இவன் பரவலங்க இருக்கட்டும் என்றான் .அதை கேட்டு அவள் சார் நீங்க தமிழா என்று ஆச்சரியப்பட்டு கேட்டாள் .இவனும் சிரித்து கொண்டே என்னாங்க தமிழ்ல பேசுறேன் .தமிழ் படத்துக்கு வந்து இருக்கேன் அப்புறம் ஏன் என்னைய பாத்து இப்படி ஒரு கேள்வி கேக்குரிங்கே என்று சிரித்து கொண்டே சொன்னான் .
அவளும் சிரித்தாள் அதன் பின் அவன் சிரித்து கொண்டே By the way ஐ ஆம் விக்கி விக்னேஷ் என்றான் .அவளும் ஐ ஆம் என்று அவள் பேரை சொல்லும் முன் விக்கி போன் அடித்தது .எந்த நாய்டா இந்நேரம் போன் பண்றதுன்னு கடுப்போடு எடுத்து பார்த்தான் .அது சுவாதியிடம் இருந்து வந்தது அதை பார்த்து விக்கி மேலும் கடுப்பாகி விட்டு இவ ஏன் இன்னும் என் நிம்மதிய கெடுக்குறா என்று மெல்ல முணுமுணுத்து கொண்டே போனை கட் பண்ணினான் .
பரவல சும்மா பேசுங்க என்றாள் .அது தேவை இல்லாத காலுங்க நீங்க சொல்லுங்க என்றான் அசடு வழிந்து கொண்டே .அவள் மறுபடியும் ஐ ஆம் என்று ஆரம்பிக்கும் முன் மீண்டும் விக்கி போன் அடித்தது .அதை பார்த்த அந்த பெண் நீங்க போயி பேசிட்டு வாங்க எதாச்சும் முக்கியமான போனா இருக்க போகுது என்றாள் .சரி வேற வழி இல்ல எடுத்து தொலைவோம் என்று நினைத்து கொண்டு அவளை விட்டு சிறிது தொலைவு போயி போனை எடுத்தான் .
என்ன சுவாதி நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன் அப்புறம் கூப்பிடு என்றான் .எனக்கு தெரியும் நீ மீட்டிங்ல இல்லன்னு எத ஆச்சும் மால் இல்லாட்டி கிளப்ல இருப்ப அதனால நான் சொல்றத கேளு என்றாள் .அது இருக்கட்டும் நான் மீட்டிங்ல இல்லன்னு உனக்கு எப்படி தெரியும் என்றான் .கழுத கேட்டா குட்டி சுவரு இன்னைக்கு சனி கிழமை அதனால கண்டிப்பா எவலாயச்சும் தேடி எங்கயாச்சும் போயிருப்ப என்றாள் கடுப்போடு .
கரெக்ட் சுவாதி இப்ப கூட நீ பேசாட்டி ஒருத்திய பிக் ஆப் பண்ணிருப்பேன் . நீதான் கெடுத்துட்ட என்றான் .சரி நீ எவள வேணும்னாலும் பிக் ஆப் பண்ணி ஏங்க வேணும்னாலும் போயி எதாச்சும் பண்ணு ஆனா சாயங்காலம் ஒரு 5 மணி போல என்னையே பார்க்ல வந்து பாரு என்றாள் சுவாதி.
எதுக்கு உன்னையே வந்து பாக்கணும் நாந்தான் அன்னைக்கே நமக்குள்ள எதுவும் வேணாம்னு சொன்னேன்லே அப்புறம் என்ன இன்னும் என்றான் ஒன்னும் இல்ல ஒரு சின்ன விஷயம் என்றாள் .ஒரு விசயமும் வேணாம் தாயி என்னையே ஆள விடு என்றான் .இல்ல விக்கி என்று அவள் சொல்ல வரும் முன் ஹே சுவாதி நம்ம அப்புறம் பேசுவோம் நான் பாத்து பேசிகிட்டு இருந்த பொண்ண காணோம் ம்ம் இன்டர்வெல் வேற முடிஞ்சுடுச்சு நான் உள்ள போயி அவள தேடி பாக்குறேன் என்று அவள் போனை கட் பண்ணிவிட்டு உள்ளே சென்றான் விக்கி .
அங்கு சுவாதி அஞ்சலியிடம் சொன்னாள் இதலாம் சரியா வருமா அவன் இதுக்கு எல்லாம் ஒத்துக்கிறு வான் ஆ என்றாள் .
நான் சொல்ற மாதிரி சொல்லு எல்லாம் சரியா வரும் .வேற வழியும் இல்ல உனக்கு என்றாள் அஞ்சலி .
சரி பாப்போம் சாயங்காலம் வாரானா இல்லையான்னு…
அதன் பின் இடைவேளை முடிந்து படம் பாக்க உள்ளே போனான் விக்கி . அவன் படம் பார்க்கமால் தான் வெளியே அவன் பார்த்த பெண்ணை உள்ளே தேடி கொண்டு இருந்தான் .
தியேட்டர் இருட்டில் அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை .அதன் பின் சே இந்த சுவாதி ஏன் எப்ப பாத்தாலும் எதையாச்சும் என்கிட்ட இருந்து புடிங்கிகிட்டே இருக்கா என்று அவளை மனதில் திட்டிக்கொண்டே படத்தை வெறுப்போடு பார்த்தான் .
பின் படத்தின் இறுதியில் நாயகனும் நாயகியும் தாங்கள் காதலை சொல்லி கொண்டு கல்யாணம் பண்ணி கொள்வார்கள் .ஆமா எல்லா படத்துலயும் கடைசில அந்த லவ்ல விளுந்துருங்கடா என்று திட்டிவிட்டு எழுந்து போனான் .வெளியே அந்த பெண் வருவாள் என்று காத்துகொண்டு இருந்தான் .