இவளைப் போல ஒரு பெண் தோழி கிடைக்க நான் என்ன பாக்கியம் செய்தேனோ! 112

அப்போது தன் அறையிலிருந்து வெளியே வந்த ரம்யா, “என்னடா, ப்ராஜெக்ட் வேலையெல்லாம் முடிஞ்சுதா..?” என்றாள்.

நான், “சக்ஸஸ்..!!” என்று சொல்லியபடி, கட்டை விரலைத் தூக்கிக் காட்டினேன்.

“அப்போ இன்னும் பத்து நாள் சாருக்கு ஜாலிதான்..!!” என்றாள் ரம்யா.

நாங்கள் இப்படி பேசிக்கொண்டிருக்க, அவள் அம்மாவும் அப்பாவும், “சந்தோஷ் நாங்க கொஞ்சம் அவசரமா வெளியூர் போக வேண்டியிருக்கு. நாங்க கிளம்பறோம். இவளுக்கு கம்ப்யூட்டர்ல ஏதோ ப்ராப்ளமாம், கொஞ்சம் ரெடி பண்ணி குடுப்பா..!!” என்று என்னிடம் சொல்லிவிட்டு, ரம்யாவிடம், “ஏய், வேலை முடிஞ்சதும் தம்பிய அப்படியே அனுப்பிடாத. டீ, காஃபி இல்ல ஜூஸ் எதும் போட்டுக்குடு..” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

இப்படி ஒரு வயசுக்கு வந்த பெண்ணை, ஒரு வயசுப் பையனிடம் தனியே விட்டுச் செல்லும் பெருந்தன்மை எத்தனை பேருக்கு வரும்..? எல்லாம் அவர்கள் என் மீதும் அவர்கள் மகள் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கைதான்..!!

அவர்கள் கிளம்பியதும், நான் ரம்யாவின் கம்ப்யூட்டரை ஆன் செய்து அதன் முன் அமர்ந்தேன்.

ஏன்ட்டி-வைரஸ் ப்ரோகிராமை செக் செய்து, அப்டேட் செய்தேன். பின் கம்ப்யூட்டரை செக் செய்து பார்க்கும்போது, எந்தவிதமான பிரச்சனையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

அப்போது ரம்யா, அவள் அப்பா அம்மாவை வழியனுப்பிவிட்டு, கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தாள்.

நான் அவளிடம், “ஏய் சிஸ்டம் நல்லாத்தானே இருக்கு..? அப்புறம் என்ன ப்ராப்ளம்..?” என்றேன்.