என்ன பண்றது என் காதலனச்சே!! 3 167

“மரியாதை கெட்டுருமா? உனக்கே அநியாயமா இல்லையா.. ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க”

“என்ன பண்ணிட்டு இருக்கோம்”

“ரெண்டு பேரும் கிஸ் பண்ணிட்டு இருக்கீங்க”

“இல்லையே நாங்க ஒன்னும் கிஸ் பண்ணலையே”

“ஏன்டி என்னை பார்த்தா உனக்கு லூசு மாதிரி இருக்கா? நீங்க ரெண்டு பேரும் கிஸ் பண்றதை நான் என் கண்ணால பாத்தேன்”

“ச்சீ இவ்ளோதான? நீங்க சரியான லூசுங்க.. நான் என்ன சாப்பிட்டேன் ன்னு கிஷோர் செக் பண்ணிட்டு இருந்தான்.. மலர் உங்களுக்கு பண்ண மாதிரி”

கதிர் பதில் பேச முடியாமல் திணறினான் “சௌமியா இது… இ…. இது வேண்டாம்.. சொன்னா கேளு” கெஞ்சுவது போல் கேட்டான்.

“என்னங்க வேண்டாம், மலருக்கு மட்டும் இந்த திறமை இருந்தா பத்தாது.. மலரை கட்டிக்க போற கிஷோருக்கு இந்த திறமை கண்டிப்பா இருக்கணும் ல.. அதான் நான் ட்ரெய்னிங் கொடுக்குறேன்.. இப்போ பாருங்க.. கிஷோர் நான் கடைசியா என்ன சாப்பிட்டேன் ன்னு சொல்லு”

“அண்ணி அது”

“டேய் லூசு சும்மா சொல்லு டா”

“கேரட் டேஸ்ட் வந்துச்சு”