மது மயக்கம்… புதிய காதல்…முதல் அனுபவம்! 90

காலையில் வந்தான் அவன்…வேலைக்காரன்.

வந்தவன் லுங்கியை சரி செய்துக்கொண்டு இருந்த என்னை பார்த்தான்.

“சார்! நீங்க இன்னும் போகலையா? என்றான்.

“இனிமேல் இங்கேதான் டேரா” என்றேன்.

அவன் கோணி சிரித்தான். “அம்மாவை கேட்டுங்க சார்” என்று சொல்லும்போதே சுஜிதா வந்தாள்.

வந்தவள் என்னை பார்த்து “சார் யாரு?” என்று கேட்டபோது எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

“சுஜிதா! நான் யார் தெரியலியா! நாந்தான் சுரேஷ்” என்றேன்.

“சுரேஷா! அவர்தான் டூர் போயிருக்காறே” என்றபோது எனக்கு லேசாக வியர்த்தது.

அந்த வேலைக்காரன் என்னிடம் சாய்ந்து “சார். அம்மாவுக்கு சுயநினைவு வந்து விட்டது போல! பேசாம ஓடிடுங்க!” என்றான்.

அதுவும் சரிதான். ஏதோ வந்தோம். வந்ததுக்கு நல்ல விருந்து. கிளம்ப வேண்டியதுதான்.. என்று சாய்ந்து சுஜிதாவை

பார்த்துக்கொண்டே வேகமாக வீட்டை விட்டு வந்தேன்..ஆனால் அவள் முகம் என்னவோ இறுக்கமாகத்தான் இருந்தது.

பட்டது போதும். நேராக வீட்டுக்கு போக வேண்டியதுதான்….

என் வீட்டை அடைந்தேன். வீட்டுக்கு வெளியில் அப்பா, அம்மா எல்லாரும் நின்றிருந்தார்கள். என்னதான்
இருந்தாலும் பாசம் போகுமா என்ன!

சிரித்தப்படி நேராக போனேன்…

எங்கப்பா ஓடி வந்து ஒரு உதை விட்டார்..

தண்ட சோறு! எவனோ ஒருத்தன் உன்னை கடத்திக்கொண்டு போயிட்டு இரவு முழுதும் ஒரே போஃன், ஒரே ரகளை.

அப்படியே விட்டு விடலாம் என்று சொன்னேன். என் அம்மாவை காட்டி இவதான் அழுது ரகளை பண்ணி உடனே பணம் கொடுக்க சொன்னாள்… தண்டகர்மம் என்றார்.

உடனே எனக்கு சுர் என்று உறைத்தது! அப்போ அந்த வேலைக்காரந்தான் கிட்நாப்பரா? உண்மையில் நான் கடத்தப்பட்டேனா?

அப்பா எவ்வளவு கொடுத்தீங்க! என்றேன்..

ஒரு லட்சம்டா, ஒரு லட்சம் என்று சொல்லிவிட்டு சரமாரியாக அவர் வார்த்தைகளை கொட்டினார் “தண்டசோறு! மட சாம்பிராணி” என்று!

முதல் முறையாக எனக்கு தோன்றியது நான் ஒருவேளை அப்பா சொல்வது போல மட சாம்பிராணிதானோ?????

“தண்டசோறு! மட சாம்பிராணி”THE END.