புதிய முயற்சி 386

ணக்கம். இது புதிதாக எழுத போகும் ஒரு த்ரில்லர் கதை. முதலில் வழக்கமான மர்டர் மிஸ்டரி கதையை போலெ இருந்தாலும் அடுத்தடுத்த பதிவுகளில் நிறைய எதிர் பார்க்காத திருப்பங்கள் இருக்கும் என்று நம்புகிறேன். மென்காமம் கலந்த த்ரில்லர் கதைகள் பிடித்தவர்கள் ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன்.

சாயங்காலம் 4 மணி ஆகியும் வெயில் சுட்டெரித்தாலும் சென்னையின் பிரதான கடைத்தெருவில் அமைந்து இருந்த அந்த எலெக்ட்ரோனிக்ஸ் கடையில் கண்ணாடி வழியே பிரீமியர் லீக் கிரிக்கெட் மாட்சை பார்த்து கொண்டு “வி வாண்ட் சிக்ஸர்” என்று கத்தி கொண்டு இருந்த கூட்டம் கடையில் உள்ளே இருந்த ஊழியர் திடிரென்று டிவி சேனல் மாற்றியதும் இன்னும் அதிகமான கூச்சலிட்டனர். அங்கே இருந்த எல்லா டீவியிலும் செய்திகள் ஓட தொடங்கியது.

வணக்கம். சற்றுமுன் எங்களுக்கு கிடைத்த முக்கிய செய்தி, பிரபல நடிகையும் தமிழக மக்கள் ஏன் தென்னிந்திய மக்களின் கனவு கன்னியும் ஆன நடிகை த்ரியா இறந்துவிட்டதாக அதிகாரபூர்வமான செய்தி எங்களுக்கு கிடைத்து உள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு அறிமுகம் ஆன முதல் படத்திலே இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த அவர் அதன் பிறகு தொடர் வெற்றி படங்களை கொடுத்து மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்து கனவு கன்னி ஆனார். இந்த வருடம் சிறந்த நடிகைக்கான மாநில விருதை வென்ற அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் அவரை விட நான்கு வயது கம்மியான சக ஹீரோவான ரொமான்டிக் ஸ்டார் ஆரூஸை கைபிடித்தார் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததே.

எங்களின் நிருபர் இப்போ கிழக்கு கடற்கரை சாலைல இருக்க நடிகை த்ரியா மற்றும் நடிகர் ஆருஷ் பீச் பங்களால தான் இருக்காங்க, அவங்க கிட்ட பேசலாம்.

“ஹலோ சொல்லுங்க அங்கே நிலவரம் எப்படி இருக்கு”

“விஷயம் கேள்வி பட்ட உடனே இங்கே த்ரியா மற்றும் ஆரூஸோட பான்ஸ் எல்லாமே கூடி பயங்கர கூட்டம். போலீஸ் இப்போ தான் ஆங்காங்கே தடுப்பு போட்டு கூட்டத்தை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்காங்க”

“திரியா பத்தி என்ன தகவல் கிடைச்சது. இது தற்கொலையா இல்லை போலீஸ் யாராச்சும் சந்தேக படுறாங்களா”

“அவங்க தரப்புல ஏதும் இதுவரைக்கும் ஊர்ஜிதமாக சொல்லலை. எல்லா கோணங்களிலும் விசாரிக்க போவதாக மட்டும் தான் சொல்லுறாங்க”

“யாரு இந்த விஷயத்தை போலீசுக்கு தகவல் கொடுத்தாங்கன்னு தெரியுமா”

“அவங்க பங்களாவோட செக்கூரிட்டி தான். காலையில இருந்து த்ரியா மேடம் வீட்டை வெளியே வராம இருந்ததால வீட்டுக்குள்ளே போய் பார்த்தப்போ மூச்சி பேச்சு இல்லாம அவங்க கடந்ததை பார்த்து பாமிலி டாக்டருக்கு போன் பண்ணிட்டு அவர் செக் பண்ணிட்டு டெத் கன்பார்ம் பண்ணிட்டு போலீசுக்கு தகவல் சொல்லி இருக்காரு”

“தேங்க்ஸ். நடிகர் ஆருஷ் இப்போ எங்கே இருக்காருன்னு ஏதாச்சும் தகவல் இருக்கா”

“அவரு இப்போ வீட்டில் இல்லை இப்போ நடிச்சிட்டு இருக்க புது படத்துக்காக நேத்துல இருந்து பாண்டிச்சேரில சூட்டிங்ல இருக்காரு. பேமிலி டாக்டர் போலீசுக்கு சொன்ன உடனே அவருக்கும் தகவல் சொல்லியதால் எப்போ வேணும்னாலும் இங்கே ரீச் ஆகலாம்”

“நன்றி. புதிய தகவல் ஏதாச்சும் கிடைத்தால் எங்களுக்கு உடனே பகிருங்கள். இப்போது நடிகை த்ரியாவை அறிமுகம் செய்த இயக்குனரும், தொடர்ந்து அவங்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பாலரத்னம் எங்களுடன் இணைப்பில் உள்ளார் அவரிடம் பேசலாம்”

“வணக்கம் பாலரத்னம் சார். நடிகை த்ரியாவை வச்சி அதிகமான படங்களை இயக்கியவர் நீங்க. இதை எப்படி பார்க்கறீங்க”

“என்னோட சொந்த மகளை இழந்த மாதிரி இருக்கும்மா” அவரின் முகம் வாடி இருந்தது.

“அவங்க கூட எனக்கு பாலரத்னம் சார் அப்பா மாதிரி அப்படின்னு நிறைய பேட்டில சொல்லி இருக்காங்க“ அதை கேட்ட அவரின் கண்களில் தண்ணீர் குளம் கட்டி இருந்தது.

“திரியாவோட இழப்பு சினிமாவுக்கே ஏற்பட்ட இழப்பு. என்னோட எக்ஸ்பீரியன்ஸ்ல நான் நிறைய பேரை பார்த்து இருக்கேன் ஆனா த்ரியா மாதிரி ஒரு மெத்தெட் ஆக்டர் பார்த்ததே இல்லை. ஒரு கதாபாத்திரத்தை நடிக்க முடிவு பண்ணிட்டா ஆன் கமெரா ஆப் கமெரா அந்த கதாபாத்திரமாவே மாறிடுவா. சில சமயம் ஷாட் ரெடி ஆயிடிச்சுனு அவ பேரை சொல்லி கூப்பிட்ட கூட வராம கதாபாத்திரம் பேரை சொல்லி கூப்பிடனும்” சொல்லிய அவரின் கண்ணில் இருந்து ஒரு துளி வழிந்தோடியது.

“ஆமாம் சார், அவங்க இப்போ கடைசியா நடிச்சி வெளியே வந்த படத்தில் ஆவியா நடிச்ச நடிப்புக்கு கண்டிப்பா தேசிய விருது கடைக்கும்னு எதிர் பார்த்துட்டு இருக்க நேரத்தில இது ஒரு பெரிய இழப்பு தான்”