இந்த பொழுது விடிய கூடாது – Part 3 109

“என்னடா…திரும்ப திரும்ப உனக்குள்ளே சிரிச்சிகிட்டு இருக்கிறே…” அம்மா கேட்டதும், அப்பா உடனே இடைமறித்து,

“எதோ அவனாவது இந்த வீட்டில சிரிச்சிகிட்டு, சந்தோஷமாக இருக்கிறானே…அத விட்டுகிட்டு…”

அம்மா முறைப்பதை பார்த்து , அப்பா என்னிடம்,

“என்னடா…ஃபிரண்ட் வீட்டு ஃபங்க்ஷன் எப்படி முடிஞ்சது?…உன் மாலினி சித்தி வேற ஃபோன் மேல ஃபோன்…சித்தப்பா ஊரில இல்லையாம்…அவ பொண்ணுக்கு ஸ்கூல் யூனிஃபார்ம் எடுக்கணும்…அம்மாவை வரமுடியுமான்னு கேட்டாள்…நீ வந்ததும் அனுப்புறேன்னு சொல்லியிருக்கிறேன்…”

“எதுக்குப்பா…அவ சித்தப்பாவை பத்தி புலம்புவா…அத கேக்குறதுக்கு பதிலா ஏதாவது ஒரு அழுகை சீரியலை பார்த்து தொலைக்கலாம்…”

அம்மாவுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்…”ஏன்டா…அவளைப்பத்தி இப்படி பேசுற…பொம்பிளைங்களை கஷ்டப்படுத்துவதே இந்த ஆம்பிளைங்களுக்கு வழக்கமா போச்சு…” என்று அப்பாவை பார்க்கவும்,

“சரி சரி அதுக்காக நீங்க சண்டை போட்டுக்க வேண்டாம்…போய் என்னென்னு கேக்குறேன்”…குளிப்பதற்க்கு டவல் எடுத்துகொண்டு,பாத்ரூம் போகும்போது ,அம்மாவின் குரல் கேட்டது…

“ரெண்டு பேருக்குள்ளே என்ன பிரச்சனையின்னு அப்படியே கேளுடா…”

“நீங்க கெட்டுமே சொல்லாதவ நான் கேட்டா சொல்லப்போறா…”

“இல்லடா…ஒருவேளை உன் ஏஜ் குருப்பில இருக்கிறதால சொல்லலாமில்ல…”

குளித்து முடித்ததும்,உடலில் எதோ ஒரு புத்துணர்ச்சி வந்தது போல இருந்தது…டைனிங்க் டேபிளுக்கு வந்து அம்மா சமைத்து வைத்திருந்த சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தேன்…கையில் அன்றைய பேப்பரோடு வந்த அப்பா,

“ரகு…சொல்ல மறந்துட்டேன்…நேத்து ரெண்டு தடவை உனக்கு போன் வந்தது…உன்னோட செல் கிடைக்கலையின்னு,வீட்டு நம்பருக்கு ஃபோன் வந்தது…”

1 Comment

Comments are closed.