வாசமான ஜாதிமல்லி – பாகம் 11 61

ஒரு மாதத்திற்குப் பிறகும் மீராவின் உடல்நிலைக்கு எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. சரவணன் மீண்டும் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அதே மருத்துவ நிபுணரைப் பார்த்தான். நிபுணர் மீண்டும் அனைத்து சோதனைகளையும் சில கூடுதல் சோதனைகளையும் செய்தார். மருத்துவர் மீராவிடம் ஒரு அறையில் படுக்கையில் ஓய்வெடுக்கச் சொல்லி, சரவணனை ஒரு புறம் அழைத்தார்.

“டாக்டர், சொல்லுங்கள், அவளுக்கு என்ன பிரச்சனை?”

“மிஸ்டர் சரவணன், நான் எல்லா சோதனைகளையும் செய்து பார்த்துவிட்டேன், ஆனால் எங்களால் எந்த ப்ரப்ளேம் கண்டுபிடிக்க முடியவில்லை.”

டாக்டர் ஒரு கணம் மெளனமாக இருந்தார் பிறகு, ”மன்னிக்கவும் சார், அவங்களுக்கு ஏதேனும் உடல் ரீதியான துன்புறுத்தல் ஏற்பட்டிருக்கிறதா என்று கூட நான் பரிசோதித்தேன் செய்தேன். பழைய காயங்கள் கூட எதுவும் இல்லை. ”

“என்ன டாக்டர் .. நான் ஒரு மோசமான மனைவி அடிப்பவன் என்று நினைச்சீங்களா??”

“கோப படாதீங்க சார், நாங்க எல்லா விதத்திலும் சிந்தித்து பார்க்கணும். நான் இப்போது சொல்லுறத கேட்டு மேலும் கோக படாதீங்க. உங்க மனைவிடம் தனியாக கேட்டேன் அவுங்கள நீங்க மனரீதியாக கொடுமை படுத்துறீங்களா என்று.”

சரவணன் அவன் மனைவிடம் எவ்வாறு கேள்வி கேட்டார் என்று வருத்தப்படுவதைப் பார்த்த டாக்டர் விரைவாக தொடர்ந்தார், “உங்கள் மனைவி எப்போதும் மெளனமாக இருப்பதால் நான் அப்படி நினைக்க வேண்டியிருந்தது. அவுங்க எப்போதும் ஒரு வார்த்தையும் பேசுவதில்லை, ஆனால் நான் அவங்களிடம் இப்படி கேட்டபோது முதல் முறையாக அவுங்களிடம் இருந்து ஒருவித உணர்ச்சியைக் கண்டேன். ”

1 Comment

  1. Wish them all the best and retrieve their life with happiness……

Comments are closed.