“ஒரே இடத்தில் தான் இம்புட்டு நேரமா ஓடிட்டு இருக்கோமா….ச்சே.”என மனதுக்குள் புலம்பி…
“பிரதர் எங்கே பார்த்தாலும் நீ தான் கண்ணுக்கு தெரியற …கொஞ்சம் என்னை மட்டும் விட்டு விடேன்.ஒரே ஒட்டமா உன் கண்ணில் படாமல் ஒடி போய்டறேன்”
“இதற்கு மேல் அனு கிட்ட வருவீங்களா….”என அறிவு கேட்க,
“அய்யோ அனு யார் என்றே எனக்கு தெரியாது”என விட்டால் போதும் என ஓட்டம் பிடித்தான்…
அறிவின் உடம்பில் இருந்து ஆவி வெளியே வந்து”இங்கே பார் அறிவு நீ கேட்டதை நான் செய்து விட்டேன்.இப்போ நான் கேட்பதை நீ செய்யவேண்டும்”
அறிவு சுற்றும் முற்றும் பார்க்க எல்லா அடியாட்களும் கீழே விழுந்து மயக்கம் அடைந்து இருப்பதை பார்த்து திருப்தி அடைந்தான்..
“உனக்கு என்ன சாப்பிட வேணும் சொல்லு காத்தவராயா,நான் போய் உடனே வாங்கிட்டு வரேன்…”
“எனக்கு இப்போ எதுவும் வேண்டாம் அறிவு,இப்போ நீ அனுவை கூட்டிட்டு போ..எனக்கு என்ன தேவை என நேரம் வரும் போது நானே கேட்கிறேன்.அதே போல் நான் கேட்கும் போது நீ உதவினால் முன்பு பொற்காசு கொடுத்தது மாதிரி இந்த தடவையும் விலை உயர்ந்த பொருள் உனக்கு பரிசாக கிடைக்கும்.ஆனால் நீ என்னை ஏமாற்ற நினைத்தால் இங்கு விழுந்து கிடப்பவர்களின் நிலையை விட உன் நிலை மோசமாக இருக்கும்.” என்று மிரட்டிவிட்டு காற்றில் கரைந்து போனது…
“உன்னை போய் நான் ஏன் காத்தவராயா ஏமாற்ற போறேன்…எனக்கு நீ நல்லது தான் செய்து இருக்கே” என்று மனதுக்குள் சொல்லி கொண்டே அறிவு ஏரியை நோக்கி நடந்தான்..
ஏரியில் இருந்து நீரை கொண்டு வந்து அனு முகத்தில் தெளிக்க,அவள் கண் விழித்து நடந்து இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள்..
அனு ஆச்சரியத்தில்”நீயா அறிவு,இவர்களை எல்லாம் அடிச்சே….பார்த்தா ஏதோ ஒரு பேய் அடிச்சு போட்ட மாதிரி இல்ல இவனுங்க இருக்கானுங்க”
“பேயா…”அறிவு கொஞ்சம் ஜெர்க் ஆகி,பின் சுதாரித்து கொண்டு”அதெல்லாம் எதுவும் இல்லை மேடம்,நான் தான் அடிச்சேன்..நீங்க என் சண்டையே பார்க்கலேயே.சும்மா பாய்ஞ்சி புரட்டி எடுத்திட்டேன்…சரி வாங்க மேடம் உடனே வீட்டுக்கு போலாம்.. வேறு யாராவது வந்து விட போறாங்க…”என பயந்து கொண்டே திரும்பி பார்த்தான்..
“வேறு யாராவது வந்தா என்ன?அது தான் சூப்பர் மேன் நீ இருக்கேயே..!சும்மா அவர்களை உண்டு இல்லை என்று பண்ணிட மாட்டே…”
“அதுக்கில்ல மேடம்,அப்புறம் வேறு சிலர் வந்தாங்கன்னா ,அவர்களும் இது போல அடிப்பட்டு சாக வேண்டுமே.!அவங்களா நினைச்சா பாவமா இருக்கு அதுக்காக தான்..!
“யூ கிரேட் அறிவு…”
அடுத்த நாள் அனு,அமைச்சர் சம்பந்தபட்ட தகவல்களை ஆபிஸில் ஒப்படைத்து விட்டு திரும்பி தன் ஸ்கூட்டியில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தாள்..அதே வழியே அறிவும் சைக்கிளில் சாப்பாடு பார்சல் வாங்கி வந்து கொண்டு இருந்தான்..
என்ன அறிவு,சாப்பாடு யாருக்கு வாங்கிட்டு போற?
எனக்கு தான் மேடம்…
ஏன் உன் ஒய்ஃப் இல்லியா அறிவு..?
அவ உறவினர் வீட்டு கல்யாணம் விசயமா ஊருக்கு போய் இருக்கா மேடம்,ரெண்டு நாள் கழித்து தான் வருவா…அதுவரை ஓட்டல் தான்..
