செல்வி, அம்மா கேட்டுட்டே இருக்காங்கடா
சதிஷ், வேலையை ரிசைன் பண்ணிட்டேன்.
ஆனா இன்னும் என்னை ரிலீவ் பண்ணலை கா
எப்படியும் இன்னும் ரெண்டு வாரத்துல வருவதற்கு
வாய்ப்பு இருக்கு.
செல்வி, சரி டா.
சதிஷ், அம்மா கிட்ட போனை கொடு
அம்மா, மகனே, எப்படி டா இருக்க
அம்மாவின் குரலை கேட்ட சதிஷ், அம்மா எப்படி இருக்கீங்க
நான் நல்லா இருக்கேன் மா.
அம்மா, மூணு மாசம் முடிஞ்சிருச்சி. ஏண்டா வரல
அக்காவிடம் சொன்ன அதே காரணத்தை சொன்ன சதிஷ்
இன்னும் ரெண்டு வாரத்துல வந்துருவேனம்மா.
அம்மா, சரிடா, உடம்பை பத்திரமா பார்த்துக்கோ.
அப்பா உன்னை பத்தியே பேசிட்டு இருக்காங்கடா.
சதிஷ், அப்பா இருக்காங்கலாமா. போனை கொடுங்க
அம்மா, அப்பா வெளியே போயிருக்காங்க டா.
நான் அப்பாகிட்ட சொல்லிக்கிறேன்.
நீ காலம் தாமதம் பண்ணாம சீக்கிரமா வாடா.
சதிஷ், சரிங்கமா.நீங்க உடம்பை பார்த்துக்கோங்க
அம்மா, சரிடா தங்கம். நீ சீக்கிரமா வா.
சதிஷ், சரிம்மா. அக்காகிட்ட போனை கொடு
செல்வி, சொல்லுடா
சதிஷ், அம்மாவை நல்லா பார்த்துக்கோ டி.
செல்வி, சரிடா, அம்மாவை பத்தி நீ கவலை படாதே.
சதிஷ், வேற யாரை பத்தி கவலை பட.
செல்வி, நீ யாரை பத்தியும் கவலை பட வேண்டாம் டா.
ஏன்னா, நீ கவலை படுகிற மாதிரி யாரும் இங்க கஷ்ட படல.
எல்லாரும் நல்லா சந்தோஷமாகவே இருக்காங்க.
சதிஷ்……………….மௌனம்.
செல்வி, அப்புறம்………………………
பவித்ரா உண்டாகி இருக்கிற விஷயத்தை சொல்ல நினைச்ச
செல்வி, சொல்ல தயங்க
சதிஷ், சொல்லுடி,
செல்வி, ஒன்னும் இல்லைடா
சதிஷ், ஏதோ சொல்ல வந்த
செல்வி, ஒன்னும் இல்லை டா, நீ சீக்கிரமா வா.
சதிஷ், சரி, போனை வச்சிரவா
செல்வி, சரி டா.
கடைசி வரைக்கும் இருவரும் பவித்ராவை பற்றி ஒன்னும் பேசிக்கல.
ரெண்டு வாரம் கழிந்தது.
சதிஷ் ஆவலோடு எதிர்ப்பார்த்த அந்த நாள் வர
தன்னுடைய பெட்டி படுக்கை அனைத்தையும் எடுத்து கொண்டு
தன் நண்பன் அன்புவுடன் விமான நிலையம் கிளம்பினான்.
எதற்காக அவன் குடும்பத்தை விட்டுட்டு இங்கு வந்து வேலைக்கு சேர்ந்தான்.
dei ennada kadha idhu pavanda sathis nallava potai aakitingle pavanda avan chei ipdiyaa eludhuvinga
dei ennada kadha idhu pavanda sathis
nallavana potai aakitingle pavanda sathis
chei ipdiyaa eludhuvinga