என் தேவதை – End 197

“நாளைக்கு அக்காள பொண்ணு பாக்க வராங்க”
“சூப்பர். யாரு?”
“எங்க சொந்தம்”
“எத்தனை மணிக்கு வராங்க?”
“காலைல பத்து பதினொரு மணிக்கு”
“ஏய்.. அப்ப நாளைக்கு நாம மீட் பண்ண முடியாதா?”
“அதான் என்ன பண்றதுனு தெரியல. நான் வெளிய வரது ரிஸ்க்தான்”
“நோ.. நீ வருணும்”
“எப்படி? ”
“எனக்கு தெரியாது. நீ வரணும். அவ்வளவுதான்”
“நீங்க வரீங்களா?”
“எங்க? ”
“எங்க வீட்டுக்கு?”
“எனக்கு நோ ப்ராப்ளம்”
“உங்களை பாத்தேனு எங்கம்மாகிட்ட சொன்னேன்”
“ம்ம்.. சொன்னியே”
“அம்மாகிட்ட பேசுறீங்களா?”
“எப்படி? ”
“நீங்க போன் பண்ணீங்கனு… தரேன். பேசுங்க. நாளைக்கு அப்பதான் வர முடியும்”
“சரி குடு”

சிறிது நேரத்தில் போனில் தமிழின் அம்மா பேசினாள்.
“நிரு தம்பி நல்லாருக்கியா?”
“நல்லாருக்கேன்க்கா. நீங்க நல்லாருக்கீங்களா?”
“நான் ரொம்ப நல்லாருக்கேன் தம்பி. உங்கப்பா அம்மா எல்லாம் சவுக்கியமா. பாத்து எத்தனை நாளாச்சு. தமிழ் சொன்னா உன்னை பாத்தேனு”
“ஆமாக்கா. அப்பறம் தமிழோட அக்கா நல்லாருக்குதுங்களா?”
“அவ நல்லாருக்கா தம்பி. நாளைக்கு அவளை பொண்ணு கேட்டு வராங்க”
“அப்படியா? ரொம்ப சந்தோஷம்க்கா”
“வா தம்பி வீட்டுக்கு ”
“எப்பக்கா?”
“நாளைக்கு காலைல.. அம்மாகிட்ட சொல்லு இந்த மாதிரி பொண்ணு பாக்க வராங்கனு. நான் காலைல தமிழ் செல்லுல இருந்து உனக்கு போன் பண்றேன். சரியா?”
“சரிக்கா. நானே கால் பண்றேன்”

மேலும் சிறிது நேரம் பொதுவாகப் பேசிய பின் தமிழின் அக்காவிடம் போன் கை மாறியது. அப்பறம் அவள் அப்பா என்று குடும்பத்தினர் அனைவருடனும் பேசியபின் இறுதியில் தமிழிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு காலை கட் பண்ணினான்.. !!

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு நிருதிக்கு ரூபா கால் செய்தாள். அப்போது அவன் மொட்டை மாடியில் இருந்தான். சூரியன் மறைந்து வானம் மேக மூட்டத்துடன் இருந்தது.
“ஹாய் கருவாச்சி”
“ஹாய் நிரு. என்ன பண்ற?”
“வீட்லடி. நீ என்ன பண்ற?”
“நான் குளிக்க போறேன். நீ தமிழ் வீட்டுக்கு வரலியா?”
“வருவேன். பத்து மணிக்கு மேலதான?”
“ம்ம்.. நானும் குளிச்சிட்டு கிளம்ப பத்து மணி ஆகிடும்”
“உன்னை பிக்கப் பண்ண வரதா?”

6 Comments

  1. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் எப்போ வரும் நெக்ஸ்ட் பார்ட் அட்மின் ????

Comments are closed.