கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 20 6

“சுகன்யா… க்ளாட் டூ மீட் யூ”

சம்பத் தன் வலது கையை அவள் பக்கமாக நீட்டிக்கொண்டு எழுந்தான். சம்பத்தின் கையை குலுக்குவதை விரும்பாத சுகன்யா, அவனை நோக்கி சட்டென தன் கைகளை கூப்பினாள். இவன் வீட்டுல என்னைக் கேட்டு வந்த ப்ரப்போசல் எப்பவோ முடிஞ்சி போன விவகாரம். எந்த உறவுகாரனைப் பத்தியும் எனக்கென்ன கவலை? எவன் உறவு கெட்டாலும் எனக்கு பரவாயில்லை.

நான் எவன் முன்னாடியும் நிக்க மாட்டேன்னு, என் முடிவை அம்மாகிட்ட தீத்து சொல்லிட்டேன். அப்பாவும் நம்ம வீட்டு முடிவை ராணி அத்தைக்கிட்டே சொல்லியாச்சு; அப்புறம் இப்ப இவன் கையை மரியாதைக்காககூட நான் ஏன் குலுக்கணும்? அப்படி குலுக்கி எனக்கென்ன ஆவப் போவுது? எனக்கு மேனர்ஸ் இல்லேன்னு இவன் நினைச்சா நினைச்சிட்டுப் போறான்.

அம்மா கிட்ட எவன் எதிர்லேயும் சீவி சிங்காரிச்சுக்கிட்டு இளிக்க மாட்டேன்னு சொன்னேன். ஆனா என் போதாத வேளை, நான் அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு நல்ல மூடுல இருக்கும் போது இந்த பொறுக்கி வந்து என் எதிர்ல நிக்கறான். இவன் முழியே சரியில்லைன்னு நான் நினைச்சது ரொம்ப கரெக்ட். சரியான பொம்பளை பொறுக்கி. வந்ததுலேருந்து பத்து தரம், கண்ணாலேயே என்னை ரேப் பண்ணிட்டான். பாட்டி என்னமோ இப்பத்தான் இவன் ஹிஸ்டரி, ஜியாகிராஃபி எல்லாத்தையும் என் கிட்ட ஒப்பிக்கிறாங்க.

“எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் சம்பத் … பீ கம்ஃபர்டபிள் ஹியர்! … நீங்க பாட்டிகிட்ட பேசிகிட்டு இருங்க..” என்ற ஒற்றை வரியுடன் அவனை ஒதுக்கிவிட்டு, சுகன்யா விருட்டென ஹாலில், சோஃபாவில் கிடந்த தன் டிராவல் பேகை எடுத்துக்கொண்டு, ஹாலை ஒட்டியிருந்த தாத்தாவின் படிக்கும் அறைக்குள் நுழைந்து கதவை மூடிகொண்டாள்.

மூஞ்சியில அடிக்கிற மாதிரி கையை கூட குலுக்காம எழுந்து போயிட்டாளே? போனதுதான் போனா, ரூமுக்குள்ளே போய் கதவையும் மூடிக்கிட்டாளே? ரொம்ப திமிர் பிடிச்சவளா இருக்காளே? இவ பண்ண காரியத்துக்கு என்ன அர்த்தம்? உன்னை எனக்கு பிடிக்கலைன்னுதானே சொல்றா? சம்பத்துக்கு உடம்பில் சடாரென சூடு ஏறி முகம் சிவந்தது. சுகன்யாவோட ட்ரஸ்தான் மாடர்னா இருக்கு. மனசால ஒரு வேளை இவ ரொம்ப ட்ரெடிஷனலா இருப்பாளோ? என் பார்வையைப் பாத்து பயந்துட்டாளா?

கனகாவுக்கும் தன் பேத்தி சுகன்யா, இப்படி வீட்டுக்கு வந்த விருந்தாளியை, உறவுக்காரனை, உதாசீனப்படுத்திவிட்டு சட்டென அறைக்குள் போனது மனதுக்கு சிறிது சங்கடத்தைக் கொடுத்தாலும், உள் மனதில் கிழவிக்கும் ஏதோ கொஞ்சம் புரிந்தது போல்தான் இருந்தது. தன் வாழ்க்கையில் இது போன்று எத்தனை தருணங்களை அவள் பார்த்திருப்பாள்?

இன்னைக்கு இந்த சம்பத்து பார்வையில ஒரு வித்தியாசம் இருக்கே? என்னமோ பேண்ட் போட்ட பொண்னை இன்னைக்குத்தான் மொதல் தரமா பாக்கற மாதிரி, கொஞ்சம் வெறியோட பாத்த மாதிரியிருந்ததே? திருட்டு முழில்லா முழிக்கிறான். சுகன்யாவுக்கு அப்புறம்தான் எனக்கு மத்த உறவெல்லாம். என் பேத்திக்கு இவனைப் புடிக்கலைன்னா, இவனை முதல்ல வெளியில அனுப்பித்தான் ஆகணும்.

“என்னடா சம்பத்து … காஃபி குடிக்கிறியா?”

“வேணாம் பாட்டி … இப்பத்தான் நான் குடிச்சிட்டு வந்தேன் … நீங்க ஏன் சிரமப் படறீங்க?”

“எனக்கென்னடா சிரமம் … ஏற்கனவே இறக்கின டிக்காஷன் இருக்கு.. பாலை காய்ச்சினா வேலை முடிஞ்சது … ஒரு நிமிஷம் உக்காரு, இதோ வரேன்” கனகா கிச்சனில் நுழைந்தாள்.

சிவதாணு இன்று அவர் பசிக்கு மேல், ருசிக்காக ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிட்டதால், உண்ட மயக்கத்தில் வந்த சன்னமான குறட்டையுடன் சோஃபாவில் சாமியாடிக் கொண்டிருந்தார். அவருக்கு தன் ஒன்று விட்ட சகோதரி லட்சுமி குடும்பத்துடன் ஆரம்பத்திலிருந்தே அவ்வளவாக ஒட்டுதல் கிடையாது. ஆனாலும் உறவு முறைக்காக அவர்கள் தன் வீட்டுக்கு வந்து போவதை சகித்துக்கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *