கலாவும் ஷில்பா காதலிக்கிற பையனின் மாமா என்றதும் வயதான ஆளை தான் எதிர்பார்த்து இருந்தாள். ஒரு கவர்ச்சியான வாலிபனை அவள் எதிர்பார்க்கவில்லை. அவன் டைட்டான டீ சர்ட்டிலிருந்து பிதுங்கி நின்ற புஜங்களும், மார்பும், பைசப்களும், டீ ஷர்ட்டில் மேல் பட்டன் போடாமல் இருந்ததால் வெளியே எட்டிப் பார்த்த சில மார்பு முடிகளும் எல்லாமே கவர்ச்சியாக இருந்தன. அவள் இது வரை இப்படி ஒரு கவர்ச்சி அழகனை பார்த்ததில்லை.
வரவேற்று உட்காரச் சொன்னாள்.
“ஷில்பா இன்னைக்கு சாயங்காலம் நீங்க வருவீங்கன்னு சொன்னா….”
சுரேஷ் சொன்னான். “நான் வந்த விஷயத்தை இன்னைக்கு பேச வேண்டாம்னு நினைக்கிறேன். சனிக்கிழமை பேசறது எங்க குடும்பத்துக்கே ராசி இல்லை. அதனால் நாளைக்கு நிதானமா பேசிக்கலாம். சும்மா ஹலோ சொல்லிட்டு போக தான் வந்தேன்.”
இருவரும் தங்கள், தங்கள் குடும்பம் பற்றிய தகவல்களையும் பேசினார்கள். அவன் தன் பிசினஸ் பற்றி சொன்னான். எஸ்டேட் விஷயங்களை அவள் சொன்னாள்.
இருட்ட ஆரம்பித்த பின் சுரேஷ் எழுந்தான். ”இங்கே வால்பாறைல நல்ல லாட்ஜ் இருக்குமா? நான் அங்கே தங்கிட்டு நாளைக்கு பேச வர்றேன்”
“நல்லா இருக்கு நீங்க சொல்றது. எங்க வீட்டுக்கு வந்துட்டு லாட்ஜ்ல தங்கினா நல்லா இருக்காது. நீங்க இங்கயே தங்குங்க. இத்தனை பெரிய வீட்டுல உங்க ஒருத்தருக்கா இடம் இல்ல”
“இல்ல உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்”
“சிரமம் எல்லாம் இல்ல.” என்றவள் அவனை அங்கேயே அன்று தங்க சொன்னாள்.
சுரேஷ் சந்தோஷத்தை காண்பிக்காமல் யோசிச்சபடி தலையாட்டினான். எப்படியோ முதல் படி தாண்டி விட்டான்.
கலாவிற்கு சுரேஷை ரொம்பவும் பிடிச்சு போச்சு. அழகாய் கவர்ச்சியாக இருந்தது மட்டுமல்ல ஜோக்காய் பேசினான். பல விஷயங்களை பேசினான். பக்கத்தில் அவன் இருக்கும் போது மனசு என்னவோ செய்ய ஆரம்பிச்சுது. இது அவளுக்கு புதுசு. இது நாள் வரை எவனையும் நினைச்சதில்லை. ஆனா இவன் மனசை ஏனோ கலக்கினான். அது அவளுக்கு பயமாய் இருந்தது.
Good..
சூப்பர்
Nice