இளமை பருவத்தில் எல்லாம் சாத்தியம் தான் 8

எல்லோருக்கும் வணக்கம் என்னோட பேரு ரிஷப்லால் 45 வயசு ஆவுது, என் பேரு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னா இது என் அம்மா வெச்ச பேரு. நான் கோயம்புத்தூர்ல வைஷியா வீதியில் இருக்கிறேன், எங்களுடைய பூர்விகம் மஹாராஷ்டிரா, நாங்க 2 தலைமுறையாக இங்கேதான் இருக்கிறோம்,

எனக்குன்னு சொந்தமா சிட்டில நாலு நகை கடை இருக்கு, நல்ல வருமானம், 6 வீடு இருக்கு, பல பண்ணை வீடு இருக்கு, இன்னும் என் சொந்த ஊருல ரெண்டு பெரிய ஐடி கம்பெனில ஷார்ஸ் இருக்கு, சொத்து எப்படியும் 1000 கோடியை தாண்டும், எல்லாமே என் அக்கா மகன் ஆஷிஷ் சொல்லி தான் நான் செஞ்சது, எல்லாமே அவன் தான் பாத்துகிறான், அவன் என்னோட மருமகனும் கூட, அவனுக்கும் என் பெண்ணுக்கும் 10 வருஷம் வித்தியாசம் இருந்தா கூட நல்ல பொறுப்பான பையன், அதனாலேயே என்னோட எல்லா பொறுப்பையும் அவன்கிட்ட ஒப்படுச்சுட்டு நான் நிம்மதியா இருக்கேன்,

என் குடும்பத்தை பத்தி சொல்லனும்னா நான், என் ரெண்டு பொண்ணுங்க, 20 வயசு பொண்ணு பூஜிதா நான் முன்ன சொன்னா போல ஆஷிஷ்க்கு கட்டி குடுத்துட்டேன், அப்புறம் ரெண்டாவது பொண்ணு பூஜிமா 17 ஆச்சு மெடிக்கல் காலேஜ்ல இப்பதான் முதல் வருஷம் ஜாய்ன் பண்ணிருக்கா, என் பொண்டாட்டி சொப்னா வயசு 38, என் மாப்பிள்ளை ஆஷிஷ் வயசு 30, என் அம்மா பூஜா நான் 30 வயசா இருக்கப்போவே காலமாய்ட்டாங்க, அப்பா சாந்தி லால் வயசு 70.

பல வீடு இருந்தா கூட நாங்க 6 பேரும் ஒட்டுக்காதான் இருக்கோம். ஒரே குடும்பம் ஒரே சமையல். என் அக்கா துறவிங்கிறனால தனியா இருக்கா, நான் ரொம்ப கண்டிப்பானவன், ரிஷப்லால்னு என் பேர கேட்டாலே நடுங்குவாங்க. என்னோட குடும்பத்துலயும் அப்படித்தான், என்னோட அதிகமா பேசறது யாருனா ஆஷிஷ் தான். முதல் முதல்ல என் பொண்ணும் அவனும் காதலிக்கராங்கன்னு கேள்வி பட்டப்போ நான் ரொம்பவே சந்தோசபட்டேன், ஏன்னா எப்போ இருந்தாலும் ஆஷிஷ் என்னை விட்டு பிரிஞ்சு போய்டுவானொன்னு என் மனசு ஓரத்துல ஒரு சங்கடம் இருந்துச்சு,

என்னதான் முறை பையனா இருந்தா கூட வயசு வித்தியாசம் அதிகமா இருந்த தால நான் என் பொண்ண குடுக்கணும்னு தோணல, ஆனா என் பெண்ணே அதுக்கு ok சொல்றப்போ தடுக்க நான் யாரு. ஆஷிஷ் ரொம்ப தங்கமான பையன், என்னோட இன்னொரு பையன் போல அவன். அவங்க காதலை எனக்கு பயந்து சொல்லாம இருந்திருகாங்க நான் உடனே ok சொன்னதும் ரொம்ப சந்தோசபட்டாங்க.

என்னோட கடந்த கால வாழ்க்கை ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன், வீட்ல வறுமை ஜாஸ்தி, அக்கா, நான், என் அம்மா அப்பா தான், இப்போ எப்படி என் குடும்பத்துல என்ன மதிக்கறாங்களோ அப்படி தான் என் அப்பா, பெரிய பணக்காரர், ரொம்ப நேர்மையானவர் ஆனா வெகுளி, அவரே சொந்தமா என் அம்மா பேருல நகை கடை வெச்சிருந்தார், நாங்க வெள்ளி தட்டுலதான் சாப்பிடுவோம், ரொம்ப சந்தோஷமா இருந்தோம்.

எங்க அக்கா எங்க கூடவே இருக்கணும்னு அப்பா கொஞ்சம் ஏழையா வீட்டோட ஒரு மாப்பிள்ளை பார்த்தாரு, ஆஷிஷ் பொறந்து 2 வருஷம் இருக்கும் ஒரு accidentல என் மாமா செத்துட்டாரு, அதுதான் முதல் இடி, வாழ வேண்டிய வயசுல என் அக்கா விதவை ஆயிட்டா, அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொன்னாரு மாட்டேன்னு சொல்லி துறவி ஆயிட்டா,

அப்போ எனக்கு 15 வயசு இருக்கும், திடீர்னு ஒரு செய்தி எங்க கடைய கொள்ளை அடுச்சுடாங்கன்னு அதை கேட்டு அப்போவே எங்கப்பா ஹார்ட் அட்டாக்ல படுத்துட்டாரு,
எங்க வாழ்க்கை அப்படியே ஒரு நொடில மாறிடுச்சு, அப்பா வாங்குன கடனுக்கு எங்க வீட்ட வித்துட்டோம், நடு தெருவுக்கு வந்துட்டோம். வீட்ட வித்த மீதி காசுல தான் எங்க அப்பாவ காப்பாத்துனோம், நான் வேலைக்கு போறேன்னு சொன்னேன் அம்மா வேணாம் நீ படின்னு சொல்லிட்டாங்க, என்னை படிக்க வெக்க என் அம்மாவும், அக்காவும் சமையல் வேலை செஞ்சாங்க, எப்படியோ கஷ்டபட்டு psg காலேஜில degree முடுச்சேன்,

படுச்சு முடுச்ச ஒடனே hmtஇல் அரசாங்க வேலை உடனே நான் பெங்களூர் போய்விட்டேன், வீட்டில் எல்லோருக்கும் சந்தோசம், நல்ல வேலை ஓரளவு காசு, எங்கப்பா முழுசா குணம் ஆயிட்டாரே ஒழிய அவரால பழைய மாதிரி வேலை செய்ய முடில, ஆனா அப்பா வீட்ல இருக்கிறது எங்க அக்காக்கும் அம்மாக்கும் துணையா இருந்துச்சு, என் சம்பாத்தியம் வெச்சு ஏழைல இருந்து ஓரளவு middle கிளாஸ்ங்கிற ஸ்டேட்டஸ்க்கு வந்தோம், நான் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு மீதி பணத்தை வீட்டுக்கு அனுப்புவேன், 3மாசத்துக்கு ஒரு முறை தான் ஊருக்கு போவேன், என் அக்கா இன்னொரு அம்மா போல, என்மேல உயிர் அவளுக்கு.

என் மொத்த குடும்பமே என் வரவை எதிர் நோக்கி காத்துட்டு இருப்பாங்க, இவ்ளோ அன்பு என்மேல வெச்சிருகாங்க இவர்களுக்காக நான் என்ன செய்ய போறேன்னு நெனைக்கிறப்போ கண் கலங்கும், ஊருக்கு போறப்போ என் அப்பா என் கைய பிடிச்சி நான் செய்ய வேண்டியதை நீ செய்றப்பா, என்னால உனக்கு பக்கபலமா இருக்க முடியலப்பானு feel பண்ணுவாறு, அப்பா நீங்க சிங்கம்பா, வேட்டயாடுனாலும் சிங்கம் தான், அமைதியா ஓய்வு எடுத்தாலும் சிங்கம் தான் என்பேன், என் கைகளை பிடித்து கண்ணில் வைத்து கொள்வார்.

எங்க வாழ்க்கை இப்படியே போய்ட்டு இருந்துச்சு, ஏதாது ஒரு அதிசயம் நடந்து நான் பெரிய பணக்காரன் ஆயிட கூடத்தானு நினைப்பேன், நாங்க சந்தோசமா இருந்த காலத்தை எண்ணி பாத்துக்குவேன். நான் பார்க்க அழகாக இருப்பேன், என் அம்மாவை போல, இப்பொழுதுதான் வழுக்கை விழுந்து விட்டது. நான் பெங்களூரில் மார்வாடி தெருவில் தான் குடி இருந்தேன், அங்கே ஒருதர் அடிக்கடி benz காரில் வந்து செல்வார், அந்த காரை பார்ப்பதற்க்காகவே ரோட்டில் கூட்டம் கூடும், எல்லோரும் காரை பார்க்க நான் மட்டும் காரில் உள்ளே இருக்கும் பெண்ணை பார்த்தேன், வயது பெண் நல்ல அழகாக இருந்தாள், அவளை பார்த்ததும் ஒரு ஈர்ப்பு என் மனதுக்குள், ஏனென்றால் பார்க்க என் அம்மா போலவே இருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *