இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 6 91

“கொஞ்சும் தடுமாறினோம், அதனால் தான் லேட் ஆகிவிட்டது. இல்லை என்றால் 5 . 30 டு 5 .45 குள் வந்து சேர்ந்திருப்போம்.”

“அப்படியா? சரி நீங்கள் களைப்பாக இருப்பீர்கள், முதலில் காப்பி? டி? அல்லது வேற எதுவும் சாப்புடுறீர்களா?”

சுமித்த அம்மா தான் முதலில் பதில் சொன்னார், ” நான் தொந்தரவு பண்ணுறேன் என்று நினைக்காதீர்கள், பிலீஸ் கொஞ்சம் சூடான காபி கிடைக்குமா?”

இப்போது வீட்டின் எஜமானியான நான் சொன்னேன்,” நோ ப்ரோப்லேம், உங்க இரண்டு பேருக்கும் அதேகாப்பி தான இல்லை வேற எதுவும்வேணும்மா?”

சுமித்த விக்ரம் தவிர வேற எது கேட்டாலும் கொடுப்பேன். “எனக்கும் காப்பி மா,” என்றார் சுமித்த அப்பா. “எனக்கு கோல்டு வாட்டர் போதும் அக்கா, இருங்க நானும் உங்களுடன் கிட்சேன் வருகிறேன்.” இப்படி கூறிய சுமித்த என்னுடன் சேர்ந்து வந்தாள். அவள் என்னைவிட இரண்டு இன்ச் உயரும், அதுவே எனக்கு காம்ப்ளெக்ஸ் கொடுத்தது. அதுவும் சாக்களித்தி என்னை அக்கா என்று கூப்பிடுறாள்.

ஹாலில் என் கணவருடன் அவள் பெற்றோர்கள் பேசுவது என் காதில் விழுந்தது.

“ரொம்ப நன்றி சார் என் மகளை இங்கே தங்குவதற்கு அனுமதித்தது. அவள் இங்கே தனியாக தங்க விடுவதில் எங்களுக்கு விருப்பும் இல்லை.”

“ஒரு பிரச்னையும் இல்லை சார், அது எங்க பிளாஷார்.”

இருக்கும் இருக்கும், சுமித்த இங்கே இருந்தாள் உங்களுக்கு பிளாஷார் தான்.

“அப்புறம் இன்னொன்னு சார், பேசியபடி சுமித்த இங்கே தாங்கும் சிலவு பணம் மாசம் மாசம் கொடுத்திடுவோம்.”

இப்போது நாங்கள் கிட்சேன் உள்ளே செல்ல அவர்கள் பேச்சு என் காதில் விழுவது மறைந்தது.

“அக்கா உங்களை அன்று கல்யாணத்தில் பார்த்த போதே எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி. அது மட்டும் இல்லை பசங்க நிறைய பேர் உங்களை பார்த்து ஜொள் விட்டார்கள் அக்கா. நீங்க ரொம்ப அழகு.”

ரொம்ப ஐஸ் வைக்கிறாளே, காரணம் இல்லாமல் இருக்காதே. “அம்மாடி இப்படி ஐஸ் வெச்சாள் எனக்கு சளி பிடிச்சிடும்.”

“இல்ல அக்கா உண்மையை தான் சொல்லுறேன், எத்தனை பசங்க ஜொள் விட்டாங்க என்று எனக்கு தான் தெரியும்.”

“சும்மா சொல்லாதே, உன்னை தான் பசங்க சுற்றி வருவதை பார்த்தேன் அனால் உனக்கு அங்கே ஒருவனை தான் பிடிச்சது போல இருந்ததே? சும்மா நூல் விட்டு பார்த்தேன்.

“ஹி ஹி கவனிச்சிட்டீங்களா, முதலில் அவன் என்னை கண்டுக்கில அனால் அப்புறம் அவனே வந்து பேசினான்.”

“உனக்கு அவனை பிடிக்குமா? அவன் பெயர் என்ன மரசந்துட்டேன், ” தெரியாதது போல் நடித்தேன்.

“ஆமாம் அக்கா ரொம்ப பிடிக்கும்,” இதை கேட்டு என் கால்கள் ஐஸ் வைத்ததுபோல் ஜில் என்று ஆனது, சிறு நடுக்கும் வந்தது, “இப்போதும் கண்டக்டில் இருக்கோம், எங்கள் உறவு சீரியஸ் ஆகிவிடும் என்று நினைக்கிறேன்.”

அடி பாவி இதை என் கிட்டையே சொல்லுறாளே. “இப்படி என்னிடம் வெளிப்படையாக சொல்லுறிய உனக்கு பயம் இல்லையா?”

“எதற்கு பயம்? எனக்கு அவனை பிடிக்கும் அவனுக்கும் என்னை பிடித்தால் நம்ம உறவு அடுத்த கட்டத்துக்கு போகும்.”

“நான் இதை உன் அப்பா அம்மா கிட்ட போட்டு கொடுத்திடுவேன் என்று பயம் உனக்கு இல்லையா?

அவள் என்னை பார்த்து சிரித்தாள், “நீங்க அப்படி செய்தாலும் கவலை இல்லை. என் விருப்பத்துக்கு மாறாக என் பெரெண்ட்ஸ் எதுவும் செய்ய மாட்டாங்க.”

ரொம்ப தன்னம்பிக்கை தான் இவளுக்கு என்று போட்டு இருந்த காபியை எடுத்து கொண்டு ஹால் சென்றேன். சுமித்த என்னை பின் தொடர்ந்து வந்தாள்.

“தேங்க்ஸ் மா உன் காப்பி சூப்பராக இருக்கு,” என்று சுமித்த அப்பா சொன்னார்.

என் கணவர், “சுமித்த வேலை செய்ய துவங்கிவிட்டாள், அடுத்தது மாப்பிள்ளை பார்க்க வேண்டியது தானே.”

“அது அவள் தான் சொல்லுனும், நாங்க பார்க்கவ இல்லை அவளே பார்த்துகிறாளா.” இது சுமித்த அம்மா.

“என்னங்க சொல்லுறீங்க,” இதை கேட்க என் கணவருக்கு வியப்பாக இருந்தது.

சுமித்த அப்பா சொன்னார். “நானும் என் மனைவியும் காதல் திருமணம் செய்தோம், அதுவும் இருவர் குடபாத்தாரின் எதிர்போட. அதே சுதந்திரத்தை என் மகளுக்கும் குடுக்க விரும்புறோம். அவள் புத்திசாலி பெண் சரியான முடிவை தான் எடுப்பாள். இதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. இது நான் கல்யாணம் செய்திகிட்ட காலம் போல இல்லை.”

இப்படியும் ஒரு அப்பாவா என்று இப்போது எனக்கும் வியப்பாக இருந்தது.

என் கணவர் சுமித்தவை பார்த்து, “என்ன சுமித்த உன் பெற்றோர் சொல்வதை கேட்ட இல்ல, நீ யாரும் செலெக்ட் பண்ணிட்டியா?”

சுமித்த அம்மா குறுக்கிட்டார், “அவளுக்கு ஒரு பையன் மேல ஒரு நல்ல அபிப்ராயம் இருக்கு இப்போது தான் பழகுறார்கள். எப்படி போகுது என்று பார்ப்போம். அவன் நல்ல வேளையில் இருக்கிறானாம், நல்ல குடுப்பதில் இருந்து வந்த பையன் என்று இவள் சொல்லுறாள்.”

“யார் சுமித்த அது? எங்க நீ அவரை சந்திச்ச?”

“என் தோழி கல்யாணத்தில், அதான் உங்க உறவு கார பெண் கல்யாணத்தில்.”

என் கணவர் சந்தேகத்தோடு கேட்டார், “யார் அது, அவர் பெயர் என்ன?”

“விக்ரம்”.

2 Comments

  1. Bhavani story is going good super

  2. Updated story please

Comments are closed.