பீச் – Part 2 287

தனியாக கடலில் தத்தளித்து கொண்டிருந்த போட்டில் இருந்த அனைவரும் தாங்கள் உயிரோடு இருப்பதை நினைத்து சந்தோஷபடுவதா அல்லது எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் நடக்கடலில் தத்தளிப்பதை நினைத்து வருத்தபடுவதா என்று தெரியாமல் இருந்தனர் . அந்த நேரத்தில் அனைவரது கண்களிளும் கண்ணீர்தான் வந்தது . சற்று நேர அமைதிக்கு பிறகு ஏதோ தோன்றியவனாக எழுந்த கார்த்தி போட்டின் மோட்டார் இருக்கும் இடத்திற்க்கு வந்து மோட்டாரை இயக்க முயற்சி செய்தான் . அவன் செய்வதை பார்த்த ஐஸ்வர்யா என்னடா கார்த்தி பண்ற என்று சற்று தளர்ந்த போன குரலில் கேட்டாள் . இந்த போட்டோட இன்ஜின ஸ்டாட் பண்ண டிரை பண்ற அக்கா இது மட்டும் ஸ்டாட் ஆச்சினா நாம எல்லாரும் எப்படியாவது இங்கிருந்து போயிடலாம் என்று கூறனான் . இதை கேட்ட அனைவரும் அப்போ சீக்கிரம் ஸ்டாட் செய் கார்த்தி என்று கூறினர் . அவனும் தன்னால் முடிந்தவரை மோட்டாரை ஸ்டாட் செய்ய முயற்சிதான் கிட்ட தட்ட அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக போட் ஸ்டாட் ஆனது அனைவரது முகத்திலும் அப்போதுதான் மகிழ்ச்சி தென்பட்டது . ஆனால் கார்த்தி மட்டும் குழப்பமாக கடலை பார்த்து கொண்டு நின்றிருந்தான் . அதை கவனித்த சுதா தம்பி ஏம்பா அப்படியோ நிக்கிற என்று கேட்டாள் . அதற்கு கார்த்தி இல்லைங்க எந்த பக்கம் போறதுனு ஒன்னுமே புரியல என்று கூறினான் . அதை கேட்ட அனைவருக்கும் அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சி காணாமல் . அப்போது சத்யா ஏதாவது ஒரு பக்கம் போ கார்த்தி எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு என்று கூறினால் . இதை கேட்ட கார்த்தி ஏதொ ஒரு பக்கம் போ ன்னு சொன்னா எப்படிக்கா போக முடியும் என்று கேட்டான் . அதற்கு ஐஸ்வர்யா கார்த்தி இப்போ நமக்கு வேற வழி இல்லடா இங்க நம்மள காப்பாத்த யாராவது வருவாங்களானு தெரியல நாம எங்க இருக்கோம்னு தெரியல இப்படி பட்ட நேரத்துல என்னடா பண்ண முடியும் உனக்கு எந்த பக்கம் போகனும்னு தோனுதோ அந்த பக்கம் போடா இப்போ இங்க இருக்குற ஒரே ஆம்பிள நீதான் நீ என்ன முடிவு பண்ணாலும் எங்களுக்கு ஓகேதான் என்று கூறிவிட்டு மற்றவர்களை பார்த்து நீங்க என்ன சொல்லுறிங்க என்று கேட்டாள் .

அவர்களும் இப்படிபட்ட சூழ்நிலையில் யாரவது ஒருத்தர் முடிவு செய்தால்தான் சரி என்ற காரணத்தால் அவர்களும் ஓகே என்றனர் . பிறகு கார்த்தி கடவுளின் மேல் பாரத்தை போட்டுவிட்டு போட்டை மெதுவாக இயக்க துவங்கினான் . கிட்டதட்ட 3 மணி நேரம் கடலில் பயணம் செய்தும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வெறும் நீராகதான் தெரிந்ததே தவிர கறையையே அவர்களால் பார்க்க முடியவில்லை ஆனால் அவர்களின் தேடுதல் மட்டும் நிர்க்கவே இல்லை . எப்படியாவது கறையை காண வேண்டும் என்னம் மட்டுமே அனைவரது மனதிலும் இருந்தது . திடீர் என்று அவர்களின் போட் மூச்சுவாங்க துவங்கியது நான்கு ஐந்து முறை கணைத்துவிட்டு தன் இயக்கத்தை நிறுத்தியது . அனைவருக்கும் சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை கார்த்தி வந்து அந்த போட்டின் மோட்டாரை இயக்க முயற்சி செய்தான் முடியவில்லை . அப்போது தான் புரிந்தது மோட்டாரில் இருந்த பெட்ரோல் சுத்தமாக காலி என்று . கார்த்தி ஐஸ்வர்யாவிடம் அக்கா இன்ஜின்ல பெட்ரோல் தீந்து போச்சி க்கா என்று கூறினான் .

இதை கேட்ட அனைவருக்கும் மனதில் மீண்டும் பயம் குடிகொண்டது . என்னடி இது நமக்கு மட்டும் ஆண்டவன் இப்படி சோதனையா தரான் என்று கூறி செந்தாமரையும் சத்யாவும் அழதுவங்கி விட்டனர் . அவர்களுடன் சுதா , தேவி , சுகுணா , ஹாஜிரா , என அனைவரும் சேர்ந்து கொண்டனர் . இப்படி அனைவரும் கலங்கிய கண்களுடன் அழுவதை பார்த்த கார்த்திகிற்கும் கண்களில் இருந்து கண்ணிர் வந்தது . அன்று பகல் போய் இரவும் வந்தது அனைவரும் முதல்நாள் இரவு முழுவதும் மழை புயல் காற்று ஆகியவற்றுடன் போராடிய காரணத்தாலும் பசியின் காரணமாகவும் உடல் அசதியில் அப்படியே போட்டில் தூங்கிவிட்டனர் . திடீர் என்று கண் விழித்த கார்த்தியின் கண்களுக்கு சூரிய ஒளியுடன் . ஒரு காடு தெரிந்தது பசியின் மயக்கத்தால் அப்படி தெரியுதா அல்லது நமது பிரம்மையா என்று அவனே ஒருகணம் தன்னை சந்தேகபட்டான் ஆனால் அவன் காண்பது நிஜமே என்பது சற்று நேரத்தில் புரிந்தது . எழுந்து பார்த்தான் அவர்களது போட் ஒரு பாறையின் இடுக்கிள் நின்று கொண்டிருந்தது . அனைவரையும் எழுப்பினான் அக்கா எழுந்திரிங்க நாம கரைக்கு வந்துடோம் எல்லாரும் எழுந்திரிங்க என்று கத்தினான் . அனைவரும் கார்த்தியின் குரல் கேட்டு எழுந்தனர் பசி மற்றும் களைப்பின் காரணமாக அனைவராலும் பொறுமையாகவே கண் முழிக்க முடிந்தது . கண் விழித்து பார்த்த அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகள் படர்ந்தது அனைவரும் கண்டிபிடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் . பின் ஒருவர் பின் ஒருவறாக போட்டில் இருந்து முட்டிகால் அளவு இருந்த தண்ணீரீல் இறங்கினர் அனைவரும் மகிழ்ச்சியாக அந்த கரைக்கு வந்தனர் . ஆனால் கார்த்தி மட்டும் ஒரு பாறையில் ஏறி நின்று கொண்டு அந்த இடத்தை பார்த்தான் . அப்போதுதான் அவனுக்கு தெரிந்தது இது கடற்கரை அல்ல மனிதர்கள் யாரும் இல்லாத தீவு என்று ……………….

அனைவரும் ஒரு தீவில் மாட்டி கொண்டு இருக்கும் விஷயத்தை கார்த்தி அனைவரிடமும் கூறினான் அதை கேட்ட அனைவரும் மிக பெரிய அதிர்ச்சிக்கு உட்பட்டனர் . அப்போ நாம இங்க இருந்து வெளிய போகமுடியாதா கார்த்தி என்று செந்தாமரை கவலையுடன் கேட்டாள் . தெரியலைங்க அக்கா ஆனா கண்டிப்பா இந்த பக்கம் ஏதாவது ஒரு பெரிய கப்பல் இந்த கடல்ல போய்தானே ஆகனும் அப்போ வேணா நாம காப்பாத்த படலாம் என்று கார்த்தி கூறினான் . அதை கேட்ட அனைவருக்கும் சற்று ஆறுதலாக இருந்தது . அப்போது திடீர் என்று சுகுணா மயக்கமாகி கீழே விழுந்தால் . உடனே சுதா ஐயோ என் தங்கச்சி மயக்கமாகி கீழே விழுந்துட்டா என்று கத்த துவங்கினால் .

அப்போதுதான் அனைவருக்கும் தாங்கள் அனைவரும் 2 நாட்களாக எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருப்பது புரிந்தது . அதனால்தான் சுகுணா மயக்கம் போட்டு விழுந்து விட்டால் என்பது தெரிந்தது . ஏதோ ஞாபகம் வந்தவனாக கார்த்தி போட்டை நோக்கி ஓடினான் . அவன் ஓடுவதை பார்த்த சத்யா கார்த்தி எங்க போற என்று கேட்டால் . அதற்க்கு கார்த்தி ஒரு நிமிஷம் இருங்க அக்கா வந்துடறன் . என்று கூறி கொண்டே போட்டை நோக்கி சென்றான் போட்டில் ஏறி அதன் பின் பகுதில் எதையோ தேட துவங்கினான் . அப்போது போட்டின் பின் பகுதியில் இருந்த ஒரு சிறிய கதவினை உடைக்க துவங்கினான் . அனைவரும் அவன் என்ன செய்கிறான் என்பதை குழப்பத்துடன் கவனித்தனர் . போட்டின் பின் பக்க சிறிய கதவினை உடைத்த கார்த்தி அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று கை விட்டு துழாவ துவங்கினான் .