பீச் 2422

ஏன் அப்போ அவளுங்கதான் அழகா இருக்காங்க நா அழகாயில்ல அப்படிதான ? ஏய் செந்தா நீ ஏன்டி கோவபடுற எனக்கு எப்பவுமே என் செல்ல பொண்டாட்டி தான்டி அழகு உன்ன மாதிரி ஒரு அழகி இந்த உலகத்துல வேற யாருடி இருக்க போறா சொல்லு . ஆஹாஹா…. ரொம்பதான் இவ்ளோ நேரம் அந்த வெள்ளகாரிங்கள சைட் அடிச்சிட்டு இப்போ எனக்கு ஐஸ் வைக்கிறிங்களா ம்…? ஏய் செந்தா செல்லம் நா ஐஸ்லாம் வைக்கலடி எனக்கு எப்பவுமே நீதான்டி பேரழகி . அப்புறம் ஏன் அவளுங்கள பாத்துட்டு இருந்தீங்க ? சும்மா தான்டி பார்த்தேன் சரி விடு இனிமே அவளுங்கள பார்க்கள போதுமா . ம்…அந்த பயம் இருக்கட்டும் . என்று கூறிவிட்டு அவன் தலையில் செல்லமாக கொட்டினால் . பிறகு அனைவரும் கடல் அலையுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு கடற்கரையில் உள்ள சேரில் உட்கார்ந்து கொண்டு சந்தோஷமாக சிரித்து பேசி கொண்டிருந்தனர் . அப்போது சத்யாவின் கணவன் ரமேஷ் ஓகேங்க எல்லாரும் போட்டிங் போலாமா என்று கேட்டான் . அதற்கு அனைவரும் சரி வாங்க போகலாம் என்று கூறினர் . அங்கே இருந்த போட்டிங் கிளப்புக்கு அனைவரும் சென்றனர் கடலில் போட்டிங் செல்வதற்கு டிக்கெட் வாங்கி கொண்டு அனைவரும் காத்திருந்தனர் . அங்கே கடலில் செல்ல கூடிய 2 பேர் மட்டும் போககூடிய அளவில் இருந்த மோட்டார் பைக் போட்டில் செல்வதற்கே நிறைய பேர் ஆர்வமாக நின்று கொண்டிருந்தனர் . அனைவரும் காதலர்களாகவும் புதுமண தம்பதிகளாகவும் இருந்தனர் . சிலர் மட்டுமே குடும்பம் சகிதமாக வந்துயிருந்தனர் . குடும்பமாக வந்தவர்கள் 10 பேர் அமரகூடிய போட்டில் செல்லவே ஆர்வமாக இருந்தனர் . அப்போது இரண்டு போட் வந்தது அதில் முதல் போட்டில் சிலர் குடும்பம் ஏறி கொண்டது . இரண்டாவது போட்டில் ஒரு நடுத்தற வயது வெள்ளைகாரனும் அவன் மனைவியும் அவர்களின் இரண்டு பிள்ளைகளும் முதலில் ஏறி கொண்டனர் . அப்பொது ரவி ரமேஷிடம் ஏங்க மீதம் இருக்குற 6 சீட்ல நம்ம பேமிலி எப்படிங்க உட்காரது என்று கேட்டான் . அதற்க்கு ரமேஷ் அது ஒன்னும் பிராபளம் இல்லைங்க நாம ஆம்பளைங்க பசங்க இந்த போட்ல போகலாம் லேடிஸ்லாம் இன்னொரு போட் இப்போ வரும் அதுல அவங்க எல்லாரும் வரட்டும் என்ன சொல்லுறிங்க என்று கேட்டான் . அதற்கு அனைவரும் சரிதான் ஆனா நாங்க மட்டும் எப்படி தனியா இங்க இருக்கிறது என்று பெண்கள் கேட்டனர் . அதற்கு ரவி ஓகே உங்க கூடவேணா கார்த்தி விட்டுடு பொறோம் . டேய் கார்த்தி நீ அவங்க கூட அடுத்த போட்லவாடா நா பசங்கள அழைச்சிட்டு இந்த போட்ல போறோம் என்று ரவி கூறினார் . அதற்கு கார்த்தியும் சரிங்க மாமா என்று கூறினான் . பிள்ளைகளும் போட்டில் செல்லும் ஆர்வத்தில் தங்களின் தந்தைகளுடன் சென்றனர் . ஐஸ்வர்யா , சத்யா , செந்தாமரை , ஹாஜிரா ஆகியோருடன் கார்த்தியும் நின்றிருந்தான் . சிறிது நேரத்தில் மற்றொரு போட் வந்தது அதில் இவர்கள் அனைவரும் சென்று அமர்ந்தனர் . இவர்களின் பின்னால் மேலும் மூன்று பெண்கள் அந்த போட்டில் ஏறிகொண்டனர் .

கடலில் அழகை அனைவரும் ரசித்து கொண்டே போட்டிங்கில் பயணம் செய்து கொண்டிருந்தனர் . அப்போது ரவி பாலு ரமேஷ் ஆகியோர் பயணம் செய்து கொண்டிருந்த போட் இவர்களின் போட்டை கிராஸ் செய்து கரையை நோக்கி சென்றது அந்த போட்டில் இவர்களின் பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சியாக ஓ…. என்று கத்திகொண்டே சென்றனர் . இவர்களும் மகிழ்ச்சியாக சிரித்து பேசி கொண்டே கடல் அன்னையின் அழகை ரசித்து கொண்டு வந்தனர் . பின்னால் இருந்த மூன்று பெண்களும் இவர்களை பார்த்து நீங்கள் எல்லாரும் தமிழ்நாடா என்று தமிழில் கேட்டனர் . அதற்கு இவர்களும் ஆமாம் நீங்களும் தமிழ்நாடா ? ஆமாங்க பட்…. சிங்கப்பூர்லயே செட்டில் ஆகிட்டோம் என்று கூறினர் . அப்போது ஐஸ்வர்யா ஒரு பெண்ணிடம் தன்னை அறிமுக படுத்தி கொண்டால் அந்த பெண்ணும் தன்னை பற்றி அறிமுக படுத்தி கொண்டால் அவள் பெயர் ; சுதா ( வயது 40 ) அவள் உடன் வந்தவர்கள் அவளின் சகோதரிகள் தேவி ( வயது 35 ) சுகுணா ( வயது 30 ) என்று அறிமுக படுத்தினால் . அப்போது திடீர் என்று காற்று வீசியது சிறிது நேரத்தில் அது புயல் காற்றாக மாறியது கடல் கொந்தளிக்க ஆரம்பித்தது இவர்கள் சென்ற போட் கடலின் ஆர்பறிப்பில் தள்ளாட துவங்கியது போட்டில் இருந்த அனைவரும் அய்யோ…..அம்மா…..ஆ.. என்று பயத்தில் கத்த துவங்கினர் . போட்டின் தள்ளாட்டம் அதிகமாக துவங்கியது அப்போது போட்டை ஓட்டிக் கொண்டிருந்தவன் போட்டின் தள்ளாட்டதின் காரணமாக கடலில் விழுந்து விட்டான் . அதை பார்த்த அனைவரும் பயத்தில் இன்னும் அதிகமாக கத்த துவங்கினர் . அனைவர் கண்களிளும் மரணபயம் பரவதுவங்கியது காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று கத்த துவங்கினர் ஆனால் அந்த புயல் காற்றில் அவர்களின் குரல் காணாமல் போனது . படகு காற்றின் தள்ளுதலுக்கு உட்பட்டு அலைகளில் மோதி கொண்டு கடலில் சென்று கொண்டே இருந்தது . அதில் இருந்த அனைவரும் மரண பயத்துடன் போட்டை கெட்டியாக பிடித்து கொண்டு மிறட்சியாகவும் கண்களில் கண்ணீருடனும் இருந்தனர் . கடல் கொந்தளிப்பு , காற்றின் வேகம் ஆகியவை அதிகரித்தது திடீர் என்று வானத்தை கிழித்து கொண்டு இடியுடன் மின்னலும் தோன்றியது இடி மின்னல் ஒளித்தவுடன் அனைவருக்கும் பயம் மேலும் அதிகரித்தது அனைவரும் வாய் விட்டு அழுதுவிட்டனர் மரணபயம் அனைவர் கண்களிளும் நொடிகள் தவறாமல் இருந்து கொண்டே இருந்தது . தங்களின் வாழ்க்கை இன்றோடு இந்த கடலில் அழிந்து விடுமோ என்ற எண்ணம் அனைவரது மனதிலும் தோன்ற ஆரம்பித்தது . திடீர் என்று மழையும் பெய்து அனைவரையும் மேலும் பயம் கொள்ள செய்தது பயத்தில் கத்தி கத்தி அனைவரது தொண்டையும் வறன்டு விட்டது . கடல் அலைகளுக்கேற்ப போட் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தது எங்கே செல்கிறது எங்கே போகிறது என்று யாருக்கும் தெரியவில்லை அனைவரும் பயத்துடன் போராடி ஒருவாறு தளர்ந்து விட்டனர் . இனி தங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றே அனைவருக்கும் தோன்ற ஆரம்பித்து விட்டது . கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வெறும் இருட்டாக இருத்தது வெளிச்சம் என்ற ஒரு புள்ளி கூட அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை . அனைவரும் பயத்தில் மயக்கநிலைக்கு சென்று விட்டனர் . கடல் அன்னை இறக்கமே இல்லாமல் அலைகளை வாறி இறைத்தால் ஒரு நாள் முழுவதும் அடித்த புயல் காற்று சற்று தனிய துவங்கியது போட்டில் இருப்பவர்களுக்கு அப்போதுதான் அடித்த சூரியவெளிச்சம் தான் அவர்களின் மயக்கத்தை தெளிய வைத்தது . ஒருவர் பின் ஒருவராக கண்களை திறந்தனர் . கடல் அன்னை முதல் நாள் காட்டிய தன் கோரமுகத்தை மாற்றி ஷாந்தமாக இருந்தால் . போட்டில் இருந்த அனைவருக்கும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கடல்நீர் மட்டுமே தெரிந்தது . தாங்கள் அனைவரும் எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை அவ்வளவு பெரிய கடலில் இவர்களின் போட் மட்டும் தனியாக இருந்தது ..