சுமா ஆருஷின் பாடியை காணவில்லை என்று சொன்னதும் அவனுக்கு தூக்கி வாரி போட்டது.
“என்ன அத்தை சொல்லுறீங்க, எங்கே காணாம போச்சி எப்படி”
“எனக்கு ஒண்ணுமே தெரியல மாப்பிள்ளை, நான் முன்னாடி சீட்ல உக்கார்ந்து இருந்தேன். இங்கே திருச்சி வந்து பின்னாடி வேனை ஓபன் பண்ணி பார்த்தா த்ரியாவோட பாடியை காணோம்”
“வாட் அது எப்படி காணாம போகும், வேனை எங்கயாச்சும் நடுவில ஸ்டாப் பண்ணீங்களா”
“லன்ச் சாப்பிட, அப்புறம் டி சாப்பிடன்னு 3,4 இடத்துல ஸ்டாப் பண்ணினோம். இப்போ என்ன பண்ணலாம் மாப்பிள்ளை”
“எனக்கு தெரில அத்தை. போலீஸ் கிட்ட சொல்லிடலாமா”
“மெட்ராஸ்ல நம்ம வீட்டுல இன்வெஸ்டிகட் பண்ணின இன்ஸ்பெக்டர் கிட்ட போன் பண்ணி சொன்னேன். அவரு டைரெக்ட்டா போனா மீடியா முழுக்க பெரிய நியூஸ் ஆகிடும்னு அவரே திருச்சி இன்ஸ்பெக்ட்டர் கிட்ட பெர்சோனால பேசிட்டு கால் பண்ணுறேன்ன்னு வெயிட் பண்ண சொல்லி இருக்காரு”
“ஹ்ம்ம்”
“நீங்க வர எவளோ நேரம் ஆகும்”
“இன்னும் 3 ஹவர்ஸ்ல இருப்பேன் அத்தை”
“சீக்கிரம் வாங்க மாப்பிள்ளை, இந்த போலீஸ் அது இது எல்லாம்..” சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அழ தொடங்கினாள்.
“நான் சீக்கிரம் வந்துடுறேன் அத்தை” சொல்லிவிட்டு போனை கட் செய்தான்.
“பக் பக் பக்..” என்று கடுப்பாகி பக்கத்தில் இருந்த டேபிளில் குத்தினான்.
“என்னாச்சு ஆருஷ், ஏன் டென்ஷனா இருக்கே” அனு கேட்டாள்.
“த்ரியாவோட பாடியை காணுமாம், அத்தை போன் போட்டு சொன்னாங்க”
“வாட் அதெப்படி பாடி காணாம போகும்”
“எனக்கு என்ன நடக்குதுன்னே சத்தியமா புரியல அனு”
“த்ரியா ஸ்பைன்ல குடியுரிமை வாங்கியதாச்சும் உனக்கு தெரியுமா”
“ஸ்பைன்லயா!! இது யாரு சொன்னா. எல்லா நிவ்ஸ் சேனல் முழுக்க இது தானே ஓடிக்கிட்டு இருக்கு உனக்கு தெரியாதா”
“நோ”
“டீவியை ஆன் செய்தாள்”
“ஸ்பெயினில் குடியுரிமை பெற்ற இருந்த நடிகை த்ரியா. நடிப்புக்கு ஒரேடியாக முழுப்பு போட்டுவிட்டு ஸ்பெயினில் போய் குடியேற திட்டம் வைத்து இருந்தாரா த்ரியா?” என்று ஓடிக்கொண்டு இருந்ததை பார்த்த ஆருஷ் அதிர்ச்சி ஆனான்.
“ஐ நீட் எ ட்ரின்க் அனு” சொல்லிவிட்டு பிரிட்ஜ்ஐ திறந்து அங்கே இருந்தே ஒரு பியர் பாட்டிலை காலி செய்தான். அனு அவனை கவலையுடன் பார்த்து கொண்டு இருந்தாள்.
கடைசியாக விஷம் கலந்த அந்த ஒயினை த்ரியாவிடம் கொடுத்துவிட்டு ஆருஷ் சென்றவுடன் “உனக்கு சர்ப்ரைஸ் வச்சி இருக்கேன்” என்று த்ரியா அனுப்பிய அந்த மெஸ்ஸஜை பார்த்தான்.
ஒருவேளை அவள் சொன்ன சர்ப்ரைஸ் ஸ்பெயினுக்கு போய் செட்டில் ஆவதாக தான் இருக்குமோ. அனுவை பற்றி தெரிந்து கொண்ட த்ரியா வெறும் காலை மட்டும் உடைத்தது இரண்டு பேரையும் சேர்த்து ஒன்றாக பழிவாங்க தானா. ஆருஷ் தீவிர யோசனையில் மூழ்கினான்.
“ஆருஸ் நீ இப்படி யோசிக்கிறது பார்த்தா எனக்கு பயமா இருக்கு.. என்ன யோசிக்குறேன்னு சொல்லு ப்ளீஸ்” அனு பயத்துடன் சொன்னாள்.
“த்ரியா அவளுக்கு மட்டும் சிட்டிசன்ஷிப் ஆஃப்லை பண்ணி இருக்கான்னா, என்னை விட்டு விலகுறதுன்னு முடிவு பண்ணிட்டான்னு அர்த்தம். அப்போ..” பாதிலயிலே நிறுத்தினான்.
“அப்போ என்ன ஆருஷ்” அனு பயத்துடன் கேட்டாள்.
“நம்ம ரெண்டு பேரு உயிருக்கும் ஆபத்து இருக்கு”
அனுவின் முகம் பயத்தில் சிவக்க கைகள் நடுங்கியது.
“ரெண்டு பேரும் யாரு கண்ணுக்கும் மாட்டாம ஆகிடனும்”
“என்ன ஆபத்து எனக்கு, ஒண்ணுமே புரியல”
“த்ரியா இன்னும் சாகலை, செத்துட்டா மாதிரி ஆக்டிங் விட்டு எல்லாரையும் நம்ப வச்சி, நம்ம ரெண்டு பேரையும் சைலென்ட்டா தீர்த்துக்கட்டி ஸ்பெயின்ல போய் செட்டில் ஆகி இருப்பா”
“வாட்.. அவ தான் செத்துட்டாளே. டெத் செர்டிபிகேட் கூட இருக்கே”
“எல்லாமே செட்டப் அனு, யோசிச்சி பாரு. அவ கீழே விழுந்து கிடந்ததா முதல்ல இன்போர்ம் பண்ண செக்கூரிட்டி கார்ட், செத்ததா பாரஸ்ட் அனவுன்ஸ் பண்ண பேமிலி டாகடர் எல்லாமே அவளுக்கு வேண்டிய ஆளுங்க”
“பட், போலீஸ் இன்வெஸ்டிகஸன் போஸ்ட் மார்ட்டம் எல்லாம் அவ டெட்னு இருக்கே”
“போலீஸ் இன்ஸ்பெக்டர் த்ரியாவோட பேன்ன்னு சொன்னான். போஸ்ட் மார்ட்டம் நான் போறேன்னு சொல்லியும் சுமா தான் கூட போனா, ஐ திங்க் எல்லாரும் சேர்ந்து பிளான் பண்ணி பண்ணுறாங்க”
“நீ சொல்லுறது எல்லாமே இருந்தாலும், த்ரியா என்ன அவளோ நேரம் செத்த பொணம் மாதிரி நடிச்சாலா”
“உனக்கு நடிப்பை பத்தி என்ன தெரியும் அனு. த்ரியா ஒரு மெத்தெட் ஆக்டர் அவ படத்துல நடிக்க மாட்டா அந்த கேரக்ட்டரா வாழுவா”
அனு மௌனம் ஆனாள்.
“நீ எல்லாம் பாக் பண்ணி வை, நான் பணம் எடுத்து வந்துடுறேன், இனி இங்கே இருக்கே ஒவ்வொரு நிமிஷமும் நம்ம ரெண்டு பேருக்கும் டேஞ்சர்”
ஆருஷ் காரை எடுத்துக்கொண்டு பணம் எடுக்க செல்ல அவனின் நினைவலைகள் பின்னோக்கி ஓட தொடங்கியது.
வருடங்களுக்கு முன்பு, த்ரியா உச்சத்தில் இருந்த நேரம்.