“உன்கிட்ட ப்ரூப் இருக்கா”
“ஆருஷ் அமிர்தா எடுத்த போட்டோதான் இருக்கு என்று” இருவரும் எடுத்த போட்டோ ஒன்றை காட்டினாள்.
“இது எல்லாம் பத்தாது”
“அட போங்க சார். அவங்க ரெண்டு பேரும் கொன்னது வீடியோ இருந்தா கூடதான் பத்தாது. நம்ம நாட்டுல என்னைக்கு சார் சட்டம் ஒரே மாதிரி இருந்து இருக்கு. அரசியல்வாதி, பணக்காரங்களுக்கு ஒரு சட்டம் நம்மள மாதிரி சாதாரண மக்களுக்கு வேற ஒரு சட்டம்”
எப்பாடு பட்டாவது தன்னுடைய காரை இடித்தது ஆருஷின் கார் தான் என்று சட்டத்தின் முன்பு நிறுத்திவிடலாம் என்று நினைத்த அவனுக்கு சின்ன பெண் தான் என்றாலும் அனு சொன்னது ஆனந்திற்கு உண்மையை உணர்த்தியது.
“அனு, நீ சொல்லுறது கரெக்ட் தான். என்னோட காரை இடிச்சது கூட த்ரியாவோட கார் தான். நான் எவளோ சொல்லியும் FIRல எங்களை இன்னொரு கார் இடிச்சது மாதிரி கூட இல்லை”
“நம்மளால வேடிக்கை மட்டும் தான் சார் பார்க்க முடியும். கால் மணி நேரத்துல சாப்பிட வாங்க” அணு கிட்சன் சென்றாள்.
வேடிக்கை மட்டும் தான் சார் பார்க்க முடியும் என்கிற அந்த வார்த்தை மட்டும் அவன் காதுக்குள் ரீங்காரமாக ஒலித்தது.
“என்னோட குடும்பத்தையே சீர்குலைச்ச அவங்களை என்னாலே சும்மா விட்டு விட முடியாது அனு”
“என்னை அக்கறையா பார்த்துக்கிட்டது எங்க அம்மா கூட கிடையாது ஒன்னு அமிர்தா. இன்னொன்னு பிரபா அக்கா அவங்க ரெண்டு பேரோட சாவுக்கும் காரணம் த்ரியா ஆருஷ் ரெண்டு பேரு தான். எனக்கு பழி வாங்கனும் ஆசை தான் ஆனா அவங்க கிட்ட கூட நெருங்க முடியாதே”
“பொறுமையும் வில் பவர் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம் அனு”.
“அவங்க ரெண்டு பேரை பழிவாங்கணும்னா நான் என்ன வேணும்னாலும் செய்யுறேன்” அனு அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.
அந்த நேரத்தில் சுச்சி லீக்ஸ் சக்கை போடு போட மச்சி லீக்ஸ் என்ற பெயரில் ஆனந்த் ஒரு அக்கௌன்ட், வெப்சைட் தொடங்கி அவனது ஹாக்கிங் திறமையை பயன்படுத்தி சினிமா கிசுகிசுக்களை கொடுத்து நீங்காத ஒரு பிராண்ட் வால்யூ உண்டாக்கினான். இருந்தாலும் அவனின் டார்கெட் எல்லாம் த்ரியா, ஆருஷ் மீது மட்டும் தான்.
ஆருஷ் த்ரியாவை கல்யாணம் செய்தலும் அவன் BDSM வெப்சைட் பார்த்து வந்த ஹிஸ்டரியை எல்லாம் வைத்து ஒரு பெண்ணை வைத்து ட்ராப் செய்ய முடிவு செய்தான். அனு தானே செல்வதாக கூறி வேண்டும் என்றே அவன் வலையில் வீழ்ந்து கொஞ்சம் கொஞ்சமாக த்ரியாவுக்கும் இவனுக்கும் இடைவெளி உண்டாக்க மச்சி லீக்சில் வந்த செய்திகள் வதந்திகள் எல்லாம் இருவருக்கும் இருந்த இடைவெளியை இன்னும் கூட்ட செய்தது. கடைசியாக ஆருசே தன்னுடைய கையால் விஷம் கொடுத்து த்ரியவாய் கொன்றான்.
“இவங்க ரெண்டு பேருக்கும் சமாதி கூட வைக்க கூடாது மாமா, செத்துட்டாங்களா உயிரோடு இருக்காங்களான்னு கூட தெரிய கூடாது” அனு சொன்னது அவனுக்கு சரியாக பட்டது. த்ரியாவின் சடலத்தை கடத்தி ஆறுசயும் அதே இடத்திற்கு வரவைத்தார்கள் இருவரும்.
நிகழ்காலத்தில்,
ஆம்னி வேனை திறந்து பார்த்த ஆரூஸ் உறைந்து போனான்.
உள்ளே அனு இல்லை இருந்தது த்ரியா.. ஆம் அவன் விஷம் கொடுத்து கொன்ற த்ரியாவே தான். சென்னை வீட்டில் இருந்து அடக்கம் செய்ய பார்த்தபோது ஏற்றிய அதே பிரீசர் வைத்த பெட்டியில் பிணமாக தான் கிடந்தாள்.
“டேய் நீ யாரு உனக்கு என்ன வேணும்”
“இந்த இடம் ஞாபகம் இருக்கா”
“இல்லை”
“இல்லையா, இப்போ ஞாபகம் வரும் பாரு” வேனின் ஹண்ட்ப்ரெக் எடுத்துவிட “ஏய் ஏய் ஏய்” ஆருஷ் சுதாரிக்கும் முன்னே த்ரியாவின் சடலத்தோடு அந்த வேன் மலை உச்சியில் இருந்து கீழே விழுந்தது.
“நீ இடிச்சப்போ என்னோட காரும் இப்படி தான் கீழே விழுந்திச்சு”
“ஷிட் ஷிட் அதுக்குன்னு..அது யாருன்னு தெரியும்ல” ஆறுசுக்கு வார்த்தைகளே வரவில்லை.
“தெரியும் நீ தானே விஷம் கொடுத்து சாவடிச்ச, நீ என்ன அவளை மாதிரி விஷம் குடிச்சு சாகுரியா இல்லை…”
“வேணாம் ப்ளீஸ். நான் தான் அக்க்சிடெண்ட் பண்ணினேன்னு உண்மையா போலீஸ் கிட்ட ஒதுக்குறேன்”
“ஓத்துக்கிட்டு ஒரு வாரத்தில பைல வந்து ஜாலியா இருப்பே. நாங்க என்னவோ தப்பு பண்ணவன் மாதிரி ஸ்ட்டஸனுக்கும் கோர்ட்டுக்கும் சுத்தணும். எங்களை மாதிரி சாதாரண மனுசன் எல்லாம் சட்டம் பார்த்துக்கும் சட்டம் பார்த்துக்கும் விட்டதாலே தாண்டா ஏழைக்கு சின்ன சின்ன தப்புக்கு எல்லாம் தண்டனை கொடுக்குற சட்டம் எவளோ பெரிய தப்பு பண்ணினாலும் பணக்காரனை மட்டும் சந்தோசமா சுத்த விடுது.அதனாலே தான் நீ பண்ணின தப்பு தண்டனை கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்”
“அப்படி என்ன பெருசா தப்பு பண்ணிட்டேன் அது ஒரு ஆக்சிடென்ட்”
“கரெக்ட்தான்..”
“இது யாருன்னு தெரியுதா..” அமிர்தாவின் போட்டோவை காட்டிக்கொண்டே இருட்டில் இருந்து வந்தாள் அனு.
“அமிர்தா.. அனு..உனக்கு எப்படி தெரியும்”
“அவ என்னோட அக்கா, உன்னை நம்பி ஏமாந்து போன என்னோட அக்கா. அதனாலே தான் உன்னை ஏமாத்தி உன் கையாலே த்ரியாவுக்கு விஷம் கொடுக்க வச்சேன்”
“யூ” என்று அடிக்க ஓங்கிய அவனின் கையை ஆனந்த் தடுக்க “நீ எப்போவுமே சொல்லுவியே அது என்ன பைன் வித் பிளேசர் தானே. இவளோ நாளா என்கிட்ட பிளேசர் அனுபவிச்ச நொவ் இட்ஸ் டைம் பார் பைன்” என்று அவனை தள்ள அந்த அகல பாதாளத்தில் அவனும் போய் விழுந்தான்.
அடுத்த நாள் மச்சி லீக்ஸ் தளத்தில் ஆருசு பெயரில் கேரளாவில் இருந்து ஸ்பெயினுக்கு புக் செய்துஇருந்த டிக்கெட் வெளியிடப்பட மற்ற செய்திகள் எல்லாம் ஆருஷ் த்ரியா இருவரும் ஸ்பெயினில் செட்டில் ஆகிவிட்டனர் என்பது போல வெளியிட மக்கள் அவர்கள் அங்கே போய்விட்டதாக நம்ப தொடங்கினர். சில மாதங்களில் முதல் பக்கத்தில் வந்த செய்தி எட்டாம் பக்கம் போய் சுவாரசியம் இல்லாமல் போனதில் ஒரேடியாக நிறுத்தப்பட்டது.
சில மாதங்கள் கழித்து.
மும்பை மாநகரம், அந்த பெரிய பாலிவுட் ஹீரோ போனில் கடுப்பாக பேசிக்கொண்டு வந்தான்.
“அது எப்படி என்னை பத்தி தப்பான நீவ்ஸ் போடலாம்”
“அதில்ல சார், அந்த பொண்ணு நீங்க தப்பா நடந்துக்கிட்டது ஆதாரத்தோடு காட்டினாங்க”
“காட்டினா நிவ்ஸ் போடுவியா.”
