நெறய விரதம் இருக்க வேண்டி வரும்.
கடினமான பாதைகள் கடந்து போக வேண்டி வரும்.
எல்லாத்தையும் பொறுமையா செய்யணும்.
உன்னால முடியுமாமா
முடியும் குருஜி பவித்ரா சொல்ல
குருஜி பவித்ரா அம்மா அப்பாவையும் அழைத்தார்.
அவர்களிடம் சில விஷயங்கள் பேசினார்.
பின்பு மகேந்திரனை தனியா சந்தித்து சிலவற்றை சொன்னார்.
நீ, உன் பொண்ணுக்கு டிவோர்ஸ் வேண்டாம்னு சொல்லறே
ஆனா அவளோ பிடிவாதமா புருஷனை டிவோர்ஸ் பண்ணிட்டு
அந்த பெரியவரை கல்யாணம் பண்ணும்னு இருக்கா.
உன் பொண்ணு மனசை மாத்தறது அவ்வளவு சுலபமல்ல.
மகேந்திரன், குருஜி நீங்க மனசு வச்சா…..
குருஜி, நான் மனசு வைக்கிறது முக்கியமல்ல, நீ மனசு
வைக்கணும்,
மகேந்திரன், நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க குருஜி
குருஜி, உன் பொண்ணை நான் நிறைய சோதனைகளுக்கு
உட்படுத்த போறேன்.
அவ மனசை மாற்றுவதற்கு அவளுடைய பழக்க வழக்கங்கள் மாற்றனும்
முள்ளை முள்ளால் எடுப்பது போல
அவளுக்கு வேறு சில கெட்ட பழக்கவழக்கங்களை ஏற்படுத்தனும்.
இதற்கு எல்லாம் நீ ஒத்துக்கணும் குருஜி சொல்ல
மகேந்திரன் பயத்தோடு சரி என்று தலையை ஆட்டினார்.
பின்பு அவர்களை அனுப்பி வைத்தார்.
பவித்ராவிடம் விடை பெற்று இருவரும் கனத்த மனதோடு கிளம்பினார்.