“அதெல்லாம் மாரரேஜ் முன்னாடி த்ரியா, இப்போ நீ ஒரு மாரிட் உமன்”
“நீ என்ன சொல்ல வர ஆருஷ். நீ எனக்கு தாலி கட்டினதாலே நீ சொன்னதை எல்லாம் நான் கேட்கணுமா. வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்” த்ரியா கோபம் ஆனாள்.
“த்ரியா மைண்ட் யுவர் வார்ட்ஸ். நான் ட்ரெஸ்ஸை பத்தி மட்டும் தான் சொன்னேன்”
“இன்னைக்கு ட்ரெஸ்ஸை பத்தி சொல்லுவே. நாளைக்கு நான் எந்த மாதிரி படத்துல நடிக்கணும்னு தென் நான் ஏன் நடிக்கணும்னு சொல்லுவே”
“நான்ஸென்ஸ் த்ரியா. உன்கிட்ட எல்லாம் பேச முடியாது” ஆருஷ் கடுப்புடன் வெளியே வந்து வீட்டில் இருந்த பாரில் இருந்து சிங்கிள் மால்ட் விஸ்கியை ஒரு லார்ஜ் ஊத்தி குடிக்க தொடங்கினான்.
அங்கே வந்த த்ரியா அவன் குடிப்பதை பார்த்து “இப்போ ஏண்டா குடிக்கிரே. ஐ தாட் வீ வில் செல்ப் ட்ரைவ்”
“ஜஸ்ட் ஒரு லார்ஜ் தான் ஐ கேன் ட்ரைவ்”
“நீ ட்ரின்க் பண்ணிட்டு ட்ரைவ் பண்ணுற லட்சணம் தான் ஊட்டிலயே நான் பார்த்தேனே” த்ரியா முணுமுணுத்தாள்.
“என்ன சொன்னே” ஆருஷ் கோபம் ஆனான்.
“நத்திங் ஆருஷ். நான் ட்ரைவரை கூப்பிடுறேன்” வெளியே சென்று ட்ரைவரை கூப்பிட சென்ற த்ரியாவை தடுத்தான்.
“த்ரியா அது ஒரு ஆக்சிடென்ட்”
“இப்போ அது நடக்க கூடாதுன்னு தான் ட்ரைவரை கூப்பிடுறேன் ஆருஷ். என்னால திரும்ப எல்லாம் போலீசை கன்வின்ஸ் பண்ண முடியாது” அவன் கையை தட்டிவிட்டி அவன் கூப்பிட்டு கத்த கத்த திரும்பாமல் த்ரியா வேகமாக வெளியே சென்று டிரைவரிடம் காரை எடுத்து வர சொன்னாள்.
ட்ரைவர் காரை போர்டிகோவில் நிறுத்த இருவரும் பின் சீட்டில் உட்கார்ந்து அதிகம் பேசிக்கொள்ளாமல் விழா நடக்க இருந்த அந்த தனியார் கல்லூரிக்கு வந்து இறங்கினர். பார்க்கிங்கில் இருந்து விழா நடக்கும் ஆடிட்டோரியம் வரை பிரபலங்கள் நடந்து செல்ல சிவப்பு கம்பளம் விரிக்க பட்டு இருக்க அதில் நடந்து சென்ற அனைவரையும் எக்கசக்க கமெராக்கள் பளிச்சென்ற பிளாஷ் ஒளி மின்ன இடைவிடாமல் புகைப்படம் பிடித்து கொண்டு இருந்தது.
காரில் வரும் வரை உம்மென்று இருந்த த்ரியா சிவப்பு கம்பளத்தில் இறங்கியவுடன் புன்முறுவல் புரிந்து ஆரூஸுடன் கைகோர்த்து கொண்டு கைஅசைத்து கொண்டே வந்தாள்.
“த்ரியா மேடம், த்ரியா மேடம்” என்று போட்டோகிராஃபர்கள் கூப்பிட நின்று போஸ் கொடுத்தாள்.
“மேடம் ஒரு சோலா பிக்” என்று கொஞ்சம் பேர் கேட்க ஆருஷ் அவளை விட்டு விலகி நிற்க த்ரியா முன்னாடியும் பின்னாடியும் திரும்பி திரும்பி போஸ் கொடுத்தாள். பிளாசின் வெளிச்சம் பட்டு ஏற்கனவே மினுமினித்த அவளின் தொடைகள் இன்னும் அதிகமாக மின்னின.
“தேங்க்ஸ் கைஸ்” என்று சிரித்து கொண்டே மீண்டும் ஆருஷின் கைகோர்த்து கொண்டு அவர்கள் இருவருக்கும் ஒதுக்க பட்டு இருந்த இருக்கையில் போய் அமர்ந்தனர். மிமிக்கிரி ஆட்டம் பாட்டம் என நிகழ்ச்சி கலை கட்ட தொடங்கியது. பாடகர்களில் ஆரம்பித்து பாடலாசிரியர், வசனகர்த்தா என்று ஒவ்வொரு விருதுகளாக வழங்கப்பட கடைசியில் சிறந்த படம், நடிகர், நடிகைக்கான விருதுகள் வழங்க பட அரங்கமே அதிர்ந்தது. முதல் கட்டமாக சிறந்த விருதை இயக்குனர் பாலரத்னம் பெற்றுக்கொண்டார். அடுத்ததாக சிறந்த நடிகைக்கான விருதிற்கு நடிகை த்ரியாவை அழைக்க அவள் பேரை சொன்ன உடனே அரங்கம் அதிர்ந்தது.
விருதை வாங்கி கொண்டு நடிகை த்ரியா பேச ஆரம்பித்தாள். “முதல்ல நான் நடிச்ச படத்தை எல்லாம் பார்க்க வரும் என்னோட ரசிகர்கள் எல்லாருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன். தென் டூ மை மாம் சுமா. அப்புறம் என்னோட அப்பா ஸ்தானத்தில இருக்கும் டைரக்டர் பாலரத்னம் சார். ஹீரோ மனுஷ் சார் அப்புறம் இந்த படத்தில் உழைச்ச ஒவ்வொரு டெக்னிஷியன் எல்லாருக்கும் நன்றி” அவள் எல்லாரையும் சொல்லவிட்டு தன்னுடைய பெயரை மட்டும் விட்டது கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது.
அடுத்ததாக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் மனுஷ் வாங்க, கடைசியாக சிறந்த படத்திற்கான விருதை மனுஷ், த்ரியா நடித்து பாலரத்னம் இயக்கிய அந்த படமே வெல்ல அனைவரும் மேடைக்கு செல்ல த்ரியா இயக்குனர் மற்றும் ஹீரோ மனுஷை மேடையிலே கட்டி பிடித்தது ஆரூசுக்கு ஏதோ மாதிரி இருந்தது. உணர்ச்சியை வெளியே காட்டாமல் கைதட்டி கொண்டு இருந்தான். விருது வழங்கும் விழா முடிந்தவுடன் த்ரியா ஆருஷிடம் வந்தாள்.
“ஆருஷ் நீ கிளம்பி வீட்டுக்கு போ. எல்லா டாப் அவார்டும் வாங்கினதாலே டைரக்டர் சார் எல்லாருக்கும் ட்ரீட் கொடுக்க போறாரு”
“எங்கே”
“தெரிலடா. நீ வீட்குக்கு போய்டு நான் டிரைவருக்கு கால் பண்ணி பிக் பண்ண சொல்லிக்கிறேன்” த்ரியா சொல்லிவிட்டு மனிஷின் காரில் உட்கார்ந்து சென்றாள்.
மனுஷ் த்ரியாவை பற்றி எக்கசக்க கிசுகிசுக்கள் வந்தாலும் இருவரும் அதை எல்லாம் மறுத்தே வந்தனர். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தான் மச்சி லீக்ஸ் என்கிற ஒரு புதிய ட்வீட்டர் அக்கவுண்ட் இருவரும் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை ஒன்று வெளியிட்டது. த்ரியா ஆருஷிடம் தன்னுடைய பழைய வாழ்க்கையை பற்றி எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம் என்று சொல்லி அவனை தேற்றினாள். ஆரூசுக்கு சினிமா துறையில் நடிகர் நடிகைகள் செய்யும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி எல்லாம் தெரியாமல் ஒன்றும் இல்லை. ஆனாலும் விருது வழங்கும் விழாவிற்கு கிளம்பும் நேரத்தில் இருந்து த்ரியாவுடன் ஆரம்பித்த சண்டை விருது வாங்கிவிட்டு இவனை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாதது எல்லாம் இவனுக்கு மூட் அப்செட் செய்தது.