நான் ஜெகவீர பாண்டியன். கரூர் மாவட்டம் கடவூர் அரசு பள்ளியொன்றில் தற்காலிக ஆசிரியராக இணைந்து இப்போது அப்பள்ளியில் நிரந்தர பணியாளராக உள்ளேன். இரண்டு வருட தற்காலிக ஆசிரியர் போராட்டத்திற்கு ஆண்ட அரசு செவி சாய்க்கவில்லை.
ஒரு காலத்தில் உயர்ந்த படிப்பாக நினைத்து இஞ்சநேரிங் படித்து முடித்தவர்கள் பத்தாயிரத்திற்கும் குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் பணி அப்படியல்ல. விடுமுறையில் இருந்தாலும், பள்ளியில் தூங்கியே பொழுது கழித்தாலும் நாள் ஒன்று முடிந்தால் சம்பளம்.
அதற்காக கடுமையாக போராடினோம். திருச்சியிலும், கரூரிலும், திண்டுக்கலிலும் போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன். செங்கொடி தோழர்கள் இணைந்தார்கள். எங்கள் கோரிக்கை அனைவருக்கும் தெரிந்தது.
இறுதியாக தேர்தல் வந்தது. ஆண்ட அரசை வீட்டிற்கு அனுப்பிவிட்டு எங்கள் கோரிக்கைக்கு செவி மடுத்த கட்சியை ஆட்சியில் அமர செய்தோம். விளைவு இந்த ஆண்டிலிருந்து நானும் நிரந்தர அரசு ஆசிரியர்.
தற்காலிக பணி ஆசிரியராக இருந்த பொழுதிலிருந்து கூடுதல் வருமானத்திற்காக டியூசன் எடுக்கத் தொடங்கினேன். அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைக்க கூடாது என்பதும், அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் வைக்க கூடாது என்பதும் ஏட்டளவு சட்டம். டியூசனில் கொஞ்சம் வருமானம் கிடைத்தது. கொஞ்சம் வீட்டு பணி செய்ய கூலி கேட்காத ஆட்களும் கிடைத்தார்கள்.
“அம்மாடி கிச்சன் சிங்கில் உள்ள பாத்திரங்களை கழுவிடுமா..” என்று சொன்னால் நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு பணி செய்தார்கள் மாணவிகள்.
“தம்பி கடைக்கு போய்.. இந்த சாமானை வாங்கி வா” என்றால் நீ நான் என போட்டிப் போட்டுக்கொண்டு ஓடினார்கள் மாணவர்கள். அவர்களைக் கொண்டே வீட்டின் பரணில் பாத்திரங்களை அடுக்கலாம், ஒட்டடைகளை சுத்தம் செய்யலாம், துணிகளை காய போட, காய்ந்ததும் எடுத்துமடித்து வைக்க சொல்லலாம்.
இப்படி டியூசன் மாணவ மாணவிகளை வேலை வாங்கி சுகம் கண்ட பிறகு காசுக்காக இல்லை என்றாலும் இது போன்ற வேலைக்காகவாவது அவர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது.
நிரந்தர பணியாளராக மாறியபின்பு டியூசனை விட்டுவிடாமல் தொடர்கிறேன். என்னுடைய சொந்த ஊர் திருச்சி மாவட்டம் முசிறி. காவேரி கரை. காலை எழுந்ததுமே ஆற்றில் தான் விழிப்பேன். ஆற்றோர வேம்பில் ஒரு குச்சியை ஒடித்து பைல் விளக்கி, துணிகளை துவைத்து, ஆற்றில் நீந்துவேன். நண்பர்கள் இணைந்தால் எவ்வளவு நேரம் மூச்சடக்கி இருப்போம் என போட்டி போடுவோம், உள்நீச்சலில் கரை தொடுவோம். ஆற்று நீரில் நீந்தி வளர்ந்த உடம்பு.
ஆனால் இப்போது அரசு வேலைக்காக கடவூரிலேயே ஒரு தனிவீட்டில் இருக்கின்றேன். இங்கு தண்ணீரை காண்பதே கடினமான ஒன்றாக இருக்கிறது. வானம் பார்த்த பூமி. மழை பெய்தால் தான் பச்சை தட்டுபடும்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. இரவு நல்ல மழை. பருவ நிலை இதமாக இருந்தது. வழக்கமாக காலை 7 மணியிலிருந்து 8.30க்குள் டியூசன் முடிந்துவிடும்.
செந்தில், ரகு, மங்கை என மூன்று பேர் மட்டும் ஆங்கிலப் பாடத்தில் சரியாக தேர்வு எழுதாமல் இருந்தார்கள். அவர்களைத் தவிர மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பினேன். கோரசாக “தயங்கியூ.. சார்” என்ற சத்தம் கேட்டது. மாணவர்கள் பெரும்பாலும் தெருவினை தாண்டியிருப்பார்கள்.
மங்கைக்கு மூன்று முறை அந்த தேர்வுக்கான பதிலை எழுதி நாளை காலை கொண்டுவர வேண்டும் என கூறினேன். அவள் சரியென தலையை ஆட்டினாள்.
ரகு, செந்தில் இருவரையும் நீங்கள் காலை சாப்பாட்டை வீட்டில் முடித்துவிட்டு மீண்டும் டியூசன் வாருங்கள். 10 மணிக்கு இங்கு இருக்க வேண்டும் என கட்டளையிட்டேன். இருவரும் பையை ஓரத்தில் வைத்துவிட்டு கிளம்பினார்கள்.
பசி வயிற்றைக் கிள்ள… நான் சமையல் அறைக்கு சென்று இரண்டு பிரட் ஆம்லேட் போட்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது.. காலிங் பெல் அடித்தது. லபக் லபக் என பிரட்டை விழுங்கி தண்ணீர் குடித்துவிட்டு வெளியே வந்தேன். என் மாணவன் ரகுவும் அவன் அம்மாவும் வந்திருந்தார்கள்.
ரகுவின் அம்மாவிற்கு 30 வயது கூட இருக்காது நீள்வட்ட முகம். அடர்ந்த கேசம். கூலி வேலைக்கு செல்பவள் என எனக்கு முன்பே தெரியும். இருப்பதிலேயே நல்ல சேலை உடுத்தியிருக்கிறாள் போல.. கருஊதா நிறத்தில் வெள்ளிநிற பார்டர் போட்ட சேலை.
அவளுடைய குச்சி உடலில் சேலை சரியாக சுற்றாமல் தனியே தெரிந்தது. ரகுவும் நல்ல உடையணிந்து இருந்ததை கண்டதுமே தெரிந்துவிட்டது. ரகு டியூசனுக்கு வரமாட்டான் என்று.
“சார்..”
“என்னம்மா?”
“சார் பையனை டியூசனுக்கு வர சொன்னிங்களாம்.”
“சரியான கவனம் படிப்பில் இல்லைங்ம்மா. தனிகவனம் எடுத்தாதான் தேர்வில் வெற்றி பெறுவான்.” என்றேன்.