அங்கே 3 பிரட்டு பாக்கெட்டுகளும் 2 பெரிய வாட்டர் கேன்களும் 4 கத்திகளும் இரண்டு லைட்டர்களும் ஒரு டார்ச் லைட்டும் இருந்தது . அதை அத்தனையும் வெளியே இழுத்த கார்த்தி தண்ணீர் கேனை முதலில் எடுத்து கொண்டு போட்டில் இருந்து குதித்து வந்து அந்த தண்ணீரை சுகுணா வின் முகத்தில் தெளித்தான் . மயக்கம் தெளிந்து எழுந்த சுகுணா தண்ணீ…..தண்ணி…. என்று உலற துவங்கினால் . உடனே கார்த்தி ம்… இந்தாங்க தண்ணி இருக்கு குடிங்க என்று அவள் வாயில் நீரை ஊற்றினான் . என்றாக தாகம் அடையும் வரை நீரை குடித்த சுகுணா மயக்கத்தில் இருந்து விடுபட்டால் . பிறகு அனைவரும் தங்கள் தாகத்தை தண்ணீர் அருந்தி போக்கி கொண்டனர் .
அப்போது ஐஸ்வர்யா கார்த்தியிடன் இந்த தண்ணீர் கேன் எங்க இருந்துச்சி கார்த்தி . நம்ம போட்ல பின் பக்கம் ஒரு சின்ன டோர் ஓன்னு இருந்தத நான் நாம போட்ல ஏறும் போது பார்த்தேன் அக்கா எனக்கு இவ்ளோ நேரம் அந்த டோர் விஷயமே எனக்கு ஞாபகம் இல்ல இப்போ இவங்க மயக்கம் போட்ட பாத்துதான் எனக்கு ஞாபகம் வந்துச்சி . ம் இருங்க கா அதுல மூணு பிரட் பாக்கெட் இருந்துச்சி அத போய் எடுத்துட்டு வந்துடறேன் என்று கூறி போட்டிற்கு சென்றான் . அப்போது ஐஸ்வர்யா கார்த்தி போட்ல வேற என்னென்ன இருக்கோ எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடு என்று கூறினால் . கார்த்தியும் சரிங்க அக்கா என்று கூறிவிட்டு போட்டிற்கு சென்றான் அதன் உள்ளே இருந்த அனைத்தையும் எடுத்து கொண்டு கரைக்கு வந்தான் .
ஒரு பிரட் பாக்கெட்டை எடுத்தவன் அதை ஹாஜிரா கையில் கொடுத்து எல்லாருக்கும் பிரிச்சி கொடுங்க என்று கூறினான் . இரண்டு நாட்களாக எதுவுமே சாப்பிடாமல் இருந்த அனைவரும் பிரெட்டை வேக வேகமாக சாப்பிட துவங்கினர் . ஒரு பாக்கெட் பிரெட்டும் காலியானது அவர்களின் பசியும் ஓரளவு பூர்த்தியானது . அனைவரும் அடுத்து என்ன செய்வது என்பதை பற்றி பேச துவங்கினர் . அப்போது கார்த்தி அனைவரிடமும் முதல்ல நாம எல்லாரும் தங்கறதுக்கு ஒரு நல்ல இடமா பார்க்கனும் அப்புறமா நாம என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் என்று கூறினான் . அதற்க்கு தேவி இந்த காட்டுக்குள்ள எங்க போய் தம்பி தங்குறது என்று கேட்டாள் .
அதற்க்கு கார்த்தி நாம காட்டுக்குள்ள தங்க போறது இல்ல இந்த கடற்கரை ஓரமா அதோ அங்க ஒரு நல்லா நிழல் தெரியுது பாருங்க அங்க தங்கலாம் . என்று கூறினான் அதை கேட்ட அனைவரும் சரி என்று கூறினர் பிறகு அவர்கள் அந்த நிழல் இருந்த இடத்திற்க்கு வந்து சற்று நேரம் அந்த நிழலில் அமர்ந்தனர் . அப்போது அனைவரும் ஒருவித பய உணர்வுடனும் அச்சத்துடனும் இருந்தனர் . அப்போது அங்கே சற்று குளுமையான காற்று வீசி கொண்டே இருந்ததை அனைவரும் அப்போதுதான் உணர்ந்தனர் . அப்போது கார்த்தி அனைவரிடமும் இந்த குளிரில் ல இருந்து தப்பிக்க நாம தங்க இங்க ஒரு குடில் போடனும் இல்லனா இந்த குளிரால நமக்கு ஏதாவது ஆகிடும் என்று கூறினான் . அனைவரும் அவன் சொல்வதில் உண்மை இருப்பதை அறிந்தனர் . அது சரி இங்க எப்படி குடில் போடறது என்று தேவி கேட்டால் அதற்க்கு கார்த்தி ஏன் முடியாது இந்த காட்டில பெரிய பெரிய மூங்கில் மரம் இருக்கு பாருங்க அந்த மூங்கில் களை வெட்டி எடுத்துட்டு வந்து குடில் போடுவோம் . என்று கூறினான் . அனைவரும் அவனின் அறிவு திறமையை பாராட்டினர் . ஆனால் இந்த தீவுல மிருகம் ஏதாவது இருந்தா என்ன பண்றது தம்பி என்று சுதா கேட்டால் . அதற்க்கு கார்த்தி இது ஒரு கடல்ல இருக்குற ஒரு தீவு இங்க எந்த மிருகமும் இருக்காது சரிங்களா அனாவசியமா யாரும் பயப்படாதிங்க என்று கூறினான் . பிறகு காட்டின் உள்ளே சென்ற கார்த்தி அங்கே இந்த மூங்கில் தடிகளை கொண்டு வந்து ஒரு குடில் அமைத்தான் அதன் மேலே தென்னை மட்டைகளை போட்டு நிழலாகினான் . அருகே காய்ந்து போய் கிடந்த குச்சிகளை பொருக்கி கொண்டு வந்து போட்டு தீ மூட்டினான் . அதைபார்த்த செந்தாமரை உனக்கு எப்படி கார்த்தி இப்படி ஒரு ஐடியா தோனுச்சி என்று கேட்டாள் அதற்க்கு கார்த்தி ஒரு புக்குல படிச்சி இருக்கேன் அக்கா என்று கூறினான் . பிறகு அனைவரும் அந்த குடிலின் உள் சென்றனர் .
குடிலில் அனைவரும் சென்று சற்று ஓய்வெடுத்தனர் . அந்த தீவின் பகல் நேர இதமான குளிர்காற்று அவர்களின் மனதில் இருந்த பயத்தை சற்று அமைதியாக்கியது . இருந்தாலும் அவர்களின் மனதில் உயிரோடு இருப்பது மகிழ்ச்சியை தந்தாலும் இப்படி யாரும் இல்லாத தீவில் மாட்டியதை நினைத்து கவலை கொள்ள செய்தது . பெண்கள் அனைவரும் சோர்வுடன் படுத்திருக்க கார்த்தி மட்டும் அவர்களின் பாதுகாப்பு கருதி படுக்காமல் நெருப்பு மூட்டிய இடத்தில் அமர்ந்து நெருப்பு அனையாமல் இருக்க குச்சிகளை போட்டு கொண்டே இருந்தான் . அவன் மனதில் அந்த தீவை பற்றிய என்னமே மேலோங்கி இருந்தது . ஒரு முறை டிவியில் இப்படி பட்ட தீவை பற்றிய ஒளிபரப்பு செய்தனர் . அதில் இப்படி கடலில் இருக்கும் தீவில் மிருகங்கள் இருக்க வாய்ப்பில்லை எனவும் ஆனால் பூச்சிகள் பாம்புகள் ஆகியவை கண்டிப்பாக இருக்கும் எனவும் கூறி இருந்தனர் .
அந்த மாதிரி தீவில் மாட்டியவர்கள் உணவு கிடைக்காமல் தீவில் கிடைக்கும் பழங்கள் பூக்களை தின்று வாழலாம் எனவும் அந்த பகுதி கடலில் மீன்கள் கரைக்கு மிக அருகிலேயே இரவு நேரத்தில் வரும் எனவும் கூறி இருந்தனர் இப்படி தனியாக தீவில் மாட்டுபவர்கள் குடில் அமைத்து இரவு நேரத்தில் பனிப்பொழிவில் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் எனவும் இப்படி கடற்கரை ஓரம் தங்கியிருந்தால் தான் நாம் காப்பாற்றபட அதிக வாய்ப்பு அமையும் என்றும் அந்த நிகழ்ச்சியில் கூறி இருந்தனர் . அதை நினைத்த கார்த்தியின் மனதில் நாம் எப்போது இந்த தீவில் இருந்து காப்பாற்றபட போறோமோ என்று தோன்றியது . அப்போது இதமாக அடித்து கொண்டிருந்த குளிர்காற்று சற்று அதிகமாக துவங்கியது . அப்போது தனது கை கெடிகாரத்தை பார்த்தான் மணி மாலை 5.30 என்று காட்டியது வானம் அந்த நேரத்திலேயே சற்று இருட்ட துவங்கியது .
பிறகு அருகில் கிடந்த காய்ந்த பெரிய மரதுண்டுகளை எறியும் தீயில் போட்டான் . இரவு முழுவதும் தீ எறிந்தால்தான் இந்த குளிரில் இருந்து நாம் தப்பிக்கமுடியும் என்று என்னினான் . பிறகு குடிலில் உள்ளே சென்று படுத்திருந்த அனைவரையும் எழுப்பினான் . எழுந்த அனைவருக்கும் அந்த மாலை நேரத்து குளிர்காற்று சற்று உதரலை கொடுத்தது . அனைவரும் நெருப்பு எறிந்து கொண்டிருக்கும் இடத்திற்கு வந்து தங்கள் உடல்களை சற்று சூடாக்கி கொண்டனர் . அனைவரும் சிறிது நேரம் நெருப்பின் கதகதப்பில் உட்கார்ந்து கொண்டு எப்படி இந்த தீவில் இருந்து தப்பிப்பது என்று சிந்திக்க துவங்கினர் .
புயலில் சிக்கியதில் இருந்து இந்த தீவில் மாட்டியது வரை அவர்களின் மனதில் வந்து வந்து சென்றது அதை நினைக்க நினைக்க அனைவருக்கும் அழுகையும் பயமும் மீண்டும் வந்தது . ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்ல கூட முடியாமல் அனைவரும் அழுது கொண்டே இருந்தனர் . இவர்களில் கார்த்தி மட்டும் தன் மனதை தேற்றி கொண்டு அனைவரிடமும் பேசினான் . இப்படி அழுதுகிட்டோ வருத்தபட்டு கிட்டோ இருந்தா மட்டும் ஒன்னும் ஆகிட போறது இல்ல . இனிமே இங்க எப்படி நாம உயிர் வாழ போறோம்னுதான் யோசிக்கனும் . இங்க இருக்குற வரைக்கும் நாம எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருக்கனும் . நம்மல இந்த தீவுல இருந்து காப்பாத்துற வரைக்கும் நாம நம்ம உயிர பாதுகாக்கனும் என்று அனைவருக்கும் தைரியமூட்டினான் . அவன் வார்த்தையை கேட்ட அனைவரின் மனதிலும் தைரியம் வந்தவர்களாக தங்களின் கண்களில் வந்த கண்ணீரை துடைத்து விட்டு இப்போ நாங்க என்ன பண்ணனும் கார்த்தி என்று கேட்டனர் . இனிமே யாரும் அழாதிங்க உங்களுக்காக நான் இருக்கேன் கிடைக்கிற உணவ நாம எல்லாரும் பங்கு போட்டு சாப்பிடனும் நம்மள்ட குடிக்க தண்ணி கம்மியாதான் இருக்கு அதனால தண்ணிய சிக்கனமா குடிங்க . இனிமே யாரும் அழுகாதிங்க ப்ளீஸ் என்று கூறினான் .