சிறிது நேரத்தில் வேலை செய்பவர்கள் அடுப்படியை சுத்தமா துடைத்துவிட்டு
விளக்கை அணைத்து விட்டு, கிளம்பினார்கள்.
போகும் போது கதவை பூட்டி கொள்ள சொன்னாங்க
சதிஷ் அவர்களை பார்த்து,
மணி ஒன்பது மேல ஆகிரிச்சி.
வீடு ரொம்ப தூரமோ என்று கேட்டான்.
அதில் மூத்த பெண்மணி சொன்னது……..
அவர்கள் அனைவருக்கும் ஹசன் பங்களாவுக்கு பின் பக்கம் நல்ல வீடு கட்டி
கொடுத்து இருந்தார்.
மூன்று சமையல் நபர்கள்,
பங்களாவை சுத்தமாக வைத்து கொள்ள மூன்று பேர்
தோட்டத்தை பாதுகாக்க ரெண்டு பேர்
மொத்தம் எட்டு பேர்.
நான்கு பெண்கள், நான்கு ஆண்கள்.
அதாவது நான்கு ஜோடிகள்.
அவர்களுக்கு நல்ல வசதியான வீடு கட்டி கொடுத்திருந்தார்.
அது போக பங்களாவின் இடது பக்கம் ஒரு பெரிய கட்டிடம் உண்டு.
இது பங்களா ஆபிஸ்,
அதிலே மொத்தம் பத்து பேர் வேலை பார்க்கிறாங்க.
ஒரு மேனேஜர் மற்ற ஒன்பது நபருக்கும் அதிகாரி.
ரெண்டு பேர் அகௌண்ட்ஸ்.
மற்றவர்கள், பிளம்பர், எலெக்ட்ரிசின், ac மெக்கானிக்,
இது போன்றவர்கள்.
வெறும் பங்களா மெய்ன்டென் பண்ணுவது இவர்களுது வேலை.
பங்களாவுக்கு தேவையான காய்கறி மளிகை பொருட்கள் வாங்குவது முதல்,
பங்களாவுக்கு தேவையான அணைத்து வேலைகளையும் தொய்வு இல்லாம பார்க்க
வேண்டும்.
எத்தனை ஆச்சர்யம்.
அரண்மனை போல பெரிய பங்களாவுக்கு இது அவசியம்தான்.
அவர்கள் அனைவரும் ஹசன் அன்புக்கு கட்டு பட்டு உண்மையும் உத்தமுமாக
உழைப்பவர்கள்.
அந்த பெண் சொல்லி முடிக்க……………
அந்த பெண், வரேன் சார், வீட்டை பூட்டிக்கோங்க
சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.
சதீசும் கதவை சாத்தி கொண்டி போட்டு பூட்டிட்டான்.
ஹால் விளக்கை அணைத்து தன்னுடைய
ரூமிற்கு சென்று கட்டிலில் உட்கார்ந்தான்.
சதிஷ் வியப்பில் ஆழ்ந்து போனான்.
ஹசன் மேல ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தது.
எவ்வளவு நல்ல மனிதர்.
கோடீஸ்வரராக இருந்தாலும் அனைவரையும்
மதிக்க தெரிந்தவர்.
சக மனிதர்களை அன்பாக நடத்த தெரிந்தவர்.
ஐநூறு கோடி சொத்து என்பது சாதாரணமில்லை .
அவரை நம்பி பல குடும்பங்கள் வாழ்கின்றன.
சதிஷ் மனதில் ஹசன் ரொம்பவே உயர்ந்துட்டார்.
அவர் உயிர் ரொம்பவே முக்கியம்.
அவர் உயிரை பாதுகாக்க தன்னுடைய மனைவி
தொண்டு செய்வது தனக்குத்தானே பெருமை என்று
சதிஷ் சொல்லி கொண்டான்.
இவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தீர்மானம் பண்ணி
கொண்டான் சதிஷ்.
பவித்ராவை பார்த்து, ஹசன் சாரை நல்ல கவனிச்சிக்கோ என்று சொல்ல
தோணியது.
சதிஷ் அவளுக்கு போன் போட, ரிங்க் போனது, ஆனா பவித்ரா எடுக்கல.
மெதுவா மாடி படி ஏறி போனான்.
அவன் முதல் படியில் கால் வைக்க,
இவன் போன் இசையை வெளியிட்டது.
பவித்ரா அழைப்பதாக போன் திரை மின்ன
சதிஷ், ஹாய்
பவி, என்னங்க, இன்னும் தூங்கலையா
சதிஷ், தூக்கம் வரல
பவி, சொல்லுங்க
சதிஷ், ஒன்னும் இல்லை,சும்மாதான் கூப்பிட்டேன்
பவி, என் மேல கோபமா
சதிஷ், இல்லை டா, கண்டிப்பா இல்லை.
பவி, தேங்க்ஸ் ங்க
சதிஷ், உன்னை பார்க்கணும் போல இருக்குடா
பவி, என்னங்க, இப்ப நான் எப்படி வர முடியும்.
சதிஷ், கொஞ்ச நேரம் வந்துட்டு போடி
பவி, ப்ளீஸ்ங்க
