28 வயது அழகுப் புயல் – பாகம் 36 95

கதிரின் அம்மா லட்சுமிக்கு, சந்தோஷம் தாங்க முடியவில்லை. பரபரப்பாக அவர்களுக்கு சாப்பாடு தயார் பண்ணிக்கொண்டிருந்தாள். அண்ணன் மகனும், மகளும், மருமகளும் வந்திருக்காங்க என்று எல்லாருக்கும் தம்பட்டம் அடித்தாள். மகிழ்ச்சியாக இருந்தாள்.

நிஷா வருகிறாள் என்று பூரித்துப்போயிருந்த கதிர், அவளோ, இறுகிய முகத்துடன் களையிழந்து இருப்பதை பார்த்ததும் அதிர்ந்தான். அவ்வப்போது அவள் கடமைக்கு சிரித்து வைப்பதை கவனித்தான். எல்லாவற்றுக்கும் மேலாக அவள் அவனிடம் முன்புபோல் சகஜமாக… சிரித்துப் பேசாமல் இருப்பது அவனை வேதனைப்படுத்தியது.

என்னாச்சு? என்று ராஜ்ஜிடம் கேட்டான். ஒண்ணுமில்ல… அவளுக்கு வேற ஒரு ஊருக்கு போஸ்டிங்க் வந்திருக்கு அதான்… என்று அவன் மழுப்பினான்.

தீபாவுக்கு போன் போட்டுக் கேட்டான். அவளும், ஒண்ணுமில்லையே.. என்று சாதித்துவிட்டாள். அண்ணனும் அண்ணியும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்திருக்காங்க… என்று அவள் வெட்கத்தோடு சொல்ல, அவனுக்கு விஷயம் புரிந்தது.

கதிருக்கு நெர்வஸாக இருந்தது. அம்மா இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே…… சிட்டில இல்லாத நவ நாகரீக மாப்பிள்ளைகளா? விஜயகாந்த் படத்துல எல்லாம் மாமனுங்க கிராமத்து மாப்பிள்ளைக்கு கொடுக்கமாட்டேனு அடம்பிடிப்பானுங்க, மோகன் மாமா என்னை விடமாட்டேங்குறாரே அப்படி என்ன பண்ணிட்டேன்?

மலர், கதிரை தனியாகக் கூப்பிட்டு, தன் பக்கத்தில் உட்காரவைத்துப் பேசினாள்.

சொல்லுங்கக்கா… என்றான்.

உங்களுக்கு மாப்பிள்ளை களை வந்திருச்சு… என்றாள்.

ஓட்டாதீங்கக்கா

பார்றா… வெட்கம்லாம் படுறீங்க?

என்ன வா, போன்னே சொல்லுங்கக்கா, எங்க வீடு, ஊரு பிடிச்சிருக்கா?

பிடிச்சிருக்கு கதிர். உங்களுக்கு.. ஸாரி உனக்கு தீபாவை பிடிச்சிருக்கா?

11 Comments

  1. Really awesome bro..U r such a gud writer..I’m addicted to read this story day by day..Kindly don’t stop this..Go to more than 100 parts bro..oru vela neenga itha sekkirama mudichalaum, naan itha 1stla irunthu again again read pannuven..superb…

    1. நிஷாவை சீனு உடன் சேர்த்து வைக்க வேண்டும் அப்பொழுது தான் நன்றாக இருக்கும் இல்லையன்றல் அது நிஷாவிற்கு தான் அவமானம் கதிருடன் சேர்ந்தால், நல்ல முடிவை எதிர்பார்க்கிறேன்.

  2. Looks like author will get Nisha and seenu married by changing the story line as seenu got changed. Gosh. Not right. I feel like this because it looks like kathir and Deepa marriage will finalise. A twist would be good like Kathir started loving Nisha by ignoring the fact of her affair with seenu. But that astrologer initially said there will be 2 male in her life so somehow author will get her married to seenu. Author shouldn’t finish the story that nisha and seenu marry, this way not to encourage that a person can spoil a family but get married to the same girl. It’s not right though. Let’s see

  3. ரொம்ப சந்தோஷம்… நிஷாவைப்போலவே… வாழ்த்துக்கள் கதாசிரியருக்கு…

  4. இருவரும் இயற்கையை நேசிப்பவர்கள்…. காதலில் சங்கமிக்கட்டும்… ஓர் இனிமையான காதல் கதை படைக்கட்டும்.. இல்லறம், நல்லறமாக நடக்கட்டும்… மறப்போம்… மன்னிப்போம்….

  5. காமத்தில் ஆரம்பித்த கதை, காதல்கதையாக முடியட்டும்.. கதாசிரியர் அதிலும் வல்லவர்தான்…

  6. apo seenuvum nishavum 1nu sera mattangalahh ??????

  7. சீனு கட்டற்ற பொதி காளை … காமத்தில் திளைக்கட்டும்.. காயத்திரி அழைப்பு விடுத்திருக்கிறாள்…. தனது வீட்டின் மேல்மாடியில் குடியிருக்க……. அவளோடும், அவள் நண்பிகளோடும் காமத்தில் திளைக்கட்டும்….

    நிஷா கதிரோடு காதலில் மூழ்கட்டும்..

    1. நிஷாவை சீனு உடன் சேர்த்து வைக்க வேண்டும் அப்பொழுது தான் நன்றாக இருக்கும் இல்லையன்றல் அது நிஷாவிற்கு தான் அவமானம் கதிருடன் சேர்ந்தால், நல்ல முடிவை எதிர்பார்க்கிறேன்.

Comments are closed.