புதிய முயற்சி – Part 5 102

“ஏய் நீ சொன்ன இடத்துக்கு வந்துட்டேன் அனு எங்கே”

“அப்படியே முன்னாடி வா அடுத்த U பெண்ட் வரும் அங்கே காரை நிறுத்து”

ஆருஷ் காரை அந்த யு பேண்டில் நிறுத்தினான், ரோட்டின் ஓரத்தில் தடுப்பை இடித்து கொண்டு ஒரு மாருதி ஆம்னி வேன் நின்று கொண்டு இருந்தது”

ஆருஷ் காரை விட்டு இறங்கியவுடன் அவன் இதுவரை பார்த்திராத ஒருவன் எதிரில் நின்று கொண்டு இருந்தான். கண்ணாடி போட்டு அரைவழுக்கை விழுந்து 40 வயது இருக்கும் அவனுக்கு.

“யாருடா நீ, உனக்கு என்ன வேணும்”

“..”

“நீ சொன்னபடி தான் செஞ்சிட்டேனே, இப்போ சொல்லு அணு எங்கே”

அவன் ஆம்னி காரை பார்க்க ஆருஷ் வேகமாக ஆம்னி காரை நோக்கி ஓடி திறந்தான். திறந்து பார்த்தவன் உறைந்து போனான் உள்ளே அணு இல்லை இருந்தது த்ரியா.

சில வருடங்களுக்கு முன்பு,

“பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க” 8 மாத கர்ப்பிணியான பொறுமையாக சுவற்றை தாங்கி எழுந்தாள் பிரபா.
“நான் வேணும்னா வரலைன்னு போன் பண்ணி சொல்லிடவா” போக மனமில்லாமல் கேட்டான் ஆனந்த்.

“எவ்ளோ பெரிய கம்பெனி, உங்களை நேர்ல பார்க்கணும்னு கூப்பிட்டு இருக்காங்க. மரியாதைக்காச்சும் போய் பார்த்துட்டு அமெரிக்காவை ரெண்டு வாரம் சுத்தி பார்த்துட்டு வாங்க” புன்முறுவலுடன் சொன்னால் பிரபா.

அவனை அணைத்து உச்சி முகர்ந்து, முத்தமிட்டு போக மனமில்லாமல் ஆனந்த் அமெரிக்கா சென்றான். அவன் அமெரிக்கா சென்றாலும் அவனது நினைவுகள் முழுக்க கருவில் 8 மாத குழந்தையை தனிமையில் சுமந்து இருக்கும் அவள் மனைவி மீது தான் இருந்தது.

அமெரிக்க சென்ற நான்கு நாட்கள் சென்ற நிலையில் அந்த பிரபல கம்பெனி CEO அவனை நேரில் சந்தித்தார்.

“தேங்க்ஸ் ஆனந்த். நீங்க நேர்ல வந்ததுக்கு. இப்போ சமீபத்திலே அனானிமஸ் அப்படிங்குற க்ரூப் பல சாப்ட்டவர் கம்பெனி ஹேக் பண்ணி நிறைய நஷ்டம் ஆச்சு. ஆனா நீங்க முன்கூட்டியே கிரிட்டிகள் பக்ஸ் எல்லாம் கண்டிபிடிச்சு சொன்னதாலே எங்களால் அதுல இருந்து தப்பிக்க முடிஞ்சிச்சிச்சு. சோ தேங்க்ஸ்”

“அதுக்கு நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்லுறதை விட உங்க கம்பெனியோட அருமையான பக் பவுண்டி ப்ரோக்ராம் கொண்டு வந்தவரை தான் தேங்க்ஸ் சொல்லணும்.”

“அதை கொண்டு வந்ததே நான் தான் Mr ஆனந்த். நான் மிச்ச CEO மாதிரி பிரோபிட் ஓரியண்டட் ஆளு கிடையாது. பை தி வே நான் தேங்க்ஸ் சொல்லணும்னு உங்களை வர வைச்சது எல்லாம் ஒரு சாக்கு தான். உண்மையில நீங்க என்னோட கம்பெனில செக்கூரிட்டி எக்ஸ்பெர்டா ஜாயின் பண்ண முடியுமான்னு கேட்க தான்”

“இல்லை சார்”

“உங்களோட சாலேரி கேட்கலையே” கிட்டத்தட்ட மாத வருமானமே 7 இலக்கத்தை தொட்டது.

“மணி எல்லாம் ஒரு பொருட்டே இல்லை சார். நான், என்னோட வைப், சுத்தி இருக்கிற இயற்கை நிறைஞ்ச இடம் இதுவே எனக்கு போதும் சார்”

“இவளோ ஆபர் பண்ணியும் ரிஜெக்ட் பண்ணிட்டு பொண்டாட்டி, ஊரு தான் வேணும்னு சொல்லுற ஆளை நான் பார்த்தது இல்லை. எனிவே நீங்க ரீகன்சிடர் பண்ணினா எனக்கு கால் பண்ணுங்க. என்னோட பெர்சனல் நம்பர்”

“ஸ்யூர் சார்”

“நைஸ் மீட்டிங் யூ” சொல்லிவிட்டு அவர் சென்றுவிட ஆனந்தின் போனிற்கு அவன் மனைவியின் போனில் இருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ, உங்க ஒய்ப் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்காங்க. உங்களால் கிளம்பி வர முடியுமா”

“நீங்க யாரு பிரபா எங்கே”

“ஹாஸ்ப்பிட்டல்ல செக்அப்புனு வந்தவங்க மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க”

“ஐயோ”

“பயப்படாதீங்க சார் ரொம்ப சீரியஸ் எல்லாம் இல்லை. நீங்க வர வரைக்கும் நான் வெயிட் பண்ணுறேன்”

“நான் அமெரிக்கால இருக்கேன்”

“இதுல ஹாஸ்பேண்ட் அப்படினு இருந்திச்சு அது தான் கால் பண்ணினேன். வேற ஏதாச்சும் நம்பர் இருக்கா”

“வேற வேற யாரும் இல்லை. நான் இப்போ கிளம்பினா கூட வர 2 நாள் ஆகும்”

“இதுக்காக எல்லாம் கிளம்பி வராதீங்க, நானே என் அக்கா மாதிரி கூட இருந்து பார்த்துக்கறேன்”

“தேங்க்ஸ் மா, உன்னோட பேரு என்ன?”

“அமிர்தா”

ஆனந்த் அன்று இரவே பிளைட் டிக்கெட் போட்டு வீட்டிற்கு கிளம்பி வந்தான், நேராக ஹாஸ்பிடல் சென்ற போது கொஞ்ச நேரம் முன்னாடி தான் டிஸ்சார்ஜ் ஆகி போனதாக சொல்ல வீட்டிற்கு வந்த போது கதவை திறந்தது அமிர்தா.

“என் கூட போன் பேசிட்டு வெச்ச உடனே அமெரிக்கால இருந்து கிளம்பிடீங்களா” சிரித்து கொண்டே கேட்டாள் அமிர்தா.

“பிரபா எங்கே?” கேட்டுக்கொண்டே பெட்ரூம் நோக்கி சென்றான்.

அங்கே அவள் கட்டிலில் சாய்ந்து உக்கார்ந்து இருந்தாள்.

“என்னாச்சு பிரபா”

“வயறு லேசா வலிக்குற மாதிரி இருக்குனு ஹாஸ்பிடல் போனேன், அங்கேயேமயங்கி விழுந்துட்டேன் போல. இவளும் தங்கச்சியும் தான் கூட இருந்து பார்த்துக்கிட்டாங்க” பிரபா சொன்னாள்.

“ரொம்ப தேங்க்ஸ் அமிர்தா, உன் தங்கச்சிக்கு சொல்லிடு”

“சரி சார் நான் கிளம்பறேன்”

அமிர்தா சொல்லிவிட்டு கிளம்பியவுடன் “நல்ல பொண்ணு இல்ல” என்றான்.