விடியல் ? – Part 2 105

அங்கு கணவனின் நண்பர்கள் இருவரும் வாசலை மறித்து நின்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் இவளின் மீது இருந்த ஆசையால் இவளை தாக்கினர். இவளும் அவர்களுடன் சரிசமமாக போராடினாள். இவளிடம் எல்லை மீற நினைக்கும் போது கணவனுக்கு விட்ட அறையைப் போல் இவர்களின் கன்னத்திலும் விட்டு கன்னத்தை பழுக்கவிட்டாள். அவள் அறைந்த அறையில் இருந்து சுதாரித்து வருவதற்குள் இவள் பையை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துவிட்டாள். அவள் வீட்டை விட்டு வெளியே ஓடுவதை பார்த்து அவர்களும் பின்னாலே துரத்த ஆரம்பித்தனர். அவர்கள் இருவரும் லேசாக குடித்து இருந்ததால் அவர்கள் இவளை துரத்தி பிடிக்க முடியவில்லை.

கோமதி பல தட்டு தடுமாறலுக்கு பின் எப்படியோ அவளின் பெற்றோர் இருக்கும் இடத்தை அடைந்து விட்டாள். அவளின் வந்திருந்த நிலையை பார்த்து பெற்றவர்கள் என்ன ஆச்சு என அக்கறையோடு விசாரித்தார்கள். இவளும் அவளின் உடம்பில் இருந்த காயங்கள் சுட்ட வடுகளை சிவந்த கண்களை எல்லாம் காட்டி தனக்கு நடந்த கொடுமையை எடுத்துச் சொன்னாள். அதை கேட்டு அவளின் பெற்றோர் ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இனி அவள் திட்டவட்டமாக அவனுடன் வாழ முடியாது என சொல்லிவிட்டாள்.

அவர்களும் தன் பெண்ணுடைய பாதுக்காப்பு கருதி அவளுக்கு நடந்த கொடுமைக்கு சட்டபடி புகார் அளித்து அவனை சிறையில் அடைத்தனர். ஆனால் அவன் தன் பணபலம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி ஜாமீனில் வெளியே வந்துவிட்டான். ஆனால் இரு தரப்பினருக்கு இடையே வழக்கு மட்டும் நடந்தது. அவன் எவ்வளவு முயன்றும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. கடைசியாக ஓர் ஆண்டுக்கு மேலாக வழக்கு நடந்தது. இறுதியில் கோமதிக்கு சாதகமாக தீர்வு வழங்கி அவனை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

தாஸ் செய்த கொடுமைகள் அவளின் மனதில் ஆழமாக பதிந்தன. அந்த பாதிப்பு அவளின் வாழ்நாளும் முழுவதும் தொடர்ந்துக் கொண்டே இருந்தது. அவள் தன் வாழக்கையில் இயல்பாக இருக்கவே மிகவும் கஷ்டபட்டாள். அவளால் சரியாக சாப்பிட தூங்க முடியவில்லை. அவன் செய்த கொடுமைகள் மனதில் திரும்ப திரும்ப வந்து கொடுமை செய்துக் கொண்டே இருந்தன. அவள் அனுபவித்த கொடுமைகளை நினைத்தே பலநாட்கள் அழுதிருக்கிறாள். நீதிமன்றத்தில் தனக்கு நடந்த கொடுமைக்கு நீதி கிடைத்தும் அவளால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை.

அவளுடைய 24வயதில் தன் வாழக்கையை இழந்து விட்டு இருக்கிறாள். இதன் பிறகு மற்றொரு திருமணம் செய்ய தயாரக இல்லை. அவளை நினைத்தும் அவளின் நிலையை நினைத்து பெற்றோர்கள் மிகவும் வேதனைபட்டனர். அது மட்டுமில்லாமல் அவள் இங்கு இருப்பதை ஒரு சுமையாகவும் பார்த்தனர். அந்த நேரத்தில் தான் வெங்கி அவர்களின் வாழ்க்கையில் வந்தான்.

அவளின் கடந்த கால விவகாரத்தை பற்றி தெரிந்தும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தான். அவன் திறமைசாலி நல்ல குணம் படைத்தவன் என தெரிந்ததும் சிறந்த கணவனாக இருப்பான் என்று அவளுக்கு தோன்றியது. ஆனாலும் திருமணம் செய்து கொள்ள ஒரு தைரியம் இல்லை.

குடும்பத்தில் இருப்பவர்களின் வற்புறுத்தலினாலும் வெங்கி பற்றி தனிபட்ட முறையில் தெரிந்து கொண்டதினாலும் சாதாரண வாழ்க்கையை வாழ ஒரு புதிய அத்தியாயம் தொடங்கவும் திருமணத்திற்கு சரி என ஒப்புக்கொண்டாள். வெங்கிக்கும் கோமதிக்கும் திருமணம் நல்லபடியாக நடந்தது.

கோமதி (நானும்) தன் (அவள்) கடந்த கால திருமண வாழக்கையில் நடந்த கொடுமைகளை அவனிடம் எடுத்துச் சொன்னாள். அதோடு இல்லாமல் அதை மீண்டும் நினைத்து முகத்தை கையால் மூடிக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள். அவள் நீண்ட நேரமாக தன் கதையை சொன்னதால் வாய், உதடு எல்லாம் வறண்டு போய் இருந்தது.

வெங்கி தன் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு அவள் சொன்னதை கவனமாக கேட்டுக் கொண்டு இருந்தான். சில மணி நேரத்திற்கு முன் தன் மனைவியின் முதுகில் இருந்த தீக் காயங்கள், வடுக்கள் எல்லாம் பார்த்து மிதுந்த வருத்ததுடன் வேதனையுடன் நடுங்கிக் கொண்டிருந்தான். அவள் மீது இருந்த கோபம் மறைந்து காதல் முன்பை அதிகமாக இருந்தது. அந்த காதலுடனே அவளை அவள் சம்மத்துடன் அனுபவிக்க விரும்பினான். அவன் தன் படுக்கையை விட்டு எழுந்து அவளை நோக்கி நடந்து அவளுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் குடுத்தான்.

1 Comment

  1. Nice story after a long time. Has a good mix of erotica and art the same time practical scenario and reflected importance of two hearts joining them just bodies.

Comments are closed.