புதிய முயற்சி 419

“நீ மட்டுமா இருந்தா அப்படி தான்” சிணுங்களாக சொன்னாள்.

“ஐயோ 15 நாள் இருக்குமா உன்னை ‘முழுசா’ பார்த்து.” அவன் பேச்சில் ஒரு கிறக்கம் இருந்தது.

“ரொம்ப அவசரபடாதே ஆருஷ். இன்னும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரணும்”

“அடிப்பாவி நீ அந்த பவுடரை கொடுத்தப்போ இது போஸ்ட் மார்ட்டம்ல கூட ட்ரேஸ் பண்ணவே முடியாத ஸ்லோ பாய்சன் அப்படின்னு சொல்லி கொடுத்திட்டு இப்போ இப்படி சொல்லுறே”

“ட்ரேஸ் பண்ண முடியாதது தான், இருந்தாலும் ஒரு சின்ன நெருடல் இருக்கு. நான் என்ன இதை முன்ன பின்ன யூஸ் பண்ணியா இருக்கேன்”

“எனக்கு இப்போ பீதியா இருக்கு”

“என்னது ஆக்சன் ஹீரோ ஆரூசுக்கு பயமா” சிரித்தாள்.

“சும்மா நக்கல் அடிக்காதேடி”

“ஹாஹாஹாஹா” என்று சிரித்தாள்.

“….”

“சாரி டியர். ஆல்ரெடி போஸ்ட் மார்ட்டம் ரிசல்ட் அட்டாக்னு வந்துடுச்சு. சும்மா உன்னை பயம் காட்டினேன்” சிரித்தாள்.

“அதுக்குள்ள உனக்கு எப்படி தெரியும்”

“டிவி பாரு”

ஆரூஸ் ரூமில் இருந்த டீவியை ஆன் செய்து நியூஸ் சேனலுக்கு மாற்றினான்.
“வணக்கம். சற்று முன் கிடைத்த முக்கிய செய்தி. நடிகை த்ரியா மாரடைப்பில் இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததாக கோலிவுட் செய்திகளையும், அந்தரங்களையும் வெளியிடும் மச்சிலீக்ஸ் ட்விட்டரில் வெளியிட்டது. நாங்கள் இதை பற்றி போலீசாரிடம் கேட்ட போது அதிகாரபூர்வ தகவல் வரும் வரை காத்து இருக்குமாறும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்”.

டிவியை ம்யூட் செய்து விட்டு “இவனுங்க எங்கே எப்படி நியூஸ் சேகரிக்குறான்னுங்கினே தெரியல” ஆரூஸ் போனில் வெறுப்புடன் சொன்னான்.

“ஏன் என்னாச்சு டியர்”

“பின்ன என்ன இவனுங்க லீக் பண்ண ஆரம்பிச்சதில் இருந்து எவனோட அந்தரங்கம் எப்போ வெளியே வரும்னு இண்டஸ்ட்ரியே கதிகலங்கி போய் இருக்கு”

“ஹாஹாஹா. சரி என்னோட ட்ரீட் எங்கே”

“எதுக்கு”

“எதுக்கா. ஏய் ஆருஷ் நீ என்ன சொன்னே தெரியுமா. த்ரியா ரொம்ப ஸ்மார்ட் அவளை எல்லாம் ஏமாத்தி பாய்சன் எல்லாம் கொடுக்கவே முடியாதுன்னு சொன்னியே அதுக்கு”

“அவ என்கிட்ட கொஞ்ச நாளாவே ரொம்ப ரொமான்டிக்கா பேசிகிட்டு இருந்தா. அவ ரொமான்டிக்கா பேசினாலே சம்திங் டேஞ்சரஸ் இஸ் அபவ்ட் டு ஹெப்பேன் அப்படினு அர்த்தம். ஒரு வேலை நான் அவளை கொள்ள திட்டம் போடுறதை கண்டுபிடிச்சி என்னை மாட்டிவிட பிளான் போடுறாளோ அப்படின்னு நினைச்சு தான் சொன்னேன்”

“அவ என்ன அவளோ ஸ்மார்ட்டா”

“பின்னே. ஏன்னா அவளோட செக்ஸ்சுவாலிட்டி யூஸ் பண்ணி எல்லாத்தையும் தனக்கு அட்வான்டேஜா ஈஸியா மாத்திப்பா”

“ஒரு வேலை வயசாயிடிச்சு, செட்டில் ஆகிட வேண்டியதுதான்னு உண்மையிலே ரொமான்டிக்கா இருந்து இருக்கலாம்ல”

“அவளை பத்தி உனக்கு முழுசா தெரியாது அதனாலே பேசுறே. சரி செத்தவளை பத்தி ஏன் பேசுற டார்லிங், நீ அஞ்சலி செலுத்த என்ன டிரஸ் போட்டு வர போறே”

“சாரீல தாண்டா. நான் என்ன பெரிய செலிபிரிட்டியா என்ன சாவு வீட்டிலேயும் பேஷன் பார்த்து ட்ரெஸ் போட்டு வர. சாதாரண ஒரு போட்டோக்ராபர் தானே. என்னை எல்லாம் யாரு பார்க்க போறாங்க“

“நான் உன்னை மட்டும் தான் பார்ப்பேன். பார்த்துட்டே உன்னோட டிரஸ் எல்லாத்தையும் எப்படி கழட்டலாம்னு யோசிப்பேன்”

“சீஈஈஈ, மூடேத்தி பாக்கறியா. நீ அடக்கம் பண்ண எப்போ திருச்சி போறே”

“நாளைக்கு மதியம். நீ வேணும்னா கூட வாயேன்”

“நான் எப்படிடா”