நீண்ட நாள் கனவு 180

நான் நிரஞ்சன்.

இசை, தமிழ், கலை, ஓவியம் என எல்லாமே மிகைப் பிடித்தமெனக்கு.
தஞ்சை, கோவை, மதுரை , ஊட்டியென பல நகர வாழ்வை பள்ளியிலும் கல்லூரியிலும் முடித்து வேலை நிமித்தமாகவும் தாய்மாமாவின் நிர்பந்தத்தினாலும் இப்போதிருப்பது சென்னை.

கவலைகளின்றி பிடித்ததைச் செய்யும் ஒரு வாழ்வு.
பூர்வ தொழிலில் அப்பா, அரசுப் பணியில் அம்மா, டாக்டர் அக்கா, இரண்டு பாட்டியென அதீதமாய் அன்பு செய்யும் அழகு குடும்பம், சொந்தங்கள் சூழ்ந்த சுற்றம், சாதி பேதேமின்றி, நிலை வேற்றுமையின்றி எந்நேரமும் சந்தோசம் ததும்பும் நட்பு வட்டாரமென அமைந்தது என் வாழ்வு.

எனக்கும் அக்கா பிரபஞ்சனாவிற்கும் ஐந்து வருட இடைவெளி, அவள் காட்டும் அன்பில் குறைவில்லையென்ற போதும் சண்டையில் குறை வைப்பது அவள் வழக்கம். எனக்கு ஒன்று என்றால் அதிகமாய் துடிப்பவள் அவள் தான்.
அவள் அப்பா அம்மாவின் செல்லம் ,அடக்கமானவள், கனிவானவள் .

ஒற்றுமைகள் பல இருந்தாலும் குணங்கள் பழக்கங்கள் எல்லாம் தூரம் எங்களிடையில்.

நான் பெரும்பாலான நாட்களை அம்மா பணிசெய்த நகரங்களில் தான் கழித்திருக்கிறேன்.

அக்கா பிறந்தது முதல் பாட்டியுடனும் அப்பாவுடனுமாக தஞ்சையைத் தாண்டியதில்லை இரண்டு வருடம் முன்பு வரை.

விடுமுறை நாட்கள், பண்டிகைகள் தவிற அதிகமாய் நாங்கள் ஒன்றாயிருந்த காலம் வெகு குறைவு.
இருந்தும் பிரபாவுக்கு நான் முதல் பிள்ளை.

நான் வளர்ந்த விதம் , எனது ரசனை எனது பிடித்தங்களில் பிரபாவிற்கும் எனக்கும் எக்கச்சக்க மாறுபாடிருந்தாலும் எப்போதுமே அவளெனக்கு நல்ல தோழியும் கூட.
என் எல்லா அனுபவமும் ரகசியங்களும் அவளுக்குத் தெரியும். அவளது ஒன்றிரண்டு ரகசியங்கள் எனக்கு தெரியும்.

அவளை நான் பிரிந்ததாய் உணர்வது கடைசி ஓராண்டாக, அவள் திருமணத்திற்குப் பின் தான்.

அம்மா, பாட்டி இருவரும் அக்காவோடு கடந்த ஐந்து மாதங்களாக கொடைக்கானலில் வசிக்க, அப்பா மாமாவுடன் தொழில் விரிவாக்கத்தில் படு பிசியாகிக் கிடக்கிறார்.

கல்லூரி முடித்து பின் நான் 4 வருடம் சென்னை,இரண்டு வருடம் கோவையென பிடித்த வாழ்வென ஒன்றை ரசித்தபடி தொடர்கிறேன்.

கவலைகளில்லை.. கடிவாளமில்லை..
எனக்கு நான் ராஜா என்ற வாழ்வு தான் ஆனாலும் ஆடம்பரங்கள் மீதான ஈர்ப்பு எனக்கு குறைவு.
அன்பே என் பிரதானம்.
உணர்வுப் பூர்வமாக வாழ்வை கழிப்பதே என் இயல்பு.

எளிமையான இயல்பான மனிதர்கள், எதார்த்தமான நிகழ்வுகளில் தான் நான் அதிகம் பயணம் செய்கிறேன்.
அவர்களின் ஒளிவுமறைவற்ற தன்மையில் என்னை நான் புகுத்தி நகர்கிறேன். இதற்கெல்லாம்
காரணம் என் பாட்டியின் வளர்ப்பென்றே சொல்லலாம்.
பாரம்பரியமான குடும்பத்தில் வளர்ந்தாலும் நான்
தனித்து செயல்பட ஆரம்பித்த பருவம் முதலே காண்பதெல்லாம் காதல், கதை, கவிதை, ஓவியம் என்பது தான் என் பார்வை.

இந்த ரசனை தொடங்கியது எப்போதென்றாலும் நினைவில்லை ஆனால் எனக்கு அதிக இன்பம், சுகம், சாந்தம் தருவது காமம் தான்..