ஓகே, ஆரம்பிப்போமா! 2 71

இதனை சற்றும் எதிர்பாராத நான் சற்றே தடுமாறி கால் இடறி பின்னோக்கி போக ஆரம்பித்தேன், நல்ல வேலை என் பின்னல் கதவு இருந்த்தது, அதன் மீது சாய்ந்து நிற்க முடிந்தது. கதவின் மீது சாய்த்து நான், என் மீது படர்ந்து கிடந்தது ஒரு மஞ்சள் மலர் கொடி, கொடியில் பழுத்த பழங்கள் என் முகத்தின் அருகே! என் உடலின் ஒவ்வொரு செல்களும் பூரித்திருந்தன. அந்த நொடி, எங்கள் இருவர் கண்களும் சந்தித்து கொண்டன, அவள் கண்களில் நான் பார்த்தது அவள் என் மீது வைத்திருக்கும் காதல், என் கண்களில் அவள் கண்டது நான் அவள் மீது வைத்திருக்கும் காதல். வார்த்தைகள் பரிமாறவில்லை, கண்கள் வழியே வாழ்க்கை பரிமாறியது.
அந்த ஒருநொடி எங்கள் இருவர் இடையே இருந்த ஜென்ம உறவை புரிய வைத்தது. இருவர் மனங்களிலும் அமைதி, ஜென்ம ஜென்மங்கள் வாழ்ந்த திருப்தி. இருவர் முகத்திலும் மெல்லிய புன்னகை. அவள் தான் முதலில் அந்த நொடியில் இருந்து வெளியே வந்தாள். அவள் முகத்தில் மலர்ந்த புன்னகையை கஷ்டப்பட்டு மறைத்து முகத்தை கோபமாக்கி, அவள் வலது கையால் என் தலையில் குட்டிகொண்டே “பொறுக்கி பொறுக்கி” என கத்த முயன்றாள். ஆனால் அவள் குரல் இன்னும் குறும்பாகதான் இருந்தது, அவள் கொட்டுகளும் வருடல்களாய் தான் இருந்தது. இருந்தாலும் வலிப்பது போல நான் நடித்து அவளை இறக்கி விடுவது போல குனிந்தேன், அவளும் மெதுவாக என் மீது இருந்து இறங்கினாள். சில நொடிகள் இருவரும் மௌனமாய் தத்தம் உடைகளை சரிசெய்து கொண்டோம்.

the end……

1 Comment

  1. No man… it should be continued…. Very pleasing… go ahead pls…

Comments are closed.