கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 38 4

“சுகன்யா… கடைசியா ஒரு நிமிஷம்… லெட் மி ஸ்பீக்…ப்ளீஸ்..” சம்பத் புன்னகைத்தான்.

“ம்ம்ம்.. சொல்லுங்க அத்தான்… நீங்க இப்ப பேசறதை கேக்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு…”

“காரணமேயில்லாமல் இந்த உலகத்துல, ரெண்டு பேர் ஒருத்தர் ஒருத்தரை சந்திக்கறது இல்லை. நாம ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சதுல நிச்சயமா ஒரு அர்த்தம் இருக்கு”

“சுகன்யா, உன் கிட்ட என் காதலை சொல்லும் போதே, அதுக்கு உன்னுடைய பதில் என்னவாயிருக்கும்ன்னு எனக்கு நல்லாத் தெரியும்”

“என்னோட பதில் உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி இருக்காதுன்னு தெரிஞ்சும் என் கிட்ட உன் காதலை சொன்னீங்க; என்னோட மறுப்பை என் வாயால சொல்ல வைச்சு, அதை கேக்கறதுல உங்களுக்கு என்ன சந்தோஷம், சம்பத்?”

“என்னோட காதலை வலுப்படுத்திக்கத்தான்… சுகன்யா?”

“எனக்குப் புரியலை சம்பத்…”

“சுகன்யா… நீ கடல்… நான் ஒரு நதி… நதியின் இயற்கை நியதி கடலில் சென்று சேருவது. இன்னைக்கு இல்லன்னாலும், நாளை, நாளை மறுநாள், அடுத்த ஜென்மத்தில், அதுக்கும் அடுத்த ஜென்மத்தில்ன்னு, உன்னை நான் தேடிக்கிட்டு வந்துடுவேன்.”

“ம்ம்ம்…”

“என் பேரு அப்ப
“சம்பத்’ ஆக இருக்காது… உன் பேரும் சுகன்யான்னு இல்லாம சுகந்தின்னு இருக்கலாம்.. வசந்தின்னு இருக்கலாம்… நாமமோ, ரூபமோ முக்கியமில்லை. மனம் தான் முக்கியம். நான் யார்? என்னுடைய இந்த உடலா? நீ யார்? உன்னுடைய இந்த வசீகரமான உடலா? இந்த உடல்கள் எத்தனை எத்தனை பெயர்களை இதற்கு முன் சுமந்து இருக்கின்றன. இன்னும் எத்தனை எத்தனை பெயர்களை சுமக்கப் போகின்றன? ஆனா நான் உன்னையும், நீ என்னையும் நிச்சயமாக அடையாளம் கண்டு கொள்வோம்… நீயும் நானும் நிச்சயமாக ஒன்று சேருவோம்… எனக்கு இதுல எந்த சந்தேகமும் இல்லை.. சுகா..”

“அத்தான்… நீங்க எவ்வளவு புத்திசாலித்தனமா வாழ்க்கையின் உண்மைகளைத் தெளிவா பேசறீங்க… இது வரைக்கும் சுயக்கட்டுப்பாடே இல்லாத ஒரு வாழ்க்கையை நீங்களா வாழ்ந்து இருக்கீங்க? என்னால நம்பவே முடியலே… சம்பத்!!” சுகன்யா ஒருவித பிரமிப்புடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“சுகன்யா… திரும்பவும் தப்பான எந்த ஒரு காரியத்தையும் செய்து உன் காதலை அடைய நான் முயற்சி செய்ய மாட்டேன்…” புன்னகைத்தான் சம்பத்.

“சரி… அதுக்காக இந்த ஜென்மத்துல நீங்க எந்த பெண்ணையும் தொடமாட்டேன்… யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கறது எந்த விதத்துல நியாயம்..?” சுகன்யா அவன் பேசுவதில் குறுக்கிட்டாள். அவள் குரல் இலேசாக தழுதழுத்தது.

“சுகன்யா, சில சமயங்கள்ல நாம மாம்பழத்தை திண்ணுட்டு, கொட்டையை நல்லா சப்பிட்டு, வீட்டுக்கு பின்னாடி குப்பையிலத் தூக்கி எறியறோம். அதுக்கப்புறம் அதை மறந்து போயிடறோம். கொஞ்ச காலம் கழிச்சி, பேய்ஞ்ச மழையில, காய்ஞ்ச வெயில்லே, அந்தக் கொட்டையிலேருந்து சின்னதா துளிர்கள் விட்டு, குப்பை மேட்டுல ஒரு மாஞ்செடி முளைச்சு, காத்துல ஆடும்…”

“அந்த செடியோட தாமிர வண்ண இலைகள், இளம் வெயில்லே நனைஞ்சு தக தகன்னு மின்னும். பாக்கறவன் மனசு அப்டியே குளுந்துப் போயுடும். பாக்கறவன் பிரமிச்சுப் போய் நிப்பான். அந்த மகிழ்ச்சியை அவன் ஒருத்தனாலத்தான் அனுபவிக்க முடியும்… பேச்சால சொல்ல முடியாது… எழுத்துல எழுத முடியாது… நான் என் காதலோட அழகை அப்படித்தான் பாத்து ரசிக்க விரும்பறேன்..”

ஒரு மணி நேரத்துக்கும் மேலே உன் கூட நான் தனியா இருந்தேன். உன் கூட இருந்த இந்த தருணங்கள் என் மனசுக்குள், எப்பவும், எனக்கு, சுகமா இனிச்சுக்கிட்டே இருக்கும். சம்பத் பேசுவதை கேட்ட சுகன்யாவின் முகத்திலிருந்த பிரமிப்பு மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போனது.

***

“தாத்தா… உங்கப் பேத்தியை பத்திரமா வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்துட்டேன்…” வீட்டின் கைப்பிடி சுவரைப் பிடித்துக்கொண்டு சுகன்யாவுக்காக தெருவிலேயே காத்திருந்த சிவதாணுவிடம் சிரித்துக்கொண்டே சொன்னான், சம்பத்.

வியப்பிலும், பெருமிதத்திலும் மூழ்கிப் போய் சிலையாக வீட்டு வாசலில் நின்றாள், சுகன்யா. அவன் பேச்சு அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

“சிவ… சிவா…!! நான் சொன்னதை சீரியஸா எடுத்திக்கிட்டியாடா? நல்லப் புள்ளைடா நீ…. டேய்… சம்பத்து… நீ நல்லசிவத்துக்கு பொறந்த புள்ளைடா… நல்லசிவத்தை எனக்கு நல்லாத் தெரியும்டா…” சிவதாணு வெள்ளையாக சிரித்தார்.

2 Comments

Add a Comment
  1. அவ்வளவுதானா, பத்மா ராகவன் லாம் யாருங்க, சுகன்யா, தமிழ்செல்வன் கல்யாணம் என்னாச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *