சரி சொல்லு ஆனா அன்னைக்கு மாதிரி எதுவும் அதிர்ச்சி ஆகுற மாதிரி சொல்லிராத என்று சிரித்து கொண்டே சொன்னான் .விக்கி நான் இன்னும் கொஞ்ச நாள்ல கனடா போயிடுவேன் . அதை கேட்டு ரொம்ப சந்தோசம் என்றான் .சரி சொல்றத கேளு விக்கி என்றாள் சரி சொல்லு என்றான் அங்க எங்க அக்கா எனக்கு வேலையும் பாத்து வச்சுருக்காங்க .அங்க போயிட்டேனா அப்புறம் செத்தா கூட நான் இந்தியா வர மாட்டேன் .
ஓகே அப்புறம் என்றான் .ஆனா எனக்கு இன்னும் பாஸ்போர்ட் விசா எதுவும் வரல என்றாள் ஒ நான் வேணும்னா அதுக்கு ஹெல்ப் பண்ணவா இல்ல money எதுவும் வேணுமா என்றான் .
உன் ஹெல்ப் வேணும் ஆனா இந்த ஹெல்ப் எல்லாம் வேணாம் வேற ஒரு ஹெல்ப் வேணும் என்றாள் .என்ன ஹெல்ப் வேணும் என்றான் .அது வந்து வந்து என்று தயங்கினாள் தயங்காம சொல்லு எந்த ஹெல்ப்னாலும் உனக்கு பண்றேன் என்றான் .நிஜமாத்தான் சொல்றியா என்றாள் .உன்னையே நாட்ட விட்டு அனுப்புறதுக்கு என்ன வேணும்னாலும் நான் பண்ணுவேண்டி இம்சை என்று நினைத்து கொண்டே சுயர் எதுனாலும் சொல்லு என்றான் .
விக்கி நான் கனடா போற வரைக்கும் என்னால என் ரூம்ல தங்க முடியாது . ஏன் என்ன ஆச்சு எதுவும் money ப்ரோப்லமா என்றான் .பணம் மட்டுமே பிராப்ளம்னு நினைக்காத விக்கி என்றாள் கடுப்போடு ,
சரி வேற என்ன பிராப்ளம் என்றான் . அவள் அது என்று தயங்கி கொண்டே இருந்தாள் .எதுவும் ஹொஸ்டல் வார்டன் கூட சண்ட போட்டியா என்றான் . அவள் இல்லை என்றாள் .வேற வசதி எதுவும் பத்தலையா என்றான் .இல்லை என்றாள் . அவன் கடுப்பாகி என்னதான் பிராப்ளம் சொல்லி தொல என்றான் .
அவளும் கடுப்பாகி அங்க பிரகன்ட் ஆனவாங்கள வச்சு இருக்க மாட்டங்க என்றாள் . என்னது நீ மறுபடியும் கர்ப்பமா இருக்கியா இந்த வட்டம் யார் காரணம் என்றான் புரியாமல் .
அவளுக்கு ரொம்ப எரிச்சலாகி போனது விக்கி நான் இன்னும் அபார்சன் பன்னல என்றாள் .வாட் என்றான் அதிரிச்சியோடு
ஏண்டி ஏன் பண்ணல அந்த ஆஸ்பத்திரிலயும் பண்ண முடியாதுன்னு சொல்லிருந்தா வேற ஆஸ்பத்திரிக்கு போயிருக்க வேண்டியதுதானே ஏன் இன்னும் அத சுமந்துகிட்டு இருக்க என்றான் .
என்னால எந்த ஆஸ்பத்திரிலயும் போயி பண்ண முடியாது என்றாள் . ஏண்டி இத வச்சு என்னையே மிரட்டி கல்யாணம் பண்ணிக்கலாம்னு பாக்குறியா என்றான் .சுவாதி கடுப்பாகி சரி இது உன் குழந்தை இல்லை போதுமா என்றாள் .
உடனே விக்கி சந்தோசமாக சிரித்து கொண்டே அவள் கிட்ட போயி நிஜமாவே இது என் குழந்தை இல்லையா என்றான் .
எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்ன இங்கயே கொன்னு போட்ரலாம்னு இருக்கு என்று மனதில் நினைத்து கொண்டு வெளியே ஆமா இது உன் குழந்தை இல்ல என்றாள் .
அப்புறம் இது யார் குழந்தை என்று சிரித்து கொண்டே கேட்டான் .ம்ம் என் குழந்தை என்றாள் .ஓகே ஓகே இது உன் குழந்தைதான் ஆனா இதுக்கு அப்பா யாரு என்றான் .அதுவும் நான்தான் என்றாள் .என்னடி குழப்புற உன் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்றான் .என் கர்ப்பத்துக்கு நீதான் காரணம் என்றாள் .
என்ன நீ வாழப்பழ காமெடி பண்ணிகிருக்க இத வச்சு என்னையே டென்ஷன் ஆக்காத என்றான் .இங்க பாரு விக்கி இது யாரு குழந்தையா வேணும்னாலும் இருந்துட்டு போட்டும் .இப்பதைக்கு இது என் குழந்தை இப்ப மேட்டர் அது இல்ல .
அப்ப என்னது என்றான் .ஓகே விக்கி நான் சொல்றத கவனமா கேளு . என்னால வயத்த தள்ளி கிட்டு ஹாஸ்டல் இருக்க முடியாது அதனால ஒரு 13 மாசத்துக்கு உன் கூட உன் வீட்ல இருந்துக்கிறேன் என்றாள் .
என்னது என் கூட என் வீட்ல இருக்க போறியா என்ன சுவாதி எனக்கு முன்னாடி போயி ஓகே கண்மணி படம் பாத்துட்டு வந்துட்டியா ஒண்ணா இருப்போம் மண்ணா போவோம்ன்னு பினாத்திகிட்டு இருக்க என்று அவளை கிண்டல் அடித்தான் .
இங்க பாரு விக்கி நான் சிரியஸா சொல்றேன் எனக்கு மும்பைல தங்க வேற இடம் தெரியாது அதே நேரத்துல கர்ப்பத்தோட என்னால பிளைட்ல போக முடியாது அதனால நான் குழந்தைய பெத்துட்டு ஒரு 3 மாசத்துல அதுக்கும் பாஸ் போர்ட் விசா எல்லாம் எடுத்துட்டு அத கூப்பிட்டு நான் கனடா போயிடுவேன் .உன் கண்லையே படமாட்டேன் சோ ப்ளிஸ் என்றாள் .
அதுக்குத்தான் உன்னையே அபார்சன் பண்ண சொன்னேன் என்றான் .இத பாரு விக்கி இது உன் குழந்தை ஒன்னும் இல்ல நீ அபார்சன் பண்ண சொல்றதுக்கு இது என் குழந்தை அதனால அத பத்தி நான்தான் முடிவு எடுக்கணும் என்றாள் .
சரி என்னமும் பண்ணு ஆனா என் கூட தங்க வைக்க முடியாது உன்னையே என்றான் .
என்னால உன்னையே என் கூட தங்க வைக்க முடியாது என்றான் விக்கி . அவள் பொறுமையாக இங்க பாரு விக்கி நான் உன்னையே என்னையே கல்யாணம் பண்ண சொல்லல என் குழந்தைக்கு உன்ன அப்பானவும் இருக்க சொல்லல .
உன்கிட்ட எதுவும் பணமும் கேக்கல . உன் கூட ஒரு 13 மாசம் உன் வீட்ல தங்கணும்னு கேக்குறேன் ப்ளிஸ் அதுக்கு மட்டும் ஒத்துக்கோ என்று கெஞ்சினாள் .
ஹே என்ன விளையாடுறியா என்னையே பத்தி உனக்கு தெரியும்ல அப்புறம் ஏன் என் கூட தங்கணும்ங்கிற என்றான் .இங்க பாரு விக்கி எனக்கு வேற வழி இல்ல . உனக்கே தெரியும் எனக்கு மும்பைல உங்க குரூப் தவிர வேற யாரையும் தெரியாது .உங்க குரூப்க்கு அப்புறம் தெரிஞ்சவங்கலாம் என் ஹாஸ்டல் தான் இருக்காங்க .