என் கணவர் ஒரு குற்ற உணர்ச்சியுடனே என்னிடம் பழக, நான் அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும், என் மனதில், நானும் குப்தாவும் பேசிய போது போட்ட திட்டத்திற்கு என் கணவரை இணங்க வைக்கவும், என் கணவரிடம் இயல்பாகவும் அதிகமாகவும் பேசினேன். இருந்தாலும் என் கணவரை என்னிடம் முகம் பார்த்து பேச வைக்க இரண்டு நாட்கள் ஆனது.
ஓரளவு அவர் என்னிடம் மனம் விட்டு பேச துவங்கியதும், நானே அவரிடம் முந்திக் கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.
இனி குழந்தை வேணும்ன்னு சொல்லி அதுக்காக உங்களை தொல்லை பண்ண மாட்டேங்க என்று நான் சொல்ல, அவர் நாம வேணா ஒரு சைல்ட்டை அடாப்ட் பண்ணிக்கலாம் அமுதா என்றார் என் கணவர். நான் யோசிக்கலாம், எனக்கென்னவோ அந்த ஆப்சன்லே இண்ட்ரெஸ்ட் இல்லை. என்ன இருந்தாலும் அது என் குழந்தைன்னு என்னாலே அது மேலே ஒரு அம்மாவா பாசத்தை காட்ட முடியுமான்னு சந்தேகமா இருக்கு. யோசிக்கலாம் என்று சொல்லி விட்டேன்.
இடையில் லாவண்யாவுக்கு போன் செய்து, எல்லாம் இயல்பான பின் ரொம்ப ஒதுங்கி போக வேண்டாம். இனி நமக்குள் எந்த சிக்கலான ரிலேஷன்ஷிப்பும் வேண்டாம். அதே சமயம் இப்படி வேண்டாத உறவாகவும் வேண்டாம் என்று சொல்லி அவளையும் குமாரையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தேன்.
முதலில் தயங்கிய இருவரும் ஒரு ஞாயிற்றுக் கிழமை ஜோடியாக வீட்டுக்கு வந்திருந்தார்கள். குமார் கொஞ்சம் தயக்கத்துடன் என் முகம் பார்த்து பேச கூசியபடி ஒதுங்கியே இருந்தான். காலையில் வந்த இருவரும் மாலை வரை எங்களுடன் இருந்தார்கள். இருந்தாலும் குமார் என்னிடம் ரொம்பவே விலகி தான் இருந்தான். நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இருவரும் கிளம்பி சென்ற பின் மறுநாள் இரவு நானும் என் கணவரும் படுக்கைக்கு சென்ற போது, என் கணவர் என்னிடம் அந்த விசயத்தை ஆரம்பித்தார்.
அம்மு…
ம்…
லாவண்யா ஒரு விசயம் சொன்னா…
என்ன விசயம்?
அது…
என்ன ரொம்ப இழுக்குறீங்க?
இல்லை… நீ எப்படி எடுத்துப்பியோன்னு…
என்ன திரும்பவும் பழைய கதை எதையாவது ஆரம்பிச்சு வைச்சிருக்காளா?
இல்லை அம்மு… அது வந்து…
சரி… சொல்லுங்க… எதுவா இருந்தாலும் பரவாயில்லை…
இல்லை… உனக்கு குழந்தையை அடாப்ட் பண்ண விருப்பமில்லைன்னு நான் சொன்னதுக்கு…
ம்…
அம்மு… இது சும்மா ஒரு ஐடியா தான். நிறைய பேர் செய்யறது தான். நீ ஒத்துக்கனும்ன்னு கட்டாயமில்லை. கோபப்படாம கேளு…
சரி சொல்லுங்க…
இந்த மாதிரி தம்பதிகள் நிறைய பேர் இதுக்குன்னு இருக்க ஹாஸ்பிடல்ஸ்லே செயற்கை முறையிலே கருத்தரிக்க வைச்சு…
செயற்கை முறைன்னா…
ம்… அதாவது உடம்புக்கு வெளியே உன் கருமுட்டையையும் இன்னொருவர் விந்தணுவையும் இணைச்சு அதை கருவா உருவாக்கி அதுக்குப் பிறகு அதை உன் கருப்பைக்குள்ளே வைப்பாங்க.
டெஸ்ட் ட்யூப் பேபி?
எஸ்…
இதுக்கு நான் குப்தா கூட படுத்தே கர்ப்பமாகிருப்பேனே?
…
