புதிய முயற்சி – Part 2 120

“அப்போ காஜல் அகர்வால்”

“அவ எல்லாம் போல்ட் ஸீன் நடிக்க மாட்டா, ப்ளஸ் அவளுக்கு 30 வயசு மேல ஆயிடிச்சு. அந்த காரெக்டருக்கு ஸ்வீட்டா இன்னொசெண்டான ஒரு பொண்ணு தான் கரரெக்ட்டா இருப்பா”

“அப்படி எந்த ஹீரோயின் இருக்கா”

“ஹைபோதேடிக்கல்லா தானே, கார்ரேண்டா பீல்டுல இருக்கணும்னு அவசியம் இல்லை”

“அப்போ யாரை சொல்லுறே”

“நீ தாண்டி”

“சீய்ய்ய்” வெட்கப்பட்டாள் அனு.

ஆருஷின் படத்தின் கடைசி நாள் சூட்டிங் அன்று மத்தியதோடு முடிந்து வ்ராப் செய்யப்பட்டது.

“அனு சாயங்காலம் பார்ட்டி இருக்கு ரெசார்ட்டுக்கு வந்திடு” ஷூட்டிங் முடிந்தவுடன் காமெராமேன் அவளை அழைத்தார்.

“இல்லை பரவாயில்ல சார். எனக்கு க்ரோவ்ட் எல்லாம் புடிக்காது”

“அப்படின்னா சரிம்மா உன்னோட இஷ்டம்” அதன் பிறகு காமெராமேன் அவளை கட்டாய படுத்தவில்லை. அவள் அங்கிருந்து கிளம்பி வீட்டை சென்று அடையும் போது ஆருஷிடம் இருந்து கால் வந்தது.

“என்ன அனு, பார்ட்டிக்கு நீ வரலன்னு காமெராமென் கிட்டே சொன்னியாமே”

“இதுவரைக்கும் படத்துல வேலை பார்த்த மொத்த யூனிட்டும்ல அங்கே இருக்கும். எனக்கு கூட்டம் அதிகமா இருந்தா புடிக்காது”

“அதுதான் உண்மையான ரீசனா இல்லை காமெராமேன் பத்தி நான் அன்னைக்கு சொன்னதை வச்சா”

“அப்படி எல்லாம் இல்லை ஆருஷ். நான் போட்டோகிராபி எடுத்த முக்கிய காரணமே காமெராக்கு பின்னாடி ஒளிஞ்சிக்க தான்”

“மீடியால இருந்து கூட்டத்தை பார்த்து பயப்படலாமா?”

“எல்லாருக்கும் ஏதாச்சும் ஒரு பயம் இருக்க தானே செய்யும். ஏன் உனக்கு எந்த பயமும் இல்லையா ஆருஷ்”

“த்ரியா. எல்லா புருசனும் பொண்டாட்டிக்கு பயந்து தானே ஆகணும். ஹாஹாஹா.”

“ஹாஹாஹா”

“சிரிச்சி மழுப்பாதே அனு. நீ வா ட்ரிங்க்ஸ் பார்ட்டி எல்லாம் லேட்டா தான் ஆரம்பிக்கும், நீ அதுக்கு முன்னாடி வந்து அட்லீஸ்ட் டின்னெர் சாப்பிட்டு போ. நானும் ட்ரின்க் பண்ண போறது இல்லை. பார்ட்டி முடிஞ்ச உடனே நானே உன்னை ட்ரோப் பண்ணிடுறேன்.”

“சரி வரேன்”

“ப்ரோமிஸ்?”

“ப்ரோமிஸ்ஸா. உனக்காக வர்றேன்”

“தட்ஸ் தி ஸ்பிரிட்”

“சரி நான் போன் கட் பண்ணுறேன் ஆருஷ். பார்ட்டிக்கு போக வேணாம்னு சும்மா இருந்துட்டேன். இப்போ என்ன டிரஸ் போடுறதுன்னு யோசிக்கவே டைம் ஆகும்”

“ஹாஹாஹா சரி பை”

ஆருஷ் பார்ட்டிக்கு சென்ற போது அனு முன்பே வந்து அங்கே உட்கார்ந்து இருந்தாள்.