புதிய முயற்சி 419

“சரி சிசிடிவி எவிடென்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி வையுங்க. நான் போய் ஆருஷ் கிட்ட விசாரிச்சு பாக்குறேன். கூட்டம் கூட ஆரம்பிச்சா அவனை பிடிக்க முடியாது”

ஆருஷ் குளித்து விட்டு கருப்பு கலர் ஜிப்பா மற்றும் பேண்ட் போட்டு கொண்டு வெளியே வந்தான்.

“சார் உங்க கிட்ட ஒரு சில கேள்வி கேட்கலாமா”

“ஓஹ் எஸ்” உட்காருங்க என்று சோபாவில் உட்கார்ந்து சேரை காட்டினான்.

“இவளோ பெரிய வீட்டுல ஏன் வாட்ச்மேனை தவிர யாருமே இல்லை”

“த்ரியா பிரைவசியை விரும்புறவங்க அதனாலே தான்”

“வேலைக்கு கூட ஆள் வைக்காத அளவுக்கு பிரைவசி முக்கியமா”

“உங்களுக்கே தெரியும். சில வருசத்துக்கு முன்னாடி அவங்க பாத்ரூம்ல குளிக்குற வீடியோ ஒன்னு வந்துச்சி. அது வீட்டுல வேலை பார்த்த ஒரு ஆள் லீக் பண்ணியது தான். அதுல இருந்து நம்பிக்கை இல்லாத எல்லாரையும் வீட்டை விட்டு தூக்கிட்டு எல்லாத்துக்கும் ரோபோட் வெச்சாச்சு. த்ரியா ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ் அப்டிங்கறதாலே செல்ப் குக் இல்லைனா அத்தை சமைப்பாங்க.”

இன்ஸ்பெக்டருக்கு பொறி தட்ட உடனே “வாட்ச்மேன் அவங்க பீஸ்ஸா சாப்பிட்டாங்கனு சொன்னான்” கேட்டார்.

“உங்களுக்கு தான் தெரியமே. த்ரியா ஒரு மெத்தட் அஆக்டர்னு அடுத்த படத்துல குண்டா இருக்கணும் அதுக்காக வெயிட் ஏத்த ஷி ஸ்டார்ட்எட் ஈட்டிங் ஜங்க்”

“ஹ்ம்ம் சுமா மேடம் இங்கே தான் இருப்பாங்களா”

“ஆமா மோஸ்ட்லீ. த்ரியாகு சூட்டிங் இல்லாதப்போ திருச்சி போவாங்க”

“ஹ்ம்ம் தேங்க்ஸ் சார்”

“உங்க இன்வெஸ்டிகாசன் எப்படி போகுது”

“நத்திங் சஸ்பிசியோஸ். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்க்கு வைட்டிங்”

“ஓகே, இப் யு எக்ஸ்க்யூஸ் மீ. நான் போயிடு சில அரிஞ்சமென்ட்ஸ் பண்ணனும்”

அப்போது ஏட்டு வேகமாக ஓடி வந்தார்.

“ஐயா எனக்கு ஒன்னு தோணுது”

“என்ன”

“இந்த பங்களா இருக்க இடத்தை பார்த்தீங்கலா”

“பீச் சைட் பங்களா. எல்லா பெரிய ஸ்டாரும் இங்கே தானே பங்களா காட்டுறாங்க”

“அதில்ல. ஆள்நடமாட்டம் இல்லாம தனியா பேய் பங்களா மாதிரி இல்லை. வர வழி பூரா சவுக்கு காடு. எனக்கு தெரிஞ்சி ஏதோ மோகினி பேய் அடிச்சிடிச்சுனு நினைக்கிறேன்”

ஆள் நடமாட்டம் இல்லாத தனி இடத்தில இருப்பதால் ஒரு வேலையாக இது ஒரு மோகினி பிசாசுவின் வேலையாக இருக்கலாம் என்று ஏட்டு சொன்னதை கேட்டு இன்ஸ்பெக்டருக்கு பயங்கர கோபம் வந்தது.

“யோவ் வயசான ஆளாச்சேன்னு பாக்குறேன், இல்லேன்னா அடிச்சே இருப்பேன். ஏற்கனவே மீம் எல்லாம் போட்டு ரொம்ப ட்ரோல் பண்ணுறானுங்க நீங்களும் இப்படி பண்ணினா நம்ம டிபார்ட்மென்ட்க்கு இருக்க கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்டும். ஒழுங்கா எவிடென்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வா போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வாங்கணும்” இன்ஸ்பெக்டர் கடுப்பில் கத்தினார். ஏட்டு அந்த கடுப்பை மிச்சம் இருந்தவர்களிடம் காட்டினார். அடுத்த பத்தாவது நிமிடத்தில் போலீஸ் அங்கிருந்து கிளம்பியது.

“சார் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வாங்க போறேன். உங்க பேச்சை கேட்டுட்டு கூட்டம் கலைஞ்சி போனாலும் கொஞ்ச பேரு பாதுகாப்புக்கு இருக்கட்டும். ஏன்னா சினி பீல்டுல இருக்கவங்க எல்லாம் அஞ்சலி செலுத்த வருவாங்கனு தெரிஞ்சி திரும்ப கூட்டம் கூடலாம்”

“ரிப்போர்ட் வந்த உடனே எனக்கு கால் பண்ணுங்க” ஆரூஸ் சொன்னான்.

“ஹ்ம்ம் ஓகே சார்” இன்ஸ்பெக்டருடன் பாதி பேரு கிளம்பினார்.

ஆருஷின் போன் மெஸ்ஸஜ் அடித்தது.

“ஒய் டு வெயிட் டில் டுமாறோ” என்று அவன் அனுப்பிய மெஸ்ஜிற்கு ரிப்லை வந்தது. தன்னை யாரும் நோட்டமிடவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு புன்முறுவலுடன் போனை எடுத்து அந்த நம்பருக்கு டயல் செய்தான்.

“ஹலோ, என்னடி இவளோ லேட்டா ரிப்லை பண்ணுரே” பேசி கொண்டே வீட்டிற்குள்ளே தனிமைக்கு வந்தான்.

“குளிச்சிட்டு இருந்தேன். இப்போ தான் மெஸ்ஸஜ் பார்த்தேன். இனிமேல் தான் கிளம்பி அஞ்சலி செலுத்த வரணும். என்ன ட்ரெஸ் போட்டு வர”

“இப்போ என்ன போட்டு இருக்கே”

“வெறும் டவல் மட்டும்”

“கருப்பு கலர் டவலா இருந்தா அப்படியே வா ஏன்னா அஞ்சலி செலுத்த கருப்பு கலர்ல தான் வரணும்”

“இல்லை பிங்க் கலர்”

“அப்படின்னா கழட்டி வீசிட்டு வா”