புதிய முயற்சி – Part 5 103

“வாங்க ரூம் எல்லாம் செட் பண்ணி வச்சி இருக்கேன்” டிஜிபி த்ரியாவை கூட்டி செல்ல கோவமான ஆருஷ் அங்கே இருந்து கிளம்பி ரிசார்ட் வந்து குடிக்க தொடங்கினான்.

இரண்டு மணி நேரம் கழித்து த்ரியா ஆரூசுக்கு கால் செய்தாள்.
“ஆருஷ் என்னை வந்து பிக் பண்ண முடியுமா”

“ஏன் அவனே வந்து விடமாட்டனா”

“ஆளு பிளாட். நீ இப்போ வாயேன் ப்ளீஸ்”

“என் ராத்திரி அங்கேயே படுத்திட்டு வர வேண்டியது தானே” ஆருஷ் கோவமாக பேசினான்.

“இடியட் நான் மட்டும் படுக்கலைன்னா நீ இந்நேரம் ஜெயில்ல இருப்பே. எனக்கு எதிரா இருந்தது வெறும் சர்கம்ஸ்டான்ஷியல் எவிடென்ஸ் மட்டும் தான் உனக்கு எதிரா வீடியோ எடுத்த ரெசோட்ல அவ கூட இருந்ததிக்கு வீடியோ எவிடென்ஸ் இருக்கு. வேற எவனாச்சும் இருந்து இருந்தா போகட்டும் விட்டு இருப்பேன். லவ் பண்ணி தொலைச்சிட்டேனேன்னு உனக்காக போய் படுத்தேன் பாரு” போனை கட் செய்தாள்.

ஆரூசுக்கு தத்தி மண்டைக்கு அப்போது தான் லேசாக உரைத்தது. அவள் கூட எப்படியும் தப்பித்து இருப்பாள் வீடியோ ஆதாரம் இவனுக்கு எதிராக தான் பலமாக இருந்தது.

ஆருஷ் த்ரியாவுக்கு போன் செய்து அவளை கூப்பிட வருவதாக சொல்லிவிட்டு போதையுடன் காரை ஒட்டி கொண்டு சென்றான். அவன் செல்வதற்குள் லேசாக இருட்ட தொடங்கி இருந்தது.

“ஆருஷ், இதெல்லாம் இண்டஸ்ட்ரில சகஜம். நமக்கு கல்யாணம் ஆன பின்னாடி கூட ஒரு சில பட வாய்ப்புக்கு ப்ரொட்யூசர் டைரக்டர் கூட அடஜஸ்ட் பண்ண வேண்டி வரும். இதை எல்லாம் கண்டுக்காத பிகாஸ் யு ஆர் மை ட்ரு லவ்” அவனை கட்டி அணைத்து கொண்டாள்.

இருவரும் காரில் ஏறி புறப்பட ஆருஷ் காரை ஓட்டினான்.

“உனக்கு எதிரா எவிடென்ஸ் எல்லாம் ஏரேஸ் பண்ணியாச்சு. அமிர்தா மேட்டர் இன்னையோட கிளோஸ்” த்ரியா குஷியாக சொன்னாள்.

ஆரூசுக்கு ஊட்டியின் வளைவு நெளிவுகள் போதைய இன்னும் ஏற்ற தலை சுற்ற தொடங்கியது. ஒரு வளைவில் திரும்பிய போது எதிரே வந்த அந்த காரை ஆருஷ் இடிக்க அது மலை உச்சியில் இருந்து கீழே விழுந்தது.

சுற்றும் முற்றும் த்ரியா பார்த்தாள், அங்கே யாருமே இல்லை. “ஆருஷ் நீ இங்க வா” என்று அவனை பாசஞ்சர் சீட்டில் உட்கார வைத்துவிட்டு அவளே வண்டியை ஓட்ட தொடங்கினாள்.

இரண்டு நாட்களில் எப்படியோ இவர்களின் கார் நம்பரை வைத்து போலீஸ் மோப்பம் புடிக்க மறுபடியும் டிஜிபி உதவியுடன் அதில் இருந்து லாவகமாக வெளியே வந்தனர் இருவரும்.

அதில் இருந்து த்ரியா ஆருஷ் ஒரு பியர் அடித்து விட்டு காரை ஓட்டினால் கூட நீ ட்ரின்க் பண்ணிட்டு ட்ரைவ் பண்ணுற லட்சணம் தான் ஊட்டிலயே நான் பார்த்தேனே என்று அவள் மூடிற்கு ஏற்றார் போல விளையாட்டாகவோ இல்லை கோவமாகவோ சொல்லுவாள்.

அவர்கள் நடித்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக இருவரின் கல்யாணம் நீண்ட நாட்களாக வந்த கிசுகிசுக்களை எல்லாம் உறுதி செய்யும் விதமாக அமைந்தது.

இன்று,

Atm வாசலை பார்த்தவுடன் ஆறுசுக்கு சுய நினைவு வந்தது. தன்னிடம் இருந்த கார்டை எல்லாம் உபாயயோகித்து ஒவ்வொரு கார்டிலும் எடுக்க முடிந்த அளவுக்கு எடுத்தான்.

அப்போது ஆருஷின் போன் அடித்தது. அணு என்று திரையில் மின்னியது.

“ஹெலோ அணு”

“….”

“அணு யூ தேர்”

“ஹலோ” ஒரு ரோபோட் குரலில் வாய்ஸ் சேஞ்சர் வைத்து யாரோ பேசினார்கள். ஆணா இல்லை பெண்ணா என்பது தெளிவாக இல்லை.

“நீ யாரு அனு எங்கே”

“அனுவை நான் கடத்திட்டேன், அவ உனக்கு வேணும்னா உன்னோட போனுக்கு ஒரு லொகேஷன் அனுப்பி இருக்கேன் அங்கே உடனே கிளம்பி வா”

“நீ யாரு”

லைன் கட் செய்ய பட்டது. உடனே அவன் போனிற்கு எந்த இடத்திற்கு வர வேண்டும் என்று மெஸ்ஸஜ் வந்தது.

“ஆரூஸ் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு நின்று கொண்டு இருந்தான்”

உன்னோட லொகேஷன் ட்ராக் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன் ஆருஷ். டைமை வேஸ்ட் பண்ணாம உடனே கிளம்பி வா இல்லேன்னா இந்த போட்டோஸ் எல்லாம் லீக் ஆகும் அனுவுடன் நெருக்கமாக இருக்கும் சில போட்டோக்கள் அவனுக்கு வந்தது.

அதில சில போட்டோக்கள் அனுவை த்ரியாவின் வீட்டிற்குள் கூட்டி போன போது எடுத்த போட்டோக்கள். அனுவுக்கும், ஆரூசுக்கும் இருக்கும் தொடர்பு த்ரியாவை தவிர யாருக்கும் தெரியாது, கண்டிப்பாக இது த்ரியாவின் கேமாக தான் இருக்கும் என்று ஏற்கனவே இருந்த அவனுடைய நினைப்பை அந்த போட்டோக்கள் உறுதி படுத்தியது.

அவன் மெஸ்ஸஜில் வந்த இடத்தை நோக்கி GPS செட் செய்துவிட்டு காரை விரட்ட தொடங்கினான்.

ஆருஷ் gps வழிகாட்ட அந்த இடத்தை நோக்கி காரை ஓட்டினான். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி 5 நிமிடம் உள்ளே சென்றவுடன் ஒரு ஆளில்லாத காடு வந்தவுடன் “யூ ஹாவ் அரைவட்” என்று gps கத்தியது. ஆருஷ் கீழே இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தான் கும்மிருட்டாக ஆளில்லாமல் இருந்தது. கடிகாரத்தை பார்த்தான் மணி 10.30 ஆகி இருந்தது.