ஏன் என் ஆபிஸ்லேயே உன் நம்பர் கேட்டு எத்தன பேரு என்னையே டார்ச்சர் பன்னிருக்கங்கே தெரியுமா நான் தான் அவ வேற ஒருத்தன லவ் பண்றான்னு சொல்லி அத்தன பேரையும் சமாதனபடுத்தி வச்சு இருந்தேன் .உன்னையே பிடிக்கலையா அந்த பக்கிக்கு என்றாள் அஞ்சலி .
அக்கா அவன் விக்கி என்றாள் சுவாதி . சரிடி ஏதோ ஒன்னு ஏன் பிடிக்கலாயாம் உன்னையே அவனுக்கு என அஞ்சலி கேட்க அவன் ஒரு வோமனைஷேர் அக்கா என்றாள் சுவாதி .என்னடி சொல்ற ஒன்னும் புரியலடி என அஞ்சலி கேட்க அவனுக்கு ஒரு பொண்ணோட இருக்க பிடிக்காதாம் என்று பதில் அளித்தாள் சுவாதி .
ஆமா அவன் பெரிய மகாராஜா பாரு பல பொண்ணுகளோடதான் இருப்பாரு பாரு அதாலம் கல்யாணம் பண்ண சரி ஆகிடுவான்டி என அஞ்சலி சொல்லஇல்லக்கா நானும் இப்ப அவன லவ் பண்ணால என்றாள் சுவாதி .ஏண்டி ஏன் அவன் பொம்பள பொருக்கிகிரதாலையே என்றாள் அஞ்சலி .
அது இல்லாக்கா எனக்கு இப்ப ஆம்பிளைகளே பிடிக்கலாக்கா முத ஒருத்தன் (டேவிட் ) என் மனச கொன்னான் .சரி இவன்(விக்கி ) ஆச்சும் அவன் கருவ சுமக்கிறேன்னு சொன்னதுக்கு அப்புறம் என் மனச புரிஞ்சுகுவானு பாத்தேன் ஆனா இவனும் என் மனசையும் கொன்னான் அவன் உயிரையே அவன் அழிக்க சொன்னான் அதனால அவன இப்ப நான் வெறுத்துட்டேன் இனி அவனே வந்தாலும் நான் முடியாதுன்னு சொல்லிடுவேன் என்றாள் சுவாதி .
அப்புறம் எதுக்குடி இந்த குழந்தைய சுமக்குற என அஞ்சலி கேட்டாள் .நான் முன்னாடியே சொன்ன மாதிரி இப்ப எனக்கு இருக்க ஒரே சொந்தம் என் குழந்தை அக்கா அத தவிர இப்ப எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்ல அது மட்டும் இல்லாம இந்த குழந்தைய இப்ப நான் விக்கி குழந்தைய நினைக்கல இது இப்ப என் குழந்தை நான் வேணும்னா இது ஏதோ ஒரு ஸ்பெர்ம் டோனட்டேர் மூலமா உருவான குழந்தையா நினைச்சுக்கிறேன் .
இனி எனக்கு யாரும் தேவை இல்லை என் குழந்தை மட்டும் போதும் வேற எந்த சொந்தமும் தேவை இல்லை என்றாள் சுவாதி . சரிடி இனி குழந்தைய சும்மகிறது உன் விருப்பம் . ஆனா இந்த ஹோஸ்டல உன்னால வயித்த தள்ளிகிட்டு இருக்க முடியாது என்று அஞ்சலி சொல்லுவும் அப்போது தான் அதை யோசித்தாள் சுவாதி .
ஆமாக்கா இப்ப என்ன பண்ண என அவளே கேட்டுவிட்டு நான் வேணும்னா இந்த ஒரு வாரம் முழுக்க ரூமுக்குள்ளேயே இருந்த மாதிரி பத்து மாசமும் இருந்துருவா நீங்க வேணும்னா எனக்கு எல்லாம் வாங்கிட்டு வாங்க என்றாள் சுவாதி .
நான் எல்லாம் உனக்காக வாங்கிட்டு வருவேன் ஆனா எப்படியும் நீ மாசம் ஒரு தடவயச்சும் செக் ஆப் போனும் அப்புறம் எப்படினாலும் பிரக்ன்ட் டெலிவரிக்கு வெளியே போனும் அது மட்டும் இல்லாம உன் வாந்தி சத்தம் இப்பவே நாம ப்ளாக் புல்லா கேட்டு பக்கத்து ரூம் காரிக எல்லாம் கேட்டுதான் நானே உன்கிட்ட கேட்டேன் இனி அது வார்டன்க்கு தெரிஞ்ச கண்டிப்பா வெளிய அனுப்பிடுவா என்ன பண்ண போற என அஞ்சலி கேட்க
சரி அக்கா இப்ப என்ன அக்கா பண்ண பேசாம நீங்களும் நானும் தனியா ரூம் வெளியே எடுத்துடுவோமா என சுவாதி கேட்டாள் . என்னால முடியாதுப்பா இந்த மும்பைல தனியா உன் ரூம் எடுக்க அது மட்டும் இல்லாம நான் தனியா ரூம் எடுத்தேன் என் புருஷன் என்னையே கொன்னே போடுவாரு என்று அஞ்சலி சொன்னாள் .
அக்கா ப்ளிஸ் அக்கா இதுக்கு எதாச்சும் ஒரு வழி சொல்லுங்கக்கா ப்ளிஸ் என கெஞ்சினாள் சுவாதி .
அஞ்சலி சிறிது நேரம் யோசித்து விட்டு சரி நான் இதுக்கு ஒரு வழி சொல்றேன் அத நீ கேக்கணும் அதுப்படிதான் நீ நடக்கணும் அத விட்டா உனக்கு வேற வழியும் இல்ல என்றாள் அஞ்சலி .
அங்கு அஞ்சலி சுவாதியிடம் என்ன செய்வது என்று சொன்னாள்.
இதலாம் சரியா வராதுக்கா அவன் இதுக்கு எல்லாம் ஒத்துக்கிற மாட்டான் என்றாள் .
நான் சொல்ற மாதிரி சொல்லு எல்லாம் சரியா வரும் .அப்புறம் இத விட்டா வேற வழியும் இல்ல உனக்கு என்றாள் அஞ்சலி .
அன்று வார இறுதி நாட்கள் என்பதால் விக்கி ரொம்ப சந்தோசமாக இருந்தான் .கடந்த ஒரு மாதமாக அப்பர்ட்மெண்டில் அங்கு tamil உள்ளவர்களோடு ஏற்பட்ட சண்டை அதன் பின் சுவாதி அவனால்தான் அவள் கர்ப்பமானள் என்பதால் அவனுக்கு ஏற்பட்ட பயம் பின் அதை அபார்சன் பண்ண முடியாது என்று சொல்லி டாக்டரும் இவனும் போட்ட சண்டை அதன் பின் கம்பனியில் இருந்த அதிகமான வேலைப்பளு இதனால் ரொம்ப மன உளைச்சலில் இருந்தான் .