ஆபீஸ் கலாச்சாரம் அது இதுவென பேர் சொல்லியே கூப்பிடச் சொன்னாலும் நான் அக்கான்னு கூப்பிடுவதையே பழக்கமாக்கினேன்.
நாங்கள் நெருக்கம் கொள்ள இதுவே காரணமுமானது. வேலை, வீடு இரெண்டுமே ஒரே இடம் போல தெரியும் எங்களுக்கு.
அடிக்கடி அவள் சொந்த ஊர் ஈரோட்டுக்கு போகும் நாட்களில் மட்டும் இருவரும் பாத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அற்றிருந்தது. பிரபாவிற்குப்பின் இன்னொரு அக்காவகவே லக்ஷ்மி மாறிப்போக நானும் அதிக அளவு அன்பு செலுத்தலானேன். சிலநேரங்களில் பிரபாவிடம் பேசும்போது கூட லட்சுக்கா வென மறந்தும் வெளிவரும் அவள் பெயர். அத்தனை இணக்கமாக பழகிக்கொண்டோம்.
எல்லாம் வழக்கம்போல் வேலை விசயமாக ஆரம்பித்த பேச்சு, டிரைனிங், ஹெல்ப், பிராஜெக்ட் ஒர்க் , கேதரிங் என ஏழு மாதம் நீண்டபின்னே இருவருக்குமான நெருக்கம் மனம் விட்டு, வெளிப்படையாக பேசும் அளவை எட்டியது.
புக் ரீடிங் எங்களை இன்னும் நெருக்கமாக்கிவிட, பேசக் காரணம் இல்லாவிடினும் எதையெனும் பேசலானோம்.
அவள் எந்த எதிர்பார்ப்புமின்றி அக்காவாக அன்பு செலுத்தினாலும் எனக்குள் அவள் மீது தனி ப்ரியம் அடிக்கடி எட்டிப்பார்த்தது.
சில முகங்கள் பார்த்தவுடனே நம் மனதை இலகுவாக்கிவிடும் அப்படித்தான் அவளும்.
பார்த்த கணமே என்னுள் பதிந்த போதும் இந்த மனம் அவளை அனுகிய முறையும் நான் கொள்ளும் சித்தரவதைகளும் ஏராளம்.
காரணம் எதார்த்தமாக அவளின் பேச்சோடு அவளின் அங்கங்களை ரசிக்கும் சுகத்திற்கு என் மனம் அனிச்சையாய் பழகியிருந்தது.
இதை நான் உணரவே சில நாட்களாயின.
அக்கா அக்கா என்றழைத்தாலும் மனதினோரம் ஏதோ ஒரு சலனம் ஈர்ப்பு அவள் மீதிருந்தது,
அதை அடக்கி வைக்க முயன்ற போதும் சிலநேரம் என்னையும் மீறி அந்த உணர்வு எனை ஆட்கொண்டது.
வெகு நேர்த்தியாகவே அவள் ஆடையுடுத்துவாள், எப்போதும் சுடிதார் சூடுவாள், எப்போதாவது அரிதாய் சீலையணிவாள். அடர் கூந்தல் அவள் கழுத்தோரம் மறைக்க இழுத்துப் போர்த்தி வருவாள். நாள்முழுக்க ஓயாது வேலைசெய்தாலும் அவளாடை சரிந்ததாய் நினைவில்லை.
இருந்தும் மிக இயல்பாய் அவளுடனான கணங்களில்
அவள் அங்க அசைவுகளை
ரசிக்கும் பழக்கம் எனை ஆட்கொண்டது.
வேலை விடுப்பு நாட்களிலும், ஞாயிறுகளிலும் அவளைக் காண்பது அரிதாகும். அசதியென உறங்கிவிடுவாள். அல்லது எப்போதும் தோழிக்கூட்டத்தில் சிக்கிவிடுவாள். எப்போதாவது சந்தர்ப்பம் கிடைக்கும் நாங்கள் இருவரும் தனியாய் சந்திக்க.
அப்போதும் புத்தகம், ஓவியம், புதிய படம் என நீளும் உரையாடல்.
அன்றும் அப்படித்தான்
அவள் தோழிகள் வெளியூரில் ஒரு திருமணத்திற்கு செல்ல நேர்ந்தது. அவள் ப்ராஜெக்ட் ஃபைனல் ஸ்டேஜில் பிசியாகயிருந்தாள்.
நான் மாமாவை ஏர்போர்ட்டில் டிராப் செய்து விட்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்தேன்.
மழை தூறலிட்டுக் கொண்டிருந்தது.
மெல்ல தொடர்ந்த மழை வேகம் பிடித்தது. ஓரமாக ஒதுங்கி மழை நிற்கட்டுமென காத்திருந்த போது லக்ஷ்மியிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது நேரம் இரவு 10.40.
தோழிகளை வழியனுப்ப வந்தவள் வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருப்பதாக சொன்னாள்.
அங்கிருந்து வீட்டீற்கு பேருந்து என்றால் எப்படியும் ஒன்றரை மணி நேரம் மேலாகும்.
அவள் பிராஜெக்ட் பொரோபசல் மெயிலை மேனேஜர்க்கு அனுப்பச் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
சரியென்று சொல்லி வைத்த பின்பு தான் என் மனம் தன் வேலையைத் துவங்கியது. அங்கே சென்று அவளை அழைத்து வர ஆசையை தூண்டிவிட்டது. அவளோடு தனியாக பயணிக்க வேண்டுமென்பது நெடுநாள் கனவு. பல முறை அழைத்தும்
அதுவரை அவள் என் பைக்கில் ஏறியதில்லை.
நக்கல் நையாண்டி பேச எதுவுமே இல்லாத போதும் செய்துகொண்ட சேட்களென அவ்வளவு நெருக்கமாகிய போதும் என்னுடன் வராதவள்,கெஞ்சினாலும் அடம் செய்தாலும் கூட மறுத்தே நகர்வாள். அவள் தோழிகள் அடிக்கடி எங்களை சேர்த்து வைத்து கேலி செய்வது வழக்கமென்பாள். முறைப்பாள், காரணமின்றி கடிந்து கொள்வாள். ஆதலால் அதைத் தவிர்த்திருந்ததாக ஒருமுறை சொல்லியிருந்தாள்.
ஆனால் அவள் கால் கட் செய்த அடுத்த கணமே வேறு எந்த யோசனையுமின்றி மழை நனைந்தபடியே அவளிருக்கும் நிறுத்தம் விரைந்தேன்.