று ஓடி வந்தான்.

பக்கத்தில் நின்ற அருணை பார்த்து இது யாரு மம்மி என்றான் “நான் தான் உன்னோட டாடி” என்று அருண் அவனை தூக்கி எக்கச்சக்கமாக முத்தமிட்டான். முத்தமிட்டு கொண்டு இருக்கும் போதே அவனுக்கு அழுகை பீறிட்டு வர என் மகன் அவன் கண்ணை துடைத்து விட்டு “நான் இருக்கப்போ நீங்க எதுக்கு அழறீங்க” என்றான்.

“அழமாட்டேண்டா கண்ணா.. உன்னோட பேரு என்ன”

“கார்த்திக்”

அருணுக்கு மீண்டும் கண்ணீர் வந்தது.

அருணுக்கு நண்பன் கார்த்திக்கின் இழப்பால் வந்த மனசிதைவு நோய் மகன் கார்த்திக்கின் வரவால் குணமாகிவிடும் என்று தோன்றியது. அவர்கள் இருவரையும் கட்டிக்கொள்ள என்னையும் அறியாமல் ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் உருண்டு ஓடியது.

[சுபம்]

5 Comments

  1. Super Story Pa appadiye மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 13 Please ?

  2. சூப்பர் கதை

    1. சூப்பர் கதை

  3. இந்த கதை நண்பன் அவன் எந்த தியாகம் செய்வான். காதலி அவள் எதிர்கால வாழ்க்கை நீர்னைக்கிராள் கதை அருமை

Comments are closed.