புதிய முயற்சி – Part 2 123

“தேங்க்ஸ் சார்” என்றாள்.

“சாருக்கு சொல்லுமா, அவரு தானே உன்னைய சேர்த்து விட்டதே” என்று ஆருசை காட்டி சொல்லிவிட்டு டைரெக்ட்ர் அங்கே சும்மா இருப்பதை பார்த்தவர் “நீ இங்கேயே இரு, என் கூட வா” என்று அனுவிடம் சொல்லிவிட்டு அவளை கூட்டி கொண்டு டைரக்டர் நோக்கி சென்றனர். டைரக்டர் அவளை தட்டி கொடுத்து ஏதோ பேச தொடங்கினார்.

அதன் பிறகு அன்றைய சீன்கள் முழுக்க முடிந்த பிறகு வீட்டிற்கு சென்று குளித்து முடித்து விட்டு வந்த போது மணி இரவு 9 ஆகி இருந்தது. வந்து போனை எடுத்தவன் “தேங்க்ஸ்” என்று அனுவிடம் இருந்து மெசஜ் வந்து இருந்ததை பார்த்து ஓபன் செய்தான்.

“என்ன அனு அவருக்கு மட்டும் தேங்க்ஸ் சார் எனக்கு வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா” ரிப்லை செய்தான்.

“அவரு எனக்கு குரு மாதிரி அதனாலே அவரை சார்னு கூப்பிட்டேன்”

“அப்போ நான் ஏதாச்சும் கத்து தந்தா தான் என்னை சாருன்னு கூப்பிடுவியா” ஆருஷ் வேண்டுமென்றே கேட்டான்.

“நாட்டுரலா உங்களை அப்படி கூப்பிட வராது. இருந்தாலும் உங்களுக்கு அது தான் விருப்பம்னா அப்படியே கூப்பிடுறேன். ஆனா அதுக்கு நீங்க ஏதாச்சும் எனக்கு கத்து தரணும். அதுக்குன்னு நடிக்க கத்து தரேன்னு எல்லாம் சொல்ல கூடாது, ஏன்னா அது ஒரு கலை, எனக்கு சுட்டு போட்டாலும் வராது”

“‘எனக்கு நடிப்பு மட்டும் தான் தெரியும்னு நினைச்சியா. என்கிட்ட வேறு சில ஹிட்டன் டெலெண்ட்ஸும் இருக்கு” அவன் டைப் பண்ணி சென்ட் பட்டனை கிளிக் செய்யும் முன்பு ஆரூசுக்கு த்ரியாவிடம் இருந்து போன் வந்தது.

“ஹாய் டியர், ஷூட்டிங் முடிஞ்சி வீட்டிற்கு வந்திட்டியா”

“ஹ்ம்ம் வந்திட்டேன். நீ அதுக்குள்ள வந்திட்டியா”

ருமேனியாவுக்கும் இந்தியாவுக்கும் 3.5 மணி நேரம் வித்யாசம் இருந்தது.

“இல்லை டியர், ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து தான் பேசுறேன். செமத்தியா குளிர் அடிக்குது இங்கே”

“குட் என்ஜோய்”

“ஆமா உன்னோட ஷூட்டிங் எப்போ முடியுது”

“இன்னும் 3 டேஸ்ல”

“ஓஹ் அப்போ நீ இங்கே கிளம்பி வாயேன்”

“நோ டியர். அடுத்த பில்ம் சொன்னேன்ல அந்த படத்தோட பூஜை நெக்ஸ்ட் வீக் இருக்கு”

“ஓஹ் அதுக்குள்ளவா”

“ஆமா ப்ரொட்யூசர் ரொம்ப நல்ல நாளுன்னு பீல் பண்ணுறாரு. மதுரைல இருக்க காலேஜ்லையும் செமஸ்டர் லீவ் இருக்கிறதால ஷூட்டிங் பண்ண ஓகே சொல்லிட்டாங்க. பூஜை போட்ட உடனே அங்கே போக வேண்டியது தான்”.

“சரி டியர் அடுத்த சாட் ரெடி ஆயிடிச்சு. மிஸ் யு டியர். நான் இல்லைனு நிறைய ட்ரின்க் பண்ணாதே” த்ரியா போனை கட் செய்தாள்.

அவன் டைப் பண்ணி இருந்த மெஸ்ஸஜை டெலீட் செய்துவிட்டு “அனு உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று அனுப்பினான்.

“என்ன சொல்ல போறீங்க”

“முதல்ல இந்த ஆப் இன்ஸ்டால் பண்ணு. இப்போ இருக்க நிலமைல எவன் எதை லீக் பண்ணுவாண்னே தெரியாது. இது ரொம்ப செக்யூர் ஆப். போன் கால் மெஸ்ஸஜ் எதுவும் ட்ரெஸ் பண்ண முடியாது”