அது இன்னும் சந்தோசத்தை தான் கொடுக்கும்.
கடைசியில் முட்டாள் ஆக போகிறது தான் மட்டும் தான்.
கடைசியில் ஒரு நல்ல முடிவை எடுத்தான் சதிஷ்.
அந்த நிம்மதியில் தூங்கி போனான்.
மறுநாள் காலை,
எழுந்து குளித்த சதிஷ், நேரா அடுப்பங்கரை நோக்கி நடக்க,
அம்மா பரபரப்பாக சமையல் வேளையில் இருந்தாங்க,
அம்மா,
குரல் கேட்டு திரும்பி பார்த்த அம்மா,
வாப்பா, எழுந்துட்டியா,
ஆமாம்மா….
கொஞ்சம் இருப்பா, காபி போட்டு தரேன்,
சொன்னவர்கள் பாலை எடுத்து அடுப்பில் சுட வைக்க போக,
சதிஷ், அம்மா, உங்க கிட்ட பேசணும்,
அடுப்பை சிம்மில் வைத்த அம்மா, சொல்லுப்பா,
சதிஷ் தயங்க……..
என்னப்பா… அவன் உடம்பில் கை வைத்து பார்த்த அம்மா,
உடம்பு சரியில்லையாப்பா.
சதிஷ், இல்லைம்மா, மனசுதான்…………….
புரியுதுப்பா, பவித்ராவை குறிச்சிதான் நீ ரொம்ப கவலை படுறே,
எல்லாம் உன் அக்காவும் மாமாவும் தான், அவளை கெடுத்து வச்சிருக்காங்க,
சதிஷ், (கொஞ்சமாவா கெடுத்துருக்காங்க)
சதிஷ், அம்மா நான் வெளிநாட்டில் வேலையை ரிசைன் பண்ணலாம்னு
நினைச்சிருக்கேன்.
உங்க பெர்மிஷன் வேண்டும்.
தயங்கி தயங்கி சொல்ல
அம்மா, அவனை பிடிச்சிட்டு அழ ஆரம்பிச்சாங்க.
ராஜ மாதிரி வாடா,
அம்மா பெர்மிஷன் எதுக்கு,
நீ எப்படா வருவேன்னு நான்தான் காத்து கிடக்கேன்.
சதீசும் கண்கலங்கினான்.
சரிங்கமா, அம்மா காலை தொட்டு வணங்கி அங்கிருந்து நகர
மகனின் பாசத்தை நினைத்து தாய் பூரித்து போனாங்க.
அதற்கு பிறகு சதிஷ் ஆக வேண்டியதை பார்த்தான்.
தான் வந்த லீவை கான்சல் செய்து,
ஆன்லைனில் விமான டிக்கெட் எடுத்தான்.
மறுநாள் அவன் செல்ல வேண்டும்.
தான் சென்று, ஒரு மூன்று மாதம் அங்கு வேலை செய்து
தக்க நபரிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு
வேலையை ராஜினாமா செய்வதாக அம்மாவிடம் சொல்லி இருந்தான்.
இவன் லீவை கான்சல் செய்துட்டு மறுநாள் ஊருக்கு கிளம்பு செய்தி
செல்வியையும் வெங்கட்டையும் உலுக்கியது.
அவனிடம் பேச பயந்தாங்க.
அன்று இரவு செல்வி சதிஷ் ரூமிற்கு போனா.
அக்கா எப்படியும் வருவான்னு இவனுக்கு தெரியும்.
உள்ள வந்து கட்டிலில் அவன் பக்கத்துலே உட்கார்ந்த செல்வி
அவனை பார்க்க துணியாம, குனிஞ்சி உட்கார
சதிஷ், என்னை தலை குனிய வச்சிட்டு,
இப்ப நீ ஏன் தலை குனிஞ்சி உட்கார்ந்து இருக்க
Bro next part yappo varum