ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 9 37

சந்தியா, “சண்முகம் சாருக்கு வனிதா மேடம் கொண்டு வந்த மாற்றங்களில் ரொம்ப சந்தோஷம் இல்லை சார்?”

விஸ்வா, “எஸ். நான் கூட மத்த மேனேஜர்ஸ் கோ-ஆபரேட் பண்ண மாட்டாங்களோன்னு கொஞ்சம் பயந்தேன். ரொம்ப டாக்டிகலா ஹாண்டில் பண்ணி இருக்கா”

சந்தியா, “எனக்கு மேனேஜ்மெண்ட் பத்தி ஒண்ணும் தெரியாது. இருந்தாலும் அந்த மீட்டிங்கில் நோட்ஸ் எடுக்கும் போது வனிதா மேடம் எப்படி ஹாண்டில் பண்ணி இருக்காங்கன்னு புரிஞ்சு கிட்டேன்”

விஸ்வா, “எப்படி ஹாண்டில் பண்ணி இருக்காங்கன்னு புரிஞ்சுகிட்டே?”

சந்தியா, “ஒரு நல்ல பயனுக்காக சிரமமான எதையும் எதிர்கொள்ளும் மனப் பான்மை அவங்களுக்கு இருக்கணும். அதே சமயம், எதிலும் என்ன செய்ய வேண்டும்ன்னு சொல்லறதை விட அதனால் வரும் பயன்கள் என்னன்னு சொல்லி எல்லாருக்கும் நல்லா புரிய வெச்சு இருக்காங்க. மத்த மேனேஜர்ஸும் அவங்க சொந்த விருப்பு வெறுப்பையும் சிரமத்தையும் பார்க்காம பயனை மட்டும் பார்த்து கோ-ஆபரேட் பண்ணி இருக்காங்க”

விஸ்வா, “அது அவளோட ட்ரேட் மார்க்” என்ற பிறகு மௌனம் காத்தான். பிறகு …

விஸ்வா, “நான் உன் கிட்டே ஒரு பர்சனல் விஷயம் கேட்கணும். தப்பா எடுத்துக்க மாட்டியே?”

சந்தியா, “நீங்க என்ன கேட்கப் போறீங்கன்னு கெஸ் பண்ண முடியுது. சரி, சொல்றேன். ஆனா, நீங்களும் உங்க பர்சனலான விஷயத்தை எனக்கு சொல்லணும்”

விஸ்வா, “பரவால்லை விடு”

சந்தியா, “சார், என் பர்சனல் விஷயம் ரொம்ப கேவலமானது. ஒரு விதத்தில் நீங்க இப்போ கேட்டதை நினைச்சு சந்தோஷப் படறேன். நிச்சயம் என் பர்சனல் விஷயத்தைப் பத்தி தெரிஞ்சுகிட்டா அது உங்களுக்கும் உதவும். அதுக்காகத்தான். நீங்க உங்க பர்சனல் மேட்டரை சொன்னா ஒரு பெண்ணோட கோணத்தில் அதைப் பத்தி யோசிச்சு எனக்குத் தோணினதை சொல்ல முடியும்ன்னு கேட்டேன்”

சற்று நேர யோசனைக்குப் பிறகு விஸ்வா, “சரி. ஓ,கே”

தீர்க்கமாக அவனைப் பார்த்த சந்தியா லேசான புன் முறுவலுடன், “இன்னும் ஒரு கண்டிஷன். கொஞ்ச தூரத்தில் இருக்கும் காஃபீ டேல ஒரு கப்புசீனோ வாங்கிக் கொடுக்கணும்”

விஸ்வா, “ஹே, எனக்கும் காஃபீ குடிக்கணும்ன்னு இருந்தது. A lot can happen over a cup of coffee … வா”

காஃபீ டேவில் ஒதுக்குப்புறமான ஒரு மேசையில் …

விஸ்வா, “ம்ம்ம் சொல்லு”

சந்தியா, “என்ன?”

விஸ்வா, “அன்னைக்கு நீ ஏன் இன்னும் கல்யாணம் செஞ்சுக்காம இருக்கேன்னு கேட்டேன். நீ பர்சனலான விஷயம்ன்னு சொன்னே. அது என்ன?”

சந்தியா, “என்னை யாரும் கல்யாணம் செஞ்சுக்க மாட்டாங்க”

விஸ்வா, “கம் ஆன் சந்தியா. உன் ரெக்கார்ட் படி உனக்கு இப்போ இருபத்தி எட்டு வயசுதான் ஆச்சு. நிறைய பெண்கள் இந்த வயசுக்கு அப்பறம்தான் தான் கல்யாணமே செஞ்சுக்கறாங்க. You are smart and very good looking. ஏன் செஞ்சுக்க மாட்டாங்க?”

சந்தியா, “என் கடந்த காலம் அப்படி. அதை மறைச்சு நான் கல்யாணம் செஞ்சுக்க விரும்பலை”

விஸ்வா, “என்ன?”

14 Comments

  1. Needed story for all.

    1. ஸ்டோரி சூப்பர் ஆனா முடிவு சுபம் இல்லை வனிதா வுக்கு ஒவ்வொரு முறையும் மெஸ்மோரிசம் பன்னுகிற மருந்து கொடுத்து சம்மதிக்க வைத்ததுபோல் காமித்து இறந்துபோன சந்திரசேகர் மேல் பழியைப் போட்டு விசுவாசம் அனிதாவையும் நலமுடன் வாழ வைத்திருக்கலாம் கதை முதலில் அதை போல் தான் சென்றது கடைசியில் கல்யாணம் முடிந்தது ஜீரணிக்க முடியவில்லை ராம் அவளுக்கு கொழுந்தன் இது செக்ஸ்கதைக்கு ஓகே ஆனால் இந்த ஸ்டோரி அதுபோல் இல்லை

  2. Wonderful story I ever read in this platform, it’s not just a story it’s an experience, Thanks for that Author, may I know your profile id for your other stories?

  3. Good decision and nice ending… congrats…

  4. இந்த தளத்தில் பதிவிடுவதற்கான எந்த விடயமும் இல்லாத ஒரு கதை ஆனாலும் அருமை முடிவு சிறப்பு

  5. Wonderful story I ever read in this platform, it’s not just a story it’s an experience, Thanks for that Author, may I know your profile id for your other stories?

  6. இந்த தளத்தில் பதிவிடுவதற்கான எந்த விடயமும் இல்லாத ஒரு கதை ஆனாலும் அருமை முடிவு சிறப்பு

    Superb.Hats off author

  7. Really a wonderful realistic and practical story describing the basic necessities and understanding between the spouses. Is this a real story based on name change?

  8. மிக அருமையான கதை மனோதத்துவ சிகிச்சைகுறித்தும் அதன் பலன் குறித்தும் தெரிந்து கொள்ள முடிகிறது கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சினைக்கும் தவறுகளுக்கும் ஒருவர் மட்டுமே காரணமாக இருந்திட முடியாது எனும் கதையின் மையமாக இருப்பதாக உணர்கிறேன்

  9. Kathainra perla oru anninravanga amma stage la paakanum sex stories la kadaisila avangala panish panratha ninaixhu ram character ah insult panreenga part 2 potu antha vidow vayum ramayum Sethu vainga it’s the real love for anni amma purinjurukum author ku

  10. Story super…ending nalla yille..
    Vishwa vanitha onne seranum..

  11. அருமையான கதை. படித்து மலைத்து போனேன். அருமையான மனோதத்துவம் கலந்த கதை. வனிதா என் மனதில் உயர்ந்து விட்டாள். உண்மைக் கதைப் போல இருந்தது. திரைப்படம் எடுக்க தகுதியான கதை. Karan johar கொத்திக் கொண்டு போகி விடுவார். இந்த கதையின் பாதிப்பில் இருந்து வெளி வர சில தினங்களாகும் என்று நினைக்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Comments are closed.