த்ரீ ரோசஸ் 6 55

நான் அந்த சரஸ்வதி ஸ்டில்ஸ் போல்டர்ஸ் எல்லாம் என்னுடைய லேப்டாப்புக்கு காப்பி பேஸ்ட் செய்தேன்..

நடுவில் ஒரு சின்ன எரர் காட்டியது..

அந்த கரப்ட் ஆன வீடியோ பைல் காப்பி ஆகவில்லை..

நான் ஸ்கிப் கொடுக்க.. மற்ற பைல்ஸ் அனைத்தும் காப்பி ஆனது..

நான் மீண்டும் பேன்டிரைவை என் லேப் டாப்பில் இருந்து உருவி எடுத்துவிட்டு சிவா அங்கிள் ரூமிற்கு சென்று அவர் கம்ப்யூட்டர் சி.பி.யு.வில் சென்று சொறுகி விட்டு திரும்பினேன்..

திக் என்றது நெஞ்சு.. கதவோரத்தில் சிவகுமார் அங்கிள் என்னை முறைத்தபடி நின்று இருந்தார்..

ராகவன்

சத்தியம் சிவம் சுந்தரம் மூனு பேரும் துப்பாக்கி முனையில் எங்களை மிரட்டி என்னையும் பிரியா அக்காவையும் ஹால்லில் ஸோபாவில் அமர வைத்திருந்தனர்..

அப்போது ப்ரியா அக்கா திடீர் என்று கத்த.. அவர்கள் மூவரும் அதிர்ந்தனர்..

சத்தியம்.. தான் வந்து .. என்ன ஆச்சி.. ஏன் கத்துற.. என்று பிரியா அக்காவை பார்த்து கேட்டான்..

ஐயோ.. என் தொடை வலி உயிர் போகுது.. என்னால தாங்க முடியல.. ப்ளீஸ் என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்களேன்.. என்று அழுக ஆரம்பித்தாள்..

ப்ரியா அக்கா அழுவதை பார்த்த அவர்கள் கண்களில் கொஞ்சம் இரக்கம் தோன்றியது..

சிவம் பேசினான்.. ஹாஸ்பிட்டல் எல்லாம் கூட்டிட்டு போக முடியாது.. வேணும்னா.. ஏதாவது டாக்டரை இங்கே வர சொல்லி வைத்தியம் பார்க்க சொல்லலாம் என்று சொல்ல..

நான் சென்று டெலிபோன் டைரக்டரியை புரட்டினேன்..

டாக்டர்ஸ் லிஸ்ட் நிறைய இருந்தது..

யாருக்கு போன் செய்வது என்று கொஞ்சம் குழப்பமாக இருந்தது..

சிக் டாக்டர் லிஸ்ட்டில் ஒரு விளம்பரம் நன்றாக அழகாக பெரிய டிஸ்ப்ளே விளம்பரம் செய்து போன் நம்பர் எல்லாம் கொட்டை கொட்டை எழுத்தில் இருந்தது..

(சிக் டாக்டர்ஸ் என்றால்.. ஆங்கிலத்தில் சிக் என்பதற்கு.. உடல் நலம் சரியில்லை என்று அர்த்தம்… இந்த சிக் என்ற பார்த்தைவை நன்றாக நியாபகம் வைத்தக் கொள்ளுங்கள்.. காரணம் இந்த எபிசோடு முடிவில் இந்த சிக் வார்த்தையை வைத்து ஒரு டுவிஸ்ட் உள்ளது)

நான் அந்த நம்பருக்கு டயல் செய்தேன்..

இதோ உடனே வர்றேன் தம்பி என்று ஒரு டாக்டர் உடனே தன் மெடிக்கல் கிட் பையை எடுத்துக் கொண்டு கிளம்புவது எனக்கு போனிலேயே கேட்டது..

போனை வைத்த அடுத்த ஐந்து நிமிடத்தில் டிங் டாங் என்று காலிங் பெல்..

நான் அமைதியாக சத்தியம் சிவம் சுந்தரம் மூவரையும் பார்த்தேன்..

டேய் ராகவா.. போய் கதவ திற.. டாக்டரா இருந்தா மட்டும் உள்ள கூட்டிட்டு வா.. வேற யாராவது வந்தாங்கன்னா.. எதாவது சொல்லி திருப்பி அனுப்பிடு என்று சுந்தரம் வார்னிங் கொடுத்தான்..

அவர்கள் மூவரும் ஆளுக்கு ஒரு இடத்தில் போய் ஒளிந்து கொண்டனர்..

2 Comments

Comments are closed.