சசி போடா வேலைய பாத்துட்டு 2 429

‘வந்துட்டேன் பாட்டி, அம்மாக்கு வயிறு வலியாமே எப்படி இருக்கா அம்மா?’ அக்கறையாக கேட்க

‘எல்லாம் நல்லா இருக்கா உனக்கு தங்கச்சி பாப்பா புறந்திருக்கா’ என்று செண்பகம் கூற.

‘நிஜமாவா?’ என்று ஹரிஷ் சந்தோசம் பொங்க கேட்டான்.

‘ஆமாம்டா இப்போ தான் அரை மணி நேரம் ஆச்சி, நீ ஸ்கூல் விட்டு வந்தியோ வரலையோன்னு தான் இப்போ போன் பண்ணேன்’ என்றாள். ஹரிஷுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை தனக்கு தங்கை பிறந்திருக்கிறாள் என்ற செய்தி உண்மையாகவே அவனுக்கு மகிழ்ச்சியை தந்தது. ‘அம்மா ஏங்க பாட்டி?’ என்று கேட்க… ‘அவ இன்னும் மயக்கமா இருக்காடா, பக்கத்துக்கு வீட்டு அத்தைக்கிட்ட அம்மாவுக்கு பெண் குழந்தை புறந்திருக்கு, சுக பிரசவம்னு சொல்லிடு, உங்க சித்தி வரேன்னு சொல்லியிருக்கா அவ வந்ததும் பாட்டி அவல அம்மாக்கு துணையா வச்சிட்டு ராத்திரி வந்து சமைக்குறேன், சரியா?… என்று சொல்ல சரி பாட்டி என்று சொல்லி போனை வைத்தான்.

பக்கத்துக்கு வீட்டு ஆண்டியிடம் விவரம் சொல்லிவிட்டு அன்றைய ஹோம் வொர்க் செய்துக்கொண்டிருக்கும்போது வீட்டு கதவு திறக்கும் சத்தம் கேட்க, யாரென்று வெளியே வந்து பார்த்தான். அவன் யூகித்தது போல் பாட்டி தான் கையில் ஒரு கூடையோடு உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள்.

‘என்ன பாட்டி, அம்மா எப்படி இருக்கா?, குழந்தை எப்படி இருக்கு?, அம்மா கண்ணு முளிச்சிட்டாலா?… என்று பாட்டியிடம் கேள்வியாக அடுக்கினான்.

‘ஷபா’ என்று தரையில் சிறிது உக்காந்தவள், ‘ம்ம்ம் உங்க அம்மா கண்ணு முழிச்சிட்டா, உன்னத்தான் ரொம்ப தேடுதாம், நாளைக்கு லீவ் போட்டு வர சொன்னா அங்க. குழந்தை ரொம்ப நல்லா இருக்கு, பாக்க உங்க அம்மாவை அப்படியே உரிச்சி வச்சி புறந்திருக்கா, அழகா இருக்கா. உங்க அம்மா புறக்கும்போது எப்படி இருந்தாலோ அப்படியே இருக்கா’ உற்சாகமாகவும் அதே நேரத்தில் அதிக அலைச்சலினால் கொஞ்சம் களைப்பாகவும் செண்பகம் கூற… ஹரிஷிக்கு ரொம்ப சந்தோசம்.

‘உனக்கு ராத்திரி சாப்பிட என்னடா வேணும்’ என்று கேட்டுக்கொண்டே எழுந்தாள் செண்பகம்.

‘எதுனாலும் எனக்கு ஓகே பாட்டி, ஆனா நீ என் இங்க வந்த அங்க அம்மாவுக்கு ஒத்தாசைய இருந்திருக்கலாம்ல’

5 Comments

  1. Good going keep it up . . . awaiting for the next post (part 3)

  2. 3 please ?

    1. I like iths u intars msg my email id

  3. Super semma 3 part quick IAM waiting ???

Comments are closed.