லைக்கு பின்னால் இருக்கும் ஓவியம் 1 76

குளியல் அறையில் இருந்து வெளியே வரும்போது துவட்டிய துண்டு மட்டும் இடுப்பில் நிற்க கண்ணாடியில் அவன் உடலை பார்த்தான். பெரிதாக அவன் உடலுக்கு கவனம் செலுத்தாவிடினும், சிறு வயதில் இருந்து கால்பந்து விளையாடி வந்தது அவன் உடனுக்கு இயற்கையான வலிமையும் கவர்ச்சியையும் கொடுத்திருந்தது. கண்ணாடியின் அருகில் இருந்த கடிகாரம் மணி 6 என்று காட்ட ராஜேஷிடம் கூறிவிட்டு கிளம்பலாம் என்று நினைத்து செல்போனில் அழைத்தான்.

“ஹே மச்சி கிளம்பிட்டியா”

“ஹாய் அசோக்” –

அர்ச்சனாவின் குரல் கேட்டு திகைத்தான்

“ஓ அர்ச்சனா நீங்களா சாரி ராஜேஷ்னு நினைச்சு பேசிட்டேன்.”

“ஏன் எங்கிட்ட பேச மாட்டீங்கள உங்க நண்பர்கிட்டதான் பேசுவீங்களா”

“அப்படி இல்லை ராஜேஷ்னு நினைச்சு மச்சினு சொல்லிட்டேன்.”

“அப்போ என்னை நினைச்சு மச்சினினு சொல்லுவீங்களா ” கூறி விட்டு நாக்கை கடித்துகொண்டாள்.

“ஹ்ம்ம் சொல்ல ஆசைதான்… ராஜேஷ் கிளம்பியாச்சா அவன்கிட்டே போன் கொடுங்களேன்.”

“அவர் குளிக்க போயிருக்காரு இப்போ வந்துடுவாரு.. நீங்க கிளம்பி வாங்க சரியா இருக்கும்.”

தான் இன்னும் மேலாடை கூட இல்லாததை நினைத்து.. அவர் இப்போது உடனே வந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கும் பொழுது உடல் புல்லரித்தது

“சரி அர்ச்சனா நான் இப்போ கிளம்பி வரேன்.. ராஜேஷை சீக்கிரம் ரெடியா இருக்க சொல்லுங்க”

“ஹ்ம்ம் சரி சொல்றேன் நானும் ரெடியாதான் இருக்கேன். நீங்க வந்ததும் கிளம்பலாம்..”

4 Comments

  1. Super next part

  2. Three there no any stories on this site may I know reasons continue the story plzzz

  3. Three day there no any stories on this site may I know reasons continue the story plzzz

Comments are closed.