அதை கேட்டு அழும் நிலையில் இருந்த இயக்குனர் கேமெரா முன்பு அழ விரும்பாமல் “சாரிம்மா என்னாலே இதுக்கு மேல முடியாது” என்று இணைப்பை துண்டித்தார்.
“தொடர்ந்து எங்களுடன் நேரலையில் இருங்கள், விளம்பர இடைவேளைக்கு பிறகு செய்திகள் தொடரும்”.
“அடச்சே இந்த டிவி காரன் அடுத்தவன் சாவுல கூட காசு தான் பார்ப்பானுங்க” ஒருவன் கூற “ஆமா ப்ரோ இதுக்கு நாமளே அவங்க வீட்டுக்கு போய்டலாம்” என்றான்.
“கரரெக்டா சொன்னீங்க ப்ரோ. அங்கேயே போய்டலாம்” என்று அவர்கள் இருவரும் கிளம்ப வேறு சிலரும் நடிகை த்ரியாவின் வீட்டை நோக்கி சென்றனர்.
த்ரியாவின் வீடு முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிய ஒரு கருப்பு நிற BMW கார் மட்டும் மெதுவாக உள்ளே நுழைந்தது.
“தலைவா, தலைவா” என்று கூட்டம் முழுக்க கத்த தொடங்கி வழிவிட அந்த கார் பொறுமையாக பங்களாவின் உள்ளே நுழைந்தது. ஆரூஸ் அணிந்து இருந்த கூலிங் கிளாஸை கழட்டி கையில் வைத்து கொண்டே வேகமாக வீட்டின் உள்ளே சென்றான்.
ஆருஷ் வயது 29. ரெகுலராக ஜிம் செய்து முறுக்கேறி இருந்த உடலை இப்போது நடித்து கொண்டு இருக்கும் போலீஸ் கதாபாத்திரத்துக்காக இன்னும் மெருகேற்றி இருந்தான். தொடக்கத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும் த்ரியாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த அந்த படம் தான் அவனுக்கு பெரிய பிரேக் கொடுத்தது. திடிரென்று ஒரு நாள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள அதன்பின் அவனுக்கு ஏறுமுகம் தான்.
உள்ளே நடிகை த்ரியா இருந்த இடத்தில் மார்க்கிங் செய்ய பட்டு இருக்க அவளின் உடம்பு ஒரு ஸ்ட்ரெச்சர் மீது வைக்க பட்டு இருந்தது. கண்கள் மூடி படுத்து இருந்த அவளின் உடம்பை பார்த்து ஒரு கணம் அப்படியே நின்று கொண்டு இருந்த அவனின் மௌனத்தை இன்ஸ்பெக்ட்டர் இன்பசேகரன் கலைத்தார்.
“சாரி Mr. ஆருஷ். நான் கூட மேடத்தோட ரொம்ப பெரிய பேன்” என்றார்.
ஒன்றும் சொல்லாமல் மௌனமாக தலையை மட்டும் ஆருஷ் ஆட்டினான்.
“நீங்க அரை மணி நேரத்தில வந்துடுவீங்கன்னு தான் வெயிட் பண்ணினோம். அவங்க பாடிய போஸ்ட் மார்ட்டம் பண்ணனும் சோ..” என்று இழுத்தார்.
“சாரி. யூ கேரி ஆன் வித் யுவர் போர்மாலிட்டீஸ்”
“Mr. ஆரூஸ் வெளியே இருக்க கூட்டம் கண்ட்ரோல் பண்ணுறது ரொம்ப கஷ்டம். போர்ஸ் யூஸ் பண்ண முடியாது சோ நீங்க கொஞ்சம்..” என்று இழுத்தார்.
“போர்ஸ் எல்லாம் வேண்டாம் இன்ஸ்பெக்டர், ஐ வில் ஹெல்ப்” என்று சொல்லிவிட்டு கேட்டை திறந்து வெளியே வர வெளியே இருந்த மீடியா அவனை சுற்றி வளைத்து “ஆரூஸ் இது கொலையா தற்கொலையா? போலீஸ் என்ன சொல்லுறாங்க” என்று கேள்வி கணைகளை துளைத்தது.
“இங்கே இருக்க ரசிகர்கள் மீடியா எல்லாருக்கும் நான் ஒண்ணே ஒன்னு மட்டும் சொல்ல ஆசை படுறேன். த்ரியா ரொம்ப பிரைவேட் பெர்சன்னு உங்க எல்லாருக்குமே தெரியும் அதனாலே இதை எங்களோட குடும்ப துக்கமாக மட்டும் கருதி பிரைவசி குடுப்பீங்கனு எதிர்பார்க்குறேன். த்ரியாவோட ஆசையும் இதுவா தான் இருந்து இருக்கும்” என்று சொல்லிய உடன் கூட்டம் களைய தொடங்கியது.
சொல்லிவிட்டு மீண்டும் வீட்டின் உள்ளே சென்ற ஆருஷ் “ஒரு வழியா செத்துட்டா. காண்ட் வெயிட் டு செலிப்ரட் திஸ் வித் யு டுமாரோ” என்று மெஸ்ஸஜ் அனுப்பி கொண்டே தன்னுடைய ரூமிற்கு சென்றான்.
ஆருஷ் மீடியாவிடம் குடும்ப துக்கமாக கருதி அவர்களுக்கு பிரைவசி வழங்க வேண்டும் என்று சொல்லவிட்டு “ஒரு வழியா செத்துட்டா. காண்ட் வெயிட் டு செலிப்ரட் திஸ் வித் யு டுமாரோ” என்று மெஸ்ஸஜ் அனுப்பி கொண்டே தன்னுடைய ரூமிற்கு சென்றான்.
கொஞ்ச நேரத்தில் த்ரியாவின் அம்மா சுமா கதறிய படியே ஓடி வந்தாள். தொடக்கத்தில் சீரியல்களில் நடித்து கொண்டு இருந்தவள், சீரியலில் நல்ல நடிகை என்று பெயர் இருந்தாலும் மகள் சினிமாவில் ஸ்டார் ஆனபோது தன்னுடைய நடிப்பை துறந்தாள்.
தன்னுடைய மகளின் சடலத்தை பார்த்து சத்தம் போட்டு அழ ஆரம்பிக்க மாமியார் வந்தது தெரிந்து ரூமில் இருந்து ஆருஷ் வெளியே வந்தான்.
“என்னாச்சி ஆருஷ். நான் 4 நாள் விட்டுட்டு போறதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சே” மருமகனை கட்டி பிடித்து அழுதாள்.
“என்ன ஆச்சுன்னே தெரியல அத்தை” அவன் முதுகை தடவி கொடுத்தான்.
